━━━━━━━━━━━━━━━━━━━━
R. K.ஹஜரத் அவர்கள்
━━━━━━━━━━━━━━━━━━━━
தென்னாடெங்கும் R.K.ஹஜரத் என்று அன்போடு அழைக்கப்படும் இவர்களின் பெயர் மௌலானா அல்ஹாஃபில் R.K.அப்துல் காதிர் பாகவி [ R.K. ஹஜரத் ]
ஆகும்.
15:05:1938 பிறந்து பள்ளப்பட்டி மக்தூமியா அரபிக்கலூரி மற்றும் வேலூர் பாக்கியாத்து ஸாலிஹாத்தில் கல்வி கற்று ஹாஃபில் ஆலீம் பட்டம் பெற்றவர்.
இவர்கள் சென்னை பாய்கடை பள்ளிவாசலில் இமாமத் பணி செய்தவர்
பள்ளப்பட்டி சின்னப்பள்ளி. சேலம் சென்னை. மற்றும் மலேசியாவில் தன் இனிமையான குரலில் தராஃவீஹ் தொழ வைத்த பெருமைக்குறியவர்.
இவர்கள் அல்குர்ஆனின் தர்ஜுமா புகாரி ஷரீப் களுக்கு விளக்க உரை எழுதியும் பல ஆன்மீக புத்தகங்களும் எழுதி உள்ளார்.
அகில இந்திய முஸ்லீம் லீக் கட்சியில் இனைந்து மர்ஹும் அ.க. அப்துல் சமது அவர்களுக்கு சிராஜுல் மில்லத் மற்றும் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மைதீன் ஷாஹிபு அவர்களுக்கு முனீருல் மில்லத் பட்டம் கிடைக்க முக்கிய பங்கு வகித்தவர்
அன்னார் அவர்கள் தனது 72 வது வயதில் 20:07:2010 இறைவன் அழைப்பை ஏற்றவர்
அவர் மறைந்தாலும் அவர் தொகுத்த குர்ஆன் தர்ஜுமா புகாரி ஷரீப் விளக்கவுரை இன்றும் மக்கள் நினைவில் நீங்கா இடம் பெற்றுள்ளது.
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
ஆசிரியர்:-
அன்வர் பாஷா அன் வாரி
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱