⌬⌬⌬⌬⌬⌬⌬⌬⌬⌬⌬⌬⌬⌬⌬⌬⌬⌬
மஸ்ஜிதுன் நூர்
[ பஸ் நிலைய பள்ளி ]
⌬⌬⌬⌬⌬⌬⌬⌬⌬⌬⌬⌬⌬⌬⌬⌬⌬⌬
பள்ளப்பட்டி பேருந்து நிலையத்தில். அமைந்திருக்கும் இந்த பள்ளி முஸ்லீம் பயணிகள் உரிய நேரங்களில் தொழுகையை நிறைவேற்றிக்கொள்ள வசதியாக அமைந்துள்ளது.
முன்பு வழிபோக்கர்கள் தொழுவதற்க்காக பள்ளப்பட்டி ஆத்தூர் ஹாஜி அப்துல் சலாம் அவர்களால் ஒரு சிறிய
ஓட்டுவில்லை அறையாக கட்டப்பட்டு பின்னர் அது கடத்தூர் எம்.(காக்காச்சி)
அப்துல் மஜீது அவர்களின் பெரும் முயற்சியால் நகர மக்களின் பேருதவிகளை கொண்டு ஓர் அழகிய அமைப்பில் புதியதொரு பள்ளியை
நிர்மானிக்கப்பட்டு மஸ்ஜிதுன் நூர் என்றுபெயரிடப்பட்டு சேலம் மஜாஹிருல் உலூம் அரபிகல்லூரியின் நிறுவனரான மௌலானா ஷஃபீக்கான் ஹஜரத் அவர்களால் 1974ல் திறப்புவிழா செய்யப்பட்டது.
பின்னர் அதில் மதரஸா நடத்துவதாற்காகவும் இடத்தை கட்டி அல் மதரஸத்துல் நூரிய்யா
ஹிப்ளு கிரா அத் மதரஸா என்று பெயர் சூட்டி வருடாவருடம் பத்து மாணவர்கள் குர்ஆன் ஷரீப் மனனம்செய்கிறார்கள்.
இது வரை பல மாணவர்களுக்கு ஹாஃபீஸ் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் பள்ளியை சீரமைப்பு செய்து மதினா முனவ்வராவில் உள்ள கும்பா அமைப்பில் அதே தோற்றத்துடன் எடுத்து கட்டி புது பொழிவுடன் காட்சி அளிக்கிறது.
வெளியூர் செல்லும் பயனிகளுக்கு மிகவும் உபயோகமாக உள்ளது.
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
ஆசிரியர்:-
அன்வர் பாஷா அன்வாரி
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱