✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠
பிரண்ட்ஸ் பெடரேஷன் கடந்து வந்த பாதை
✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠
அன்பான நண்பர்களே...
பாரம்பரியமிக்க பள்ளப்பட்டியில்
அன்று முதல் இன்று வரை மக்களுக்கு தேவையான உதவிகளை தொடர்ந்து
செய்ய பல அமைப்புகள் தோன்றி தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறது.
கடந்த பல வருடங்களுக்கு முன் ஹாஜி ஹபீப் மன்றம். மக்கள் மன்றம். போன்ற அமைப்புகள் தோன்றி பல திட்டங்களை செயல்முறை படுத்தி வெற்றியுடன் செயல்பட்டதை நாம் அறிவோம்.
அந்த வரிசையில்...
கடந்த 36 ஆண்டுகளாக பிரண்ட்ஸ் பெடரேஷன் என்ற அமைப்பு 1990 முதல் இன்று வரை தொடர்ந்து செயல்பட்டு பல சாதனைகள் செய்து தனக்கென தனி இடத்தை பிடித்து அமைதியாக செயல் பட்டு வருகிறது.
அது தோன்றிய வரலாறு மற்றும் அது செய்த சாதனைகளை இன்று பார்ப்போம்.
1990 ல் நடந்த பள்ளப்பட்டி உருஸ் நிகழ்சியில் சில இளைஞர்கள் ஒன்று கூடி நாகூர் ஹணீபா அவர்களின் இன்னிசை கச்சேரி நடத்தலாம் என்று முடிவு செய்து
பிரண்ட்ஸ் பெடரேஷன் என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கி நண்பர்கள் நிதி உதவியுடன் இன்னிசை கச்சேரி நடத்தினார்கள்.
மூன்று வருடங்கள் தொடர்ந்து
கச்சேரிகள் நடந்தது அப்போது சிலவுகள் போக சில தொகைகள் மீதமானது மீதமான தொகைகளை என்ன செய்யலாம் என்று யோசனை செய்தனர்.
இதுவரை யாரும் செய்யாத புதுமையான முறையில் ஏழை மக்களுக்கு உபயோகமான சேவை செய்ய வேண்டும் என்று ஆலோசித்தனர்.
பல ஆலோசனைக்கு பிறகு ஏழை மக்களின் திருமண பெண்களுக்கு வண்ணப்பாய் தலையனை குர் ஆன் சரீப் கொடுக்கலாம் என்று முடிவு செய்து முதன் முதலில் இத்திட்டத்தை ஆரம்பித்து 10 நபர்களுக்கு கொடுத்தனர்.
அதை தொடர்ந்து மறு வருடம் முதல் 50 நபர்களுக்கு கொடுத்தார்கள்.
[ தற்போது தேவைக்கேற்ப கொடுத்து வருகிறார்கள். ] அது மக்களிடையே வரவேற்பை பெற்றது.
இதன் காரணமாக.
பொழுது போக்கிற்காக ஆரம்பிக்க பட்ட அமைப்பின் நோக்கம் திசை மாறியது.
இதை ஏன் நாம் பொது அமைப்பாக மாற்றி பொது சேவைகளை தொடர்ந்து செய்யலாமே என்று முடிவு செய்து
பல நல்ல திட்டங்களை செயல் படுத்தும் இயக்கமாக மாற்றினார்கள்.
பொருளாதார தேவைகளுக்காக..
பள்ளப்பட்டி வழிகாட்டி என்ற பெயரில் டைரிகள் அச்சடித்து பள்ளப்பட்டி மக்களின் தொடர்பு எண்களை ஒன்றினைத்து குறிப்பாக வடநாட்டில் தொழில் செய்யும் மக்களின் தொடர்பு எண்களை பதிவு செய்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை டைரி வெளியிட்டார்கள்.
இது மக்களுக்கு மிகவும் உபயோகமாக இருந்தது அதில் கிடைத்த வருமானத்திலும் பள்ளப்பட்டி மக்களின் நிதி உதவிகளிலும் பல நல திட்டங்கள் செய்ய ஆரம்பித்தனர்.
அதை தொடர்ந்து.
1993 ம் ஆண்டு பள்ளப்பட்டி மற்றும் சுற்று வட்டார கிராம பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கினர்.
இந்த திட்டத்தை கேள்விப்பட்ட. டாக்டர் கலைஞர் அவர்கள் மனதில் நாம் ஆட்சிக்கு வந்தால் [ அப்போது டாக்டர் கலைஞர் அவர்கள் ஆட்சியில் இல்லை ] அரசு சார்பில் தமிழக முழுவதும் செயல் படுத்தினால் மாணவ மாணவிகளுக்கு மிகவும் உதவியாக இருக்குமே என்று நினைத்து 1996 ல் நான்காவது முறையாக கலைஞர் அவர்கள் ஆட்சி பொருப்பேற்றவுடன்
தமிழக முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு இத் திட்டத்தை செயல் படுத்தினார்.
அடுத்து..
அதை தொடர்ந்து பள்ளப்பட்டி அருகே உள்ள வெரிசனம் பட்டியில் உள்ள ஒரு பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவசமாக காலணிகள் வழங்கினார்கள்.
இதை கேள்வி பட்ட அப்போதைய தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் தமிழக முழுவதும் உள்ள பள்ளி மாணவ மாணவிகளுக்கு காலணிகள் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
[ இன்று அரசு நோட்டு புத்தகங்கள் மற்றும் காலணிகள் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு இலவசமாக கொடுக்கும் திட்டங்களுக்கு முன்னோடியாகவும் மூல காரணமாகவும் இருந்தது பிரண்ட்ஸ் பெடரேஷன்தான் ] இந்த இரு திட்டங்களையும் அரசு வழங்க ஆரம்பித்த பிறகு இவர்கள் நிறுத்தி விட்டார்கள்.
அடுத்து..
நமதூர் பொது கபரஸ்தான் ஒரு வரைமுறை இல்லாமல் இருப்பதாலும் இரவு நேரங்களில் ஜனாஸாக்களை அடக்கம் பண்ண வெளிச்சம் இல்லாமல் சிரமப்படுவதை கவனத்தில் எடுத்து பொது கபரஸ்தானை சீர் படுத்தும் நோக்கத்தில் கபரஸ்தானை சமப்படுத்தி ஜனாஸாகளை தூக்கி செல்ல வழிகளை அமைத்தும் மின் விளக்குகளை அமைத்தும் இரவு நேரங்களில் ஜனாஸாக்களை அடக்கம் பன்னும் கபர் வரை கொண்டு செல்லும் மின் விளக்குகளையும் அமைத்து கொடுத்தனர்.
அதை தொடர்ந்து 1996 ம் ஆண்டு பள்ளப்பட்டி ஹாஜி வாப்பு நினைவு அரசு மருத்துவ மனைக்கு நமக்கு நாமே என்ற திட்டத்தின் கீழ் சுற்றுபுற சுவர் அமைத்து கொடுத்தார்கள்.
அத்துடன் கரூர் மாவட்ட ஆட்சிதலைவர் முன்னிலையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து மருத்துவ மனை வளாகத்தை சுத்தம் செய்து அழகிய பூங்கா ஒன்றையும் அமைத்து பேவர் பிளாக் ரோடுகள் அமைத்து மருத்துவமனையில் உள்ள அனைத்து இடங்களிலும் மூலிகை மரங்களை நட்டு கூடவே மருத்துவ உபகரணங்களையும் வழங்கி கிணற்றை தூர்வார டாக்டர் கரீம் ஜேகே பாரி அவர்களின் ஒத்துழைப்புடன் தூர்வாரி மூடியும் போட்டனர்.
மருத்துவ மனை வளர்சிக்கு 1997 முதல் 2003 வரை தொடர்ந்து சேவை செய்தனர்.
கி.பி 2000 ம் ஆண்டு மத நல்லிணக்க ஷஃரீயத் மாநாடு நடத்தி அதில் பல நலத்திட்டங்களையும் வழங்கப்பட்டது.
அதை தொடர்ந்து மேலும் சேவை செய்ய பொருளாதார தேவைகளை கருத்தில் கொண்டு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை டைரி வழங்கியதை வருடம் ஒரு முறை என்று மாற்றி மேலும் நபியின் பொன் மொழிகளை தமிழில் மொழி பெயர்த்து ஸ்ட்டிக்கர் வடிவில் வழங்கினார்கள் அது மக்களிடையே மிகுந்த வரவேற்ப்பை பெற்றது.
இந்த ஸ்ட்டிக்கர்களை வணிக நிறுவனங்கள் தங்கள் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் பார்வையில் படுமாறு கடை முகப்பில் ஒட்டி கடைக்கு வரும் சமுக சமய மக்கள்களின் பாராட்டை பெற்றதுடன் சமய சமூக மக்களே விரும்பி கேட்டு வாங்கி பயனடைகின்ற வகையில் நபியின் பொன்மொழிகள் தமிழாக்கம் செய்து ஸ்டிக்கர்களாக வடிவமைத்து வியாபார ஸ்தலங்களில் ஒட்ட வைத்து சேவை செய்துள்ளார்கள்.
உதாரனமாக:-
இறைவன் கொடுக்க நினைப்பதை மனிதனால் தடுக்க முடியாது
இறைவன் கொடுக்க மறுப்பதை மனிதனால் தர முடியாது.
தட்டிப்பறிப்பவன் வாழ்ந்ததில்லை.
விட்டுக்கொடுப்பவன் வீழ்ந்ததில்லை.
மன அமைதிக்கு இரண்டு வழிகள்.
விட்டு விடுங்கள் அல்லது விட்டு கொடுங்கள்.
இது போன்ற பல பொன்மொழிகளை அச்சடித்தனர்.
அடுத்து.
ஊரில் ஒருவர் மரணித்து விட்டால் வெளியூரில் வசிக்கும் உறவினர்கள் வரும் வரை ஜனாஸாவை வைக்க குளிர்பதன பெட்டிகள் வாங்கி மக்கள் உபயோகத்திற்கு பயன் படுத்தினார்கள்
அடுத்து.
இலவச பிளட் பிரசர் செக்கப் சென்டர் அமைத்து கடந்த 25 ஆண்டுகளாக சேவை செய்து வருகிறார்கள்.
2010 உஸ்வத்துன் ஹஸனா இன்டர் நேசனல் பள்ளிக்கு ரூபாய் 2 லட்சம் செலவில் பூங்கா அமைத்து கொடுத்துள்ளார்கள்.
அடுத்து..
2015 ல் பிரண்ட்ஸ் பெடரேஷன் அமைப்பின் 25 ம் ஆண்டு வெள்ளி விழாவாக இரண்டு நாள் கொண்டாட முடிவு செய்து ஹாஜி ஹபீப் திருமணக்கூடத்தில் முதல் நாள் நிகழ்சியாக ஆன்மீக நிகழ்ச்சி நடந்தது அதில் தலை சிறந்த மார்க்க அறிஞர்கள் சொற்பொழிவு நடைபெற்றது..
அடுத்த நாள் பொது நிகழ்சியாக பல பிரபலங்களை அழைத்து வந்தும் சாலமன் பாப்பையா அவர்களின் பட்டிமன்ற நிகழ்சியும் நடத்தி பல நல திட்டங்களையும் வழங்கினார்கள்..
அடுத்து.
2018 ம் ஆண்டு புதிய ஈத்ஹா மைதானத்திற்கு 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுற்று சுவர் அமைத்து வெளி கேட்டுகளையும் அமைத்து கொடுத்தனர்.
அடுத்து.
2023 ஆண்டு பள்ளப்பட்டி நகரின் முக்கியமான 20 இடங்களில் 88 கண்கானிப்பு கேமராக்கள் அமைத்து குற்றங்கள் நடைபெறாமல் பாதுகாப்பு வலையமாக தொடர்ந்து கண்கானித்து வருகிறார்கள்.
அடுத்து.
2023 ம் ஆண்டு பள்ளப்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட முக்கிய சந்திப்புகளில் 150 சோலார் மின் விளக்கு கோபுரங்களை அமைத்து இருளை போக்கி இன்று வரை பராமரித்தும் வருகிறார்கள்.
சொக்கலாபுர ரோட்டில் அமைந்து இருக்கும் பசுமை பூங்காவிற்கு பேவர் பிளாக் நடைபாதை அமைத்து அழகு படுத்தி கொடுத்துள்ளார்கள்.
2022 ம் ஆண்டு தமிழக அரசு அமைத்துள்ள. பெண்கள் மகளிர் சங்கத்துடன் இனைந்து சுமார் 400 பயனாளிகளுக்கு தையல் இயந்திரம் மற்றும் மாவு அரைக்கும் கிரைண்டர் வழங்கி உள்ளார்கள்.
இத்திட்டத்தின் மூலமாக வருடம் தோறும் பலபேர்கள் பயனடைந்து வருகிறார்கள்.
பெண்களுக்கு 50 ரூபாய் கட்டணத்தில் பிரன்ட்ஸ் பெடரேசன் கிளினிக் அமைத்து செயல்பட்டு வருகிறது.
இவைகள் அனைத்தும் பிரண்ட்ஸ் பெடரேஷனின் மாஸ்டர் திட்டங்கள்.
இவைகளை தவிர.
இலவச மருத்துவ முகாம்கள் நடத்துவது
ஏழை நோயாளிகளுக்கு மருத்துவ உதவி அளிப்பது ஊனமுற்றோர் மற்றும் பிறவி ஊனமுற்றோர்களுக்கு செயலாக்க பொருள்கள் அளிப்பது அறுவை சிகிச்சைகளுக்கு உதவுவது இடை நின்ற பள்ளி குழந்தைகளை கண்டறிந்து மீண்டும் அவர்கள் கல்வி கற்க வகை செய்வது.
மார்க்க கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஊக்கப் பரிசுகள் வழங்கி அவர்களை மேலும் ஊக்கப்படுத்தி மார்க்க அறிஞர்களாக ஆக்குவது மார்க்க கல்வி பயிலகூடிய ஏழை மாணவர்கள் தங்கும் விடுதிகளுக்கு 20 கட்டில்கள் வழங்கி உள்ளார்கள்.
நமதூரில் மதநல்லிணக்கத்தை பேணும் வகையில் முதன்முதலாக இப்தார் விருந்து நடத்தி மாற்று சமுதாயத்தினர்களை கவுரவித்து உள்ளார்கள்.
நமது ஊரார்களின் தேசப் பற்றுதலை அனைவரும் அறியக்கூடிய வகையில் நமதூர் பஸ் நிலையத்தில் தேசத்தின் நினைவுச் சின்னத்தை அமைக்க உதவி செய்துள்ளார்கள்
அரசு ஆணைப்படி நமதூரில் வைத்துள்ள நூலகத்திற்கு அதிமுக்கிய தேவையான அமரக்கூடிய 50 நாற்காலிகள் அன்பளிப்பாக வழங்கியுள்ளார்கள்.
நமதூரில் மாற்று மதத்தினரால் அமையப்பெற்ற அன்னை தெரசா சேவா சங்கத்துடன் இணைந்து நமதூருக்கு பல இடங்களில் மரக்கன்றுகள் நட்டு சேவை செய்துள்ளார்கள்.
பள்ளபட்டி நகரின் முக்கிய சாலை ஓரங்களில் நிழல்தரும் மரங்கள் அமைத்து பராமரிப்பு செய்து கொண்டுள்ளார்கள்.
நமது ஊரின் முக்கிய செய்திகளும், மௌத் செய்திகளும் எல்லோரும் அறியக்கூடிய வகையில் நமதூர் எல்லையிலும் மற்றும் முக்கியமான இடங்களிலும் கரும்பலகைகள் வைத்துள்ளார்கள்.
நமது ஊரில் நெடிய தூரங்களில் இருந்து ஜனாஸா சந்தூக்கை தூக்கி செல்வதில் சிரமம் ஏற்படுவதை கருத்தில் கொண்டு ஜனாஸாவை தூக்கி செல்ல சந்தூக் வண்டி ஒன்று வாங்கி பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்திடம் வழங்கியுள்ளார்கள்.
அனாதை மற்றும் வசதியற்ற பல மையத்துகளை அடக்கம் செய்ய இது வரை உதவி செய்தும் மேலும் தொடர்ந்து உதவி செய்தும் வருகிறார்கள்.
அடுத்து ஊரில் உள்ள பல பள்ளிவாசல்களுக்கு தேவையான பல உதவிகள் செய்தனர்.
நமது ஊர் பள்ளிவாசல் ஜன்னத்துல் பிர்தௌஸ்க்கு ரூ.25,000 செலவில் குடிநீர் இணைப்பு பெற்றுக் கொடுத்துள்ளார்கள்.
நமது ஊர் பஸ் ஸ்டாண்டு பள்ளிவாசலுக்கு சுற்றுப்புற சுவர் அமைத்துக் கொடுக்க உதவி செய்துள்ளார்கள்.
இது போல் இன்னும் பல சேவைகள் செய்துள்ளார்கள்.
இந்த அமைப்பில் 100 நபர்கள் உறுப்பினர்களாக இருந்து அதன் தலைவராக தொடர்ந்து செயல் வீரராக தோட்டம் ஹாஜி T.M. சாதிக் அலி அவர்கள் தலைமையில் பிரண்ட்ஸ் பெடரேஷன் அமைப்பு துடிப்புடன் செயல் பட்டு வருகிறது.
10 வு 10 அளவில் சிறிய இடத்தில் அமர்ந்து
சரியான விளம்பர போர்டுகள் கூட இல்லாமல் ஆடம்பரம் இல்லாமல்
ஊருக்கு தேவையான உபயோகமான சிறப்பான செயல்களை செய்து தனக்கென தனி வழியை அமைத்து சத்தம் இல்லாமல் சாதனை செய்து வருகிறது.
இவைகள் அனைத்தும் உறுப்பினர்கள் வழங்கும் நன்கொடைகள் டைரிகள் விற்பனையில் கிடைக்கும் வருமானங்களை கொண்டும் மக்கள் கொடுக்கும் நன்கொடைகளை கொண்டும் நடைபெற்று வருகிறது.
ஊருக்கு தேவையான இன்னும் பல நல்ல
திட்டங்களை செயல்படுத்த ஆலோசனைகளும் நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து இன்னும் பல உதவிகளை செய்ய தங்களின் மேலான ஆதரவையும் நாடுகிறோம்.
பிரண்ட்ஸ் பெடரேஷன் அமைப்பின் சேவைகள் மேலும் மேலும் தொடர்ந்து நடைபெறவும் அதற்காக முயற்சி செய்யும் அனைத்து நல் உள்ளங்களுக்காகவும் இறைவனிடம் துவா செய்வோம்.
குறிப்பு:- இந்த பதிவு சுய விளம்பரத்திற்காக பதியப்படவில்லை
நாளைய தலை முறையினர்கள் ஊரின் வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டும் என்று ஆவணபதிவாக பதியப்படுகிறது.
⇱⇲⇱⇲⇱⇲⇱⇲⇱⇲⇱⇲⇱⇲⇱⇲⇱⇲⇱⇲
அன்வர் பாஷா அன்வாரி
⇱⇲⇱⇲⇱⇲⇱⇲⇱⇲⇱⇲⇱⇲⇱⇲⇱⇲⇱⇲