≼≽≼≽≼≽≼≽≼≽≼≽≼≽≼≽≼≽≼≽≼≽≼≽≼≽≼≽≼≽≼≽
இதுவரை யாரும் முறியடிக்க முடியாத சாதனை செய்த பெருந்தகை
≼≽≼≽≼≽≼≽≼≽≼≽≼≽≼≽≼≽≼≽≼≽≼≽≼≽≼≽≼≽≼≽
நமதூரில் திருமணம் என்றால் முதலில் நினைவுக்கு வருவது ஹாஜி ஹபீப் நினைவு திருமணக்கூடம் தான்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை அந்த மண்டபத்தில் யாரும் முறியடிக்க முடியாத சாதனையை செய்து மறைந்த.
ஒரு பெருந்தகையை பற்றி இன்று பார்ப்போம்.
பொதுவாக..
ஒரு திருமணத்தை நடத்தி வைக்கும் ஆலீம் அவர்கள் தன் வாழ்நாளில் அதிகபட்சம் சில நூறு திருமணங்களைத்தான் நடத்தி வைத்திருப்பார்..
ஆனால்..
தெற்கு பள்ளிக்கு சொந்தமான ஹாஜி ஹபீப் நினைவு திருமணக்கூடத்தில் சுமார் 50 வருடங்களாக தொடர்ந்து பல ஆயிரம் திருமணங்கள் நடைபெற்று வருவதை நாம் அறிவோம்...
பள்ளப்பட்டியில் வாழ்ந்த உலமாக்களில் மக்களால் மதிக்கப்பட்டு கண்ணியத்துடன்.
வடக்கு பள்ளியில் 14 ஆண்டுகளும் மேற்கு பள்ளியில் 38 ஆண்டுகளும் பணி புரிந்து.
தன் 6 மகன்களையும் ஆலீமாக்கிய மர்ஹும் சூலப்புரம் ஹமீது ஹஜரத் அவர்களின்
5 வது மகனாக பிறந்த மௌலானா மௌலவி ஹபீபுல்லா பாகவி கிப்லா
ஹஜரத் அவர்கள்.
வேலூர் பாக்கியாத்தில் படித்து ஆலீம் பட்டம் பெற்று சில காலம் ஜவுளிக்கடைகளில் பணி புரிந்தார்.
இருப்பினும் மார்க்கம் கற்ற நாம் மார்க்க பணி செய்வதுதான் சிறந்தது என்று உலக ஆதாயத்தை துறந்து மறுமை ஆதாயத்தை தேடி தெற்கு பள்ளியில் 1982 ல் இமாமத் பணியை ஏற்று சுமார் 37ஆண்டுகாலம் இமாமத் பணி புரிந்தார்.
இவர்கள் தெற்கு பள்ளியில் பணி புரிந்த காலம் முதல் இறுதி மூச்சு அடங்கும் வரை தெற்கு பள்ளியில் இமாமாக பணி புரிந்தவர்.
தெற்கு பள்ளியில் இவர் பணி புரிந்த சமயத்தில் தெற்கு பள்ளிக்கு சொந்தமான ஹபீப் ஷாதி மஹாலில் நடைபெறும் அனைத்து திருமணங்களையும் இவர் தலைமையில் நடைபெற்றது.
ஒரே நேரத்தில் பல திருமணங்களை தனி ஒருவராக இருந்து நடத்தியவர்.
எல்லா மாப்பிள்ளைகளும் சொல்லுங்க.....
அஷ்ஷஹது.அன்லாயிலாஹ.
என்று திருமண மேடைகளில் முழங்கிய அந்த கம்பீரக்குரலுக்கு சொந்தக்காரர்.
மண்டபத்தில் இவர் குரல் ஒலிக்க ஆரம்பித்தால் மண்பத்தில் இருந்த சலசலப்புகள் அடங்கி அனைவர்களும் அமைதியாகி இவர் குரலின் பக்கம் தன் செவிகளை திருப்பிவிடுவார்கள்.
அந்த கம்பீரகுரல் மண்டபத்தில் எதிரொலித்து திருமண நிகழ்வுகள் ஆரம்பிக்கும்.
நமதூரில் வாரத்திற்கு குறைந்தது 4 திருமணமாவது நடக்கும் அதை கணக்கு போட்டால் 37 வருடத்திற்கு 7100 திருமணங்கள் என்று கணக்கு வருகிறது.
இருப்பினும் ஒரே நேரத்தில் 20 /30 திருமணங்கள் கூட நடைபெற்றுள்ளது
இவைகள் அனைத்தையும் கணக்கிட்டு பார்த்தால் சுமார் 25 ஆயிரம் வருகிறது..
பள்ளப்பட்டி மக்களில் இந்த 37 வருடங்களில் சுமார் 80 சதவீத பேர்களுக்கு இவர் திருமணம் முடித்துவைத்துள்ளார்.
அதாவது 1990 முதல் 2018 வரை தொடர்ந்து திருமணங்களை நடத்தினார்
இந்த சாதனை வேறு யாரும் செய்து இருக்க மாட்டார்கள் என்றே என்ன தோன்றுகிறது.
இதில் ஒருவருக்கு திருமணம் செய்து வைத்திருப்பார் சில ஆண்டுகளுக்கு பிறகு அவரது மகனுக்கும் இவரே திருமணம் செய்து வைப்பார்.
அதே போல் குழந்தைகளுக்கு பேர்வைப்பதிலும் சாதனை படைத்துள்ளார்..
இதில் ஆச்சரியம் என்ன வென்றால்.
அந்த மணமகன் பிறந்த போது இவரே அந்த மணமகனுக்கு பெயர் வைத்து இருப்பார்.
இவரே அந்த மணமகனுக்கும் திருமணமும் முடித்து வைப்பார்.
இவர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கும் இவரே பெயர் வைப்பார்..
இந்த ஒற்றுமை வேறு யாருக்கும் கிடைத்து இருக்காது என்றே தோன்றுகிறது.
மேலும் மதரஸா நடத்தி பல மாணவர்களுக்கு மார்க்கத்தை போதித்துவந்தவர்..
குழந்தைகளுக்கு மதரஸா எடுத்து அழகிய குரலாற்றலை புகுத்தியவர் சிறிய சூராக்களை கற்று கொள்ள ஆர்வமூட்டியவர்கள் அனைவர்களிடத்திலும் அன்புடன் பழககூடியவர்.
1997ல் ஹபீப் நகரில் ரவ்லத்துன் ஹமீதியா என்ற பெயரில் மதரஸா ஆரம்பித்தார் அதில் சுமார் 120 பிள்ளைகள் ஓதினார்கள்
அன்று ஆரம்பித்த அந்த மதரஸாதான் அவர்களின் மகன்கள் மூலமாக இன்று நிஸ்வான் மதரஸாவாக தொடர்கிறார்கள்
மதரஸ்ஸத்துல் நூரியா என்ற பெயரிலும்
தெற்கு தெரு பூங்கா எதிரே மக்தப் மதரஸா நடத்தி வந்தார் அதை கூறைகொட்டகை மதரஸா என்று சொல்வார்கள்.
இதைத் தவிர மேலும் ஒரு சிறப்பு இவர்களிடம் இருந்ததை இன்றைய தலைமுறையினர் அறிய மாட்டார்கள்.
1980 முதல் டிஜிட்டல் காலம் வரை உள்ள கால கட்டத்தில் அழகிய எழுத்துக்கு சொந்தக்காரர்.
இவர் ஒரு அழகிய முறையில் எழுதும் பெயிண்டர் ஆவார்.
இவர் எழுதிய பேனர்களில் பார்பவர்களை ஈர்க்கும் தன்மை மிளிரும்.
இன்றைய டிஜிடல் பேனர் காலம் முன்பு வரை.
ஒரு திருமணம் நடைபெற
மண வீட்டார்கள் சார்பாக
திருமண வீட்டார்கள் பெயர்களை எழுதி.
அன்புடன் அழைக்கிறோம்
என்று வெள்ளை துணியில் அழகிய வடிவத்தில் பல வண்ண பெயிண்ட்டினால்
கலைவண்ணம் மிளிர எழுத பட்ட பேனர்களை திருமண வீட்டு பந்தல் முகப்பில் மாட்டுவார்கள்.
(இன்று டிஜிட்டல் பேனர்களை மாட்டுகிறார்கள்)
அழகிய முறையில் பல வண்ணங்களில் அச்சடித்தது போல் பேனர்களில் எழுதும் ஆற்றலை பெற்றவர்.
அந்த துணி பேனர்களை அழகியமுறையில் வடிவமைத்து கட்டுவதற்கு வசதியாக இருபக்கமும் குச்சிகளை வைத்து தைத்துத்தருவார்.
இது மக்களுக்கு பிடித்த காரணத்தினால் தொடர்ந்து அவரிடமே பேனர் எழுத கொடுப்பார்கள்.
தன் ஓய்வு நேரத்தில் இந்த பணி செய்து வந்தார்கள்.
தனது உழைப்பிலேயே ஊதியம் பெற்று நிறைவாகவாழ எண்ணி இதற்காக ஒரு தொகையையும் பெற்று வந்தார்கள்.
அன்றைய கால கட்டத்தில் ஊரில் எத்தனை திருமணங்கள் நடந்தாலும்.
அனைத்து வீட்டு பந்தல்களிலும் இவர் எழுதிய பேனர்களே அலங்கரிக்கும்.
இவர் பேனர் எழுதும் போது பார்த்தால் ஒரு ரசனையுடன் ரசித்து எழுதுவார்.
இவர் எழுதிய பேனர்களை படித்து விட்டுத்தான் மணப்பந்தலில் நுழைய வேண்டும்.
பார்க்க பளிச்சென்று இருக்கும் இவர்களின் பேனர்கள் டிஜிட்டல் காலம் வரை நீடித்தது.
இந்த பேனர் எழுதும் பழக்கத்தை நமதூருக்கு முதன் முதலில் அறிமுகப்படுத்தியவரும் இவர்தான்.
இவர் அறிமுகப்படுத்திய பணி
டிஜிடல் பேனர் வடிவில்
இன்று வரை தொடர்கிறது.
பழைய திருமண ஆல்பங்களை புரட்டி பார்த்தால் இவர் எழுதிய கவர்ச்சி மிகுந்த பேனர்களை இன்றும் பார்க்கலாம்.
இதைத்தவிர அன்றைய தினத்தில் எத்தனை திருமணங்கள் நடைபெறுகிறது என்பதை ஒரு போர்டில் எழுதி கடைவீதியில் வைக்கும் பழக்கத்தை இவர்தான் முதன் முதலில் கொண்டுவந்தார்
பல கலர் சாக்பீஸ்களில்
மணமகன் /மணமகள் பெயர்களைஅழகிய முறையில் எழுதியும் அந்த போர்டுகளில் பல வண்ண மலர்களை வரைந்தும் கடை வீதியில் வைப்பார் பார்பதற்கு அற்புதமாக இருக்கும் அந்த பழக்கம் இன்றுவரை தொடர்கிறது.
2010 ல் ஒரு தடவை மழை தொழுகை நடத்தி கண்ணீர் மல்க துவா கேட்டார் அன்றைய மதியமே மழை பெய்தது.
அதை தொடர்ந்து 2015 அல்லது 2016 ல் தற்சமயம் உள்ள புது ஈத்ஹா மைதானத்தில் மழை தொழுகை நடத்தினார் அன்று இரவே மழை பெய்து இரண்டு நாட்கள் வரை தொடர்ந்தது.
இவ்வளவு பெருமைக்கு சொந்தக்காரர்.
தனது 60 ம் வயதில் 20:10:2018 சபர் பிறை 16 வியாழக்கிழமை அதிகாலை தகஜத் நேரத்தில் இறைவன் அழைப்பை ஏற்றார்.
இன்னாலில்லாஹி....
அன்னார் அவர்களின் கபரை இறைவன் சுவர்க்கத்து பூஞ்சோலையாக ஆக்குவானாக எந்த கேள்வி க ணக்கும் இல்லாமல் சுவர்க்கம் புக வைப்பானாக ஆமீன். ஆமீன். யாரப்பல் ஆலமீன்.
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
ஆசிரியர்:-
அன்வர் பாஷா அன்வாரி
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱