▩▩▩▩▩▩▩▩▩▩▩▩▩▩▩▩▩▩▩▩▩
நேரத்தை காட்டிய கருவி
▩▩▩▩▩▩▩▩▩▩▩▩▩▩▩▩▩▩▩▩▩
சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாரம்பரியமிக்க பள்ளப்பட்டி காலத்தின் சூல்நிலைக்கு ஏற்றவாறு தன்னை தானே மாற்றி இன்று டிஜிட்டல் வடிவில் காட்சி அளிக்கிறது..
அந்த வரிசையில்.
இன்று நேரத்தை தெரிந்து கொள்ள பல வடிவங்களில் சுவர் கடிகாரங்களும் கைக்கடிகாரங்களும் கைபேசி கடிகாரங்களும் வந்து வினாடிக்கு ஒரு முறை நேரங்களை தெரிந்து கொள்கிறோம்.
ஆனால் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன் இப்போது இருக்கும் நவீன கால கடிகாரங்கள் இல்லாத காலத்தில் வாழ்ந்த மக்கள் எப்படி துள்ளியமான நேரத்தை அறிந்து கொண்டார்கள் என்பதை விளக்குவதுதான் இக் கட்டுரை.
சுமார் 1960 கால கட்டத்தில் ஒரு சில தனவந்தர்கள் வீட்டில் டிங் டாங் என்று மணிக்கு ஓரு முறை சப்தம் எழுப்பும் சுவர்கடிகாரங்கள் பெண்டுலம் மூலமாக டக் டக் என்று ஓசையை எழுப்பி முன்னும் பின்னும் தொடர்ந்து அசைந்து கொண்டே இருக்கும்
இதை தவிர கைக்கடிகாரங்களும் இருந்தது.
இவை இரண்டும் தனவந்தர்களின் பெருமையை பறைசாற்றியது இந்த இரண்டும் சாவி கொடுத்து ஓடும் தன்மையை பெற்றது.
அதே நேரத்தில் சாதாரன மக்களுக்கு சுவர்கடிகாரங்களும் கைக்கடிகாரங்களும் வாங்கும் வசதி குறைவாக இருந்ததினால் இவர்களுக்கு எட்டாகனியாகவே இருந்தது..
இந்த குறையை போக்க..
பள்ளப்பட்டி பஸ் நிலைய வளாகத்தில் தென் மேற்கு மூலையில் அதாவது இன்றைய பஸ் நிலையம் தென் பகுதியில் உள்ள புதிய வணிக வளாகத்தில் கடைசியில் அமைந்து இருக்கும் டீக்கடை இருக்கும் இடத்தில்.
இன்றைய மொபைல் போன் டவர் அமைப்பில் உயரமான கோபுரத்தில் மின்சாரத்தின் மூலமாக இயங்கும் சங்கு அமைத்து அதன் மூலமாக.
காலை 5 மணி.
காலை 8 மணி.
மதியம் 12 மணி.
அதை தொடர்ந்து மாலை 5 மணி அல்லது 6 மணி ( இதன் நேரம் சரியாக தெரியவிவில்லை )
இரவு 8 மணி என்ற கணக்கில் நாள் ஒன்றுக்கு 5 முறை பேரூராட்சி ஊழியர்கள் சரியான நேரத்தில் தொடர்ந்து ஒரு நிமிடம் வரை சங்கு ஒலிக்கசெய்தனர்.
இந்த சத்தம் பள்ளப்பட்டி நகர் மற்றும் அருகில் இருக்கும் லிங்கமநாயக்கன் பட்டி மண்மாரி அண்ணா நகர் பகுதிகள் மற்றும் சுற்று வட்டார கிராமங்கள் வரை துள்ளியமாக எதிரொலித்து நேரத்தை குறிப்பிட்டது.
இதை மக்கள் உணர்ந்து அதன் நேரங்களை தெரிந்து அதன் படி தங்கள் வேலைகளை முறைப்படுத்தி கொண்டனர்.
குறிப்பாக சுற்று வட்டார பால் விநியோகம் செய்யும் கிராம மக்கள் அதிலும் குறிப்பாக திங்கள் கிழமை அன்று பள்ளப்பட்டியில் கூடும் சந்தைக்கு வர காலை 5 மணிக்கு ஒலிக்கும் சங்கின் சத்தத்தை கேட்டு மாட்டு வண்டியிலும் சிலர் நடந்தும் வருவார்கள்.
அதே போல் மாலை நேரத்தில் சங்கு ஒலித்தவுடன் தங்கள் கிராமத்திற்கு திருப்பி விடுவார்கள்.
வடக்கில் ஒலிக்கும் சங்கின் ஓசை தெற்கில் இருக்கும் மக்களுக்கு தங்கள் வீட்டு அருகே சங்கு ஒலிப்பது போல் தெள்ளத்தெளிவாக கேட்கும்.
சங்கு ஒலிக்கும் அந்த நேரத்தில் பஸ் நிலைய வளாகத்தில் யார் நின்று பேசிக்கொண்டிருந்தாலும் அதன் கம்பீரமான சத்தத்தின் காரணமாக
அருகில் இருப்பவர்கள் பேசினாலும் காதில் விழாது.
அதனால் தங்கள் பேச்சை நிறுத்தி அதன் பிறகு தொடர்வார்கள் அந்த அளவு மிகபெறும் சத்தம் எழுப்பும்.
பஸ் நிலைய வளாகத்தை சுற்றியும் அதன் அருகே உள்ள பகுதிகளிலும் உலாவிக்கொண்டிருக்கும் நாய் போன்ற பிரானிகள் சங்கின் திடீர் சத்தத்தை கேட்டு மிரண்டு ஓடும் அதே போல் அந்த பகுதியை சுற்றி உள்ள மரங்களில் ஓய்வு எடுக்கும் பறவைகளும் சிதறி ஓடும்.
அதை தொடர்ந்து கிழக்கு பள்ளியில் இருந்த சுவர் கடிகாரம் மணிக்கு ஒருமுறை டிங் டாங் என்றும் ஒலிக்கும் ஒலியை பாங்கு சொல்லும் மைக்கில் இனைத்து Automatic க்கா ஒலிக்கும் வண்ணம் அமைத்து மணிக்கு ஒருமுறை நேரத்தை ஒலிபரப்பினார்கள்.
அன்றைய காலத்தில் பள்ளப்பட்டி நகரம் ஒரு குறுகிய சுற்றளவே இருந்தது.
மேலும் வாகன வசதியும் குறைவாக இருந்து போக்குவரத்து சத்தங்களும் குறைவாக இருந்து காற்றும் மாசுபடாமல் இருந்தது.
அதன் காரணமாக சங்கின் ஓசை ஊரெங்கும் எதிரொலித்து அருகில் இருந்த கிராமங்களுக்கும் எதிரொலித்தது.
ஊருக்கே நேரத்தை காட்டிய சங்கின் ஒலி
அனேகமாக 1995 ஆண்டுகள் வரை தொடர்ந்து ஒலித்தது.
அதன் பிறகு அனைவர்கள் வீடுகளிலும் சுவர் கடிகாரங்களும் கையில் கை வாட்சுகளும் வந்த பிறகு குறிப்பிட்ட நேரத்தில் சங்கு ஒலிப்பதை நிறுத்தி விட்டனர்.
இருப்பினும் பாரம்பரியமாக ஒலித்த சங்கை முற்றிலும் புறக்கணிக்காமல் ரம்ஜான் நோன்பு காலத்தில் ஷஹர் நேரத்தையும் இஃப்தார் நேரத்தையும் தெரிய படுத்த சங்கு ஒலிக்கும் வழக்கத்தை இன்று வரை தொடர செய்கிறார்கள்.
ஆனால் தற்சமயம் உள்ள சங்கின் ஒலியை விட அன்றைய சங்கின் ஒலி பல மடங்கு அதிக சத்தம் எழுப்பியது அதனால் அன்று ஒலித்த கம்பீரமான ஒலி இன்று கேட்பது இல்லை.
இன்று அனைவர்கள் கைகளில் உள்ள மொபைல் போன்கள் மூலமாக வினாடிக்கு ஒரு முறை நேரத்தை பார்த்தாலும் அன்று சங்கு ஒலித்த சத்தத்தை போல் இன்று இருக்கும் சாதனங்கள் ஒலியை ஏற்படுத்த முடியாது
சங்கு சத்தத்திற்கு முன்னால் இன்று இருக்கும் நவீன உபகரணங்கள் அனைத்தும் தோற்று பின் வாங்கி விடும் என்பதே உண்மை.
▱ ▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
ஆசிரியர் :-
அன்வர் பாஷா அன்வாரி
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱