≼≽≼≽≼≽≼≽≼≽≼≽≼≽≼≽≼≽≼≽≼≽≼≽≼≽≼≽≼≽≼≽

இறைவனுக்காக தன் வாழ்க்கையை தியாகம் செய்த பெண்மணி.

≼≽≼≽≼≽≼≽≼≽≼≽≼≽≼≽≼≽≼≽≼≽≼≽≼≽≼≽≼≽≼≽


பாரம்பரியமிக்க இஸ்லாமிய நறுமணம் கமழும் பள்ளப்பட்டியில் மஹான் ஷைய்கு அப்துல் காதிர் வலியுல்லாஹ் அவர்கள் காலத்தில் இருந்து இன்று வரை எத்தனையோ மஹான்கள் மார்க்க மேதைகள்  பெரியோர்கள் வாழ்ந்து மறைந்தும் வாழ்ந்து கொண்டும் இருக்கிறார்கள்.


அதேபோல் இதே ஊரில் அவர்களுக்கு ஈடாக எத்தனையோ பெண்மணிகளும் இபாதத்தில் திளைத்து இறைவனின் நெருக்கத்தை பெற்று வாழ்ந்து மறைந்தும் இருக்கிறார்கள்.


அப்படி வாழ்ந்த பல பெண்மணிகள் மத்தியில் குறிப்பிடும்படியாக மஹான் ஷைய்கு அப்துல் காதிர் வலியுல்லாஹ் அவர்களின் மருமகள் ஒருவர் இறைஞானத்தில் திளைத்து  இறைவனின் நெருக்கத்தை பெற்று மறைந்துள்ளார்கள்.


அவர்களை பற்றிய தொகுப்பே இது.


முஹம்மது மீரான் லெப்பை அவர்களின் செல்வ புதல்வி. பாத்திமா பீவி என்ற பெண்மணி ஜமீன் ஆத்தூரை தாய்வீடாக கொண்டு.


மஹான் ஷேக் அப்துல் காதிர் வலியுல்லாஹ் அவர்களின் பேரர் மக்தூமியா மதரஸா நிறுவனர் புது சாஹிபு என்கிற ஷாஹ் முஹம்மது அப்துல் அஜீஸ் சாஹிப் அவர்களுக்கு மனைவியாக பள்ளப்பட்டிக்கு இல்லறம் புகுந்தார்.


பாத்திமா பீவி அவர்கள் புது சாயபு ஹஜரத் அவர்களுக்கு தாய் மாமு மகளும் ஆவார்.


அந்த அம்மையார் மாபெரும் இறைநேசர் புது சாயபு அவர்களோடு  இனைந்து இல்லறம் நடத்திவரும் வேலையில் அவருக்கு ஒரு ஆண் மகவு பிறந்தது.


அந்த அம்மையார் இல்லறத்தில் மட்டுமல்ல.

இபாதத்திலும் தனது  மனம் கவர்ந்து மணாளரை ஒத்து இருந்தார்.


அவர் தன் வாழ்நாளில் பெரும் பகுதியை இறை வணக்கத்தில் கழித்தார்.


சதா இறைவனை தொழுவதிலும் குர் ஆனை ஓதுவதிலும் நோன்பு நோற்பதிலும் திக்ருகள் செய்வதிலும் தன் வாழ்வை அமைத்துக்கொண்டார்.


எப்போதும் அவர் மூச்சு அல்லாஹ் அல்லாஹ் என்று திக்ர் செய்த வண்ணம் இருக்கும் ஒரு வினாடி கூட திக்ரை விடாமல் ஓதி வருவார்..


தான் மட்டுமல்லாமல் தன்னை சுற்றியும்.

இவ்வூரை சுற்றியும் வாழும் பெண்களுக்கு இஸ்லாத்தை பற்றியும் இஸ்லாம் கூறும் நல்வாழ்க்கையை பற்றியும் போதித்து வந்தார்.


பெண்களுக்கு என்றே சிறப்பு வகுப்புக்கள் எடுத்து குர்ஆன் ஓத கற்றுக்கொடுத்தும் வந்தார்.


திக்ருகளிலும் இறைவனின் கவி பாடுவதிலும் வல்லமை பெற்றவர்களாகவும்.

இறைவனின் படைப்புகளை ஆய்வு செய்தவராகவும் திகழ்ந்தார்.


இவர்களை சுற்றி எப்போதும் பெண்கள் கூட்டம் இருக்கும் மார்க்கத்தில் தெரியாத விசயங்களை பெண்களுக்கு போதிப்பார்.


பெண்கள் மத்தியில் அமர்ந்து

சுன்த்து சுபியான் என்ற அரபி தமிழ் நூல் மூலம் நபிமார்கள் வாழ்ந்த வரலாறுகளையும் ஹதீஸ்களையும்.

குர் ஆன் விரிவுரைகளையும் போதிப்பார்.


இதை கேட்ட பல பெண்கள் ஹதீஸ்களை புரிந்து கொண்டு அதன்படி நல் அமல்கள் செய்தனர்.


கணவர் உற்றார் உறவுகளுக்கு எப்படி பணிவிடை செய்யவேண்டும் என்றும் போதிப்பது மட்டுமல்லாமல் வித விதமான சுவையான உணவுகளை எப்படி தயாரிக்கவேண்டும் என்றும் பெண்களுக்கு  கற்றுக்கொடுப்பார்.


ஒரு வீட்டில் குழந்தை பிறந்தால் முதலில் இவர்களை அழைத்து அந்த குழந்தைக்கு ஓதிப்பார்க்க செய்து அவர்களின் பரக்கத்தான கையால் அந்த குழந்தைக்கு பாலுட்டச்சொல்வார்கள்.


காரணம்..


இவர்கள் கைபட்ட குழந்தை நல்ல சாலிஹான பிள்ளையாக வளரவேண்டும் என்று நினைப்பார்கள்.


புது சாயபு அவர்களின்  உடன் பிறந்த சகோதரிகளில் இருவரும் புது சாயபு அவர்களின் மனைவி பாத்திமா பீவி அவர்களும் அரபி மொழியில் சரளமாக உரையாடும் வல்லமை பெற்றவர்கள்.


புது சாஹிப் அவர்களுடைய சகோதரிகளும் பாத்திமா பீவி அவர்களும் அரபி மொழியில் பதிவு செய்த குறிப்புகளும் பாடங்களின் விரிவுகளும் இன்று வரை இருக்கின்றன.


பெண்கள் தன் உடலை மறைக்காமல் வெளியில் செல்லும் பழக்கத்தை மாற்ற.

முதலில் தானும் தன் வீட்டு பெண்களையும் புர்கா அல்லது துப்பட்டி அணிந்து வெளியில் செல்ல வேண்டும் என்று கட்டளையிட்டு.

மற்ற பெண்களிடமும் இதன் அவசியத்தை எடுத்து சொல்லி வழியுறுத்தினார்.


அதை புரிந்த மற்ற பெண்கள் அதை ஏற்றனர் அந்த பழக்கம் இன்றுவரை தொடர்கிறது.


இறைவனின் நினைவில் ஆனந்தம் கொண்டு வாழ்ந்து வரும் நிலையில். தவத்தின் உச்ச நிலை துறவறம் மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உதித்தது இந்த நிலையில் தன் கணவருடன் இல்லறம் நடத்தும் அந்த 5 நிமிடம் உடல் சுகத்திற்காக அல்லாஹ்வை மறந்து விடுகிறோமே என்ற மனக்கவலையும் ஏற்பட்டது இதை தன் கணவரிடம் கூற தயங்கி வாழ்ந்து வந்தார்.


அதுவே தன் மனதில் பெரும் கவலையாக மாறி சோர்வுடன் வலம் வந்தார்.


மனைவியில் மனதில் ஏதோ கவலை உள்ளதை அறிந்த புது சாஹிபு ஹஜரத் அவர்கள் தன் மனைவியை அழைத்து விசாரித்தார்..


இது தான் சமயம் என்று தன் மனதில் உள்ளதை பகிர்ந்து கொண்டு அந்த 5 நிமிடம் கூட நான் இறைவனை மறக்ககூடாது.


அதனால் இல்லறத்தில் ஈடுபட என் மனது இடம் தரமறுக்கிறது என்று கணவரிடம் அனுமதி கோரினார்.


இதை கேட்ட புது சாஹிபு அவர்கள் தன் மனைவியின் இறைபக்தியை பாராட்டி இனி நமக்குள் இல்லறம் வேண்டாம் என்று தம் அருமைத் துணைவியாரின் தவ வாழ்வினை மெச்சி அவர்களும் அனுமதி தந்தார்.


எனினும் தன் கணவருக்கு துணையாக வேறு ஒரு பெண்ணை தானே மணமுடித்தும் திருமணம் செய்து வைத்தார்.


அந்த பெண்மணியும்  இபாதத்துகளில் சிறந்தவராக விளங்கி இறை நேச பெண்மணியாக வாழ்ந்தார்.


தன் கணவருக்கு நல்ல துணையை ஏற்படுத்தி விட்டோம் என்று திருப்தியுடன்.

தனது ஒரே மகன் மாபெரும் தவசீலர்

அந்நாளில் சூஃபி ஹஜரத் என்றழைக்கப்படும் ஷைய்கு  அப்துல் காதிர் சாஹிப் அவர்களுடன் தனித்து வாழத் துவங்கினார்.


(இவர்கள் அரபி ஹஜரத் அவர்களின் தந்தை ஆவார்)


எனினும்  தனது கணவனுக்கு செய்யும் பணிவிடைகளில் குறை ஏற்படக் கூடாது என்பதினால் இரவு 3 மணிக்கு தஹஜ்ஜுது தொழுது விட்டு கையில் லாட்டின் விளக்குடன் கணவர் இல்லம் வந்து கணவனுக்கு வேண்டிய உதவிகளை செய்து கொடுத்து விட்டு காலை சிற்றுண்டிகூட செய்து முடித்து விட்டு தன் இல்லம்  திரும்புவார்.


பெரு வாழ்வு வாழ்ந்த அம்மையார் அவர்கள் ஒரு நாள் இறைவன் அழைப்பை ஏற்று காலமானார். (இன்னாலில்லாஹி...)


அன்றைய காலத்தில் அம்மையார் அவர்கள் மரணம் பள்ளப்பட்டி பெண்கள் மத்தியில் பேரிழப்பாக கருதப்பட்டது.


புது சாஹிப் அவர்களின் துணைவியார் பாத்திமா பீவி  காலமான சமயம் புது சாயபு அவர்கள் தன் மனைவி அடக்கஸ்தளத்தை ஜியாரத் செய்வதற்கு வசதியாக  அவர்கள் நிறுவனம் நடத்தி வந்த மக்துமியா மதரஸா என்று அழைக்கப்படும்  பெரிய மதரஸா மேற்கு பகுதி வளாகத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது.


அதன் பின் அவர்கள் இல்ல பெண்கள் இன்று வரை அங்கேயே அடக்கம் செய்து வருகிறார்கள்.


பாத்திமா பீவி அம்மையார் அவர்களின் மகனார் சூஃபி ஹஜரத் அவர்களும் அவர்களின் மகனார் அரபி ஹஜரத் அவர்களும் மிகவும் சிறப்பு வாய்ந்தவர்கள்.


ஆண்களுக்கு நிகராக இறைநேச பெண்மணியாக வாழ்ந்த பாத்திமா பீவீ அவர்களை எந்த கேள்வி கணக்கும் இல்லாமல் சுவர்க்கம் செல்லும் 70 ஆயிரம் நபர்களில் ஒருவராக ஆக்கி சுவர்க்கம் புகும் முதல் பெண்மணி நாயகத்தின் அருமை புதல்வி அன்னை பத்திமா அவர்களுடன் இனைந்து இவர்களுக்கும்

அல்லாஹ் சுவர்க்கத்தை வழங்குவானாக.


ஆமீன்..ஆமீன்..யாரப்பல் ஆமீனீன்..


அவர்களின் வாரிசாக நான் பிறக்கவி ல்லையே என்ற ஏக்கத்துடன்.

▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱

ஆசிரியர்:-

அன்வர் பாஷா அன்வாரி

▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱