✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦
பள்ளப்பட்டியின் பரிணாமம்
✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦
முஹம்மது நபியின் வம்சாவழியைச் சார்ந்த (கிபள்ளப்பட்டி நகர் அமைப்பு .பி.1284 (ஹிஜ்ரி737)ல் "காயலில்" வந்து குடியேறியசுல்தான் கமாலுதீன் / சுல்தான் ஜமாலுத்தீன் அவர்களின் வாரிசுகள் பல கிளைகளாக பிரிந்து கேரளா வழியாக தமிழகத்திற்குள் வியாபாரம் செய்யவும் மார்க்கத்தை எத்தி வைக்கவும் வந்தனர் அப்படி வந்த அரேபிய வணிகக்கூட்டம் ஒன்று ஜமீன் ஆத்தூரில் தங்கியது.
அப்போது ஜமீன் ஆத்தூர் பெரிய ஊராக திகழ்ந்தது அதில் மீரான்ஷா காதிரி என்ற மஹானும் இடம் பெற்றிருந்தார்.
இவர்கள் நாயகம் (ஸல்)அவர்களின் 31 வது தலைமுறையில் ஸையிதுஸ் ஷுஹதா ஹுஸைன்(ரலி) அவர்கள் வழிமுறையில் வந்தவர்கள்.
முஹம்மது மீரான் சாஹிப் அவர்கள்.
தென்னிந்தியாவில் பிரசித்தி பெற்ற அறிஞராகவும் அதே சமயம் வணிகராகவும் திகழ்ந்தார்கள்.
நாற்பது பொதிமாடுகள் வரை வைத்து வியாபாரம் செய்துகொண்டும் மார்க்க கல்வி பயிலும் மாணவர்களுக்கு தாமே உணவளித்து மர்க்க கல்வியும் போதித்து வந்தார்கள்.
இவர்கள் ஓரிடத்திலேயே நிலையாக இல்லாமல் மலபாரிலும், கர்நாடகாவிலும், மங்களுரை அடுத்த பட்கலிலும் மற்றும்
மதுரை, முகவை, நெல்லை, தஞ்சை, வடஆற்காடு மாவட்டங்களிலும் ஆந்திராவில் குண்டக்கல் வரையிலும் சென்று. ஜவுளி வணிகம் செய்ததுடன் அங்கு தன்னை நாடி வரும் மக்களுக்கு. மார்க்க கல்வியை புகட்டியும் ஆன்மீகத்துறையில் மெஞ்ஞானப்பாதையை காட்டியும் சிறந்து விளங்கினார்.
இடைஇடையே ஒவ்வொரு ஊரிலும் தங்கி அங்குள்ள சந்தைகளில் இவர்களும் இவர்களுடைய சீடர்களும் பொருள்களை விற்பனை செய்து அந்த அந்த ஊர்களில் புதிய கொள்முதல்கள் செய்து கேரளா வழியாக பள்ளபட்டி அருகில் உள்ள ஜமீன் ஆத்தூர் வர 6 மாதங்களாகும்.
மீதி உள்ள 6 மாதங்களில் உள்ள வியாபாரம் பெரும்பாலும் பள்ளப்பட்டியை சுற்றியே நடைபெற்றது.
ஜமீன் ஆத்தூரில் மணமுடித்துக்கொண்ட இவர்கள் பாலக்காட்டில் காலமானார்கள்.
[ இவர்கள் அடக்கஸ்தளம் கேரள மாநிலம் பாலக்காட்டில் அமைந்துள்ளது மஞ்சக்கொல்லை அவுலியா என்ற பெயரில் இன்றும் தர்ஹாவாக உள்ளது.]
அன்றைய நாட்களில் ஆத்தூரில்
பாக்கு வியாபாரமும் பள்ளபட்டியில் ஜவுளி வியாபாரமும் பிரசித்தி பெற்றதாகும்.
அப்போதைய நாயக்கர்களின் ஆட்சியில் பாளையக்காரர்கள் மூலம் மிக மோசமான சுரண்டலை குடிமக்களிடம் நடத்தியது.
இதில் அதிகம் பாதிக்கப்பட்டோர் வேளாண்குடிகளான 'பள்ளர்களே'
இதில் பாதிக்கப்பட்ட பள்ளர்கள்
அப்போது அரபு வணிகர்களின் வியாபார தொடர்புகளை உள் வாங்கிய பள்ளப்பட்டி மக்கள் அவர்கள் வழியை பின்பற்றி
இவர்களும் தாவளத்தொழிலில் ஈடுபட்டனர்
தாவளம் என்பது பெருவழிகளில் இருந்த வணிகச் சந்தை நகரங்களைக் குறிக்கும் சொல்லாகும் முதல் உலகப்போர் காலகட்டத்தில் நடந்த சமயம்.
விதைப்புக் காலத்தில் மல்லு, காடா. போன்ற துணிவகைகளை மாட்டு வண்டியில் ஏற்றி ஊர் ஊராய் விநியோகிப்பார்கள்.
அறுவடைக் காலத்தில் சென்று, கொடுத்த துணிகளுக்கு பணம் வசூலித்துக் கொண்டு வருவார்கள்.
இது தாவளம்.
இரவு நேரங்களில் சத்திரங்களில் தங்கி பகல் நேரங்களில் நடந்து பல நூறு மைல்களுக்கு அப்பால் ஒரு ஊரை தேர்வு செய்வார்கள்
(உதாரணமாக பள்ளப்பட்டியில் இருந்து ராமநாதபுரம் திருநெல்வேலி என்று சென்று அருகில் உள்ள கிராமங்களை தேர்வு செய்வார்கள்)
ஒரு சிலரோ ஈரோடு வரை மாட்டு வண்டியில் சென்று அங்கிருந்து பாஸிஞ்சர் ரயிலை பிடித்துஆந்திரா கர்னாடகா போன்ற ஊர்களுக்கும் சென்று வணிகம் செய்வார்கள்.
இப்படி ஊரைவிட்டு புறப்பட்டு வியாபாரம்-வசூல் பண்ணி மறுபடியும் ஊர் திரும்ப சரியாக ஆறுமாதம் ஆகிவிடும்
மீரான் ஷா காதிரி அவர்கள் பகலில் வியாபாரம் செய்து கொண்டும் இரவில் தாஃவா பணி செய்து கொண்டும் இருந்தனர்
அவர்களின் போதனைகளின் பயனாக பலர் இஸ்லாத்தில் இனைந்தனர்
மீரான்ஷா காதிரி அவர்களுக்கு மூன்று ஆண் மக்கள் அதில் இரண்டாம் மகனாக ஹிஜ்ரி 952ம் வருடம் ஷஃபான் பிறை 13 ல்.
பள்ளப்பட்டியை அடுத்த ஜமீன் ஆத்தூரில் ஷைகு முஹம்மது மீரான் ஷாஹ் காதிரி (ரஹ்) வர்களின் இரண்டாம் மகனாக பிறந்தார்கள். அவர்களுக்கு
ஷேக் அப்துல் காதிர் பெயர் சூட்டப்பட்டது.
(இவர்களே நமதூர் மஹன் ஷைய்கு அப்துல் காதிர் வலியுல்லாஹ் அவர்கள் )
சிறப்பு மிக்க வணக்கசாலியாக திகழ்ந்த. ஷைய்கு அப்துல் காதிர் ( ரஹ்) அவர்கள் தம் தந்தையரிடமே மார்க்க கல்வி பெற்றார்கள் இவர்கள் மிகுந்த கராமத் உடையவர்களாக இருந்துள்ளார்கள்
அநேகம் பேர்கள்அவர்களின் அருட்கரம் பற்றி புனித இஸ்லாத்தை தழுவினார்கள்.
பின்னர் ஏகனின் பேரொளியை ஏகத்துவத்தின் ஞான வழியை பிரகாசிக்க செய்வதற்க்காக தமிழகமெங்கும் பரப்பும் அறப்பணியில் தங்களை அர்பணிக்கும் வகையில் அவர்கள் ஞானப்பயணம் மேற்கொண்டார்கள்.
குறிப்பாக தமிழகத்தில் தென் மாவட்டங்களிருந்து அதிகாமானோர் அவர்கள் கரம் பற்றி தீட்சை பெற்றனர்.
பின்னர் இவர்கள் திண்டுக்கல் மாவட்டம் சித்தையன் கோட்டை அருகில் உள்ள குதிரைக் குளிப்பட்டி என்ற இடத்தில் சிலகாலம் தவம் இருந்து வந்தார்கள்.
அங்கு அவர் தவமிருந்து அப்பகுதி நல்லாம் பிள்ளை, சித்தரேவு, சித்தையன் கோட்டை , கம்பம் , உத்தம பாளையம், கூடலூர். போன்ற ஊர்களில் உள்ள பெரும் பாலான ஊர்வாசிகளுக்கு இவர்கள் ஞான போதனை செய்தார்கள்.
இவர்களின் அறபோதனையின் பயனாக அப்பகுதியில் உள்ள அதிகமானோர் ஆலீம்களாக இன்றும் திகழ்கிறார்கள்.
தனித்தவம் பூண்ட வலியுல்லாஹ் அவர்கள் ஆசான் கௌதுல் அஃலம் முஹைய்யத்தீன் அப்துல் காதிர் ஜைலானி (ரலி) அவர்களுடைய கட்டளை படி பள்ளப்பட்டியிலேயே தங்கி மக்களுக்கு தீன் நெறி ஊட்டியும் மெஞ்ஞான வழியை காட்டியும் வந்தார்கள்.
இவர்கள் தங்கள் இறுதி காலத்தில் பள்ளபட்டியில் வாழ்ந்து வரும் சமயம் இவர்களை நாடி இவர்களின் ஞான உபதேசத்தை பெறுவதற்கு வேண்டியே
பல ஊர்களில் இருந்து இவர்களின் சீடர்கள் பள்ளபட்டி நகரில் குடியேறினார்கள்...
அப்போது மன்னர்களின் ஆட்சிகாலம் அனைத்து இடங்களும் புறம்போக்கு இடங்களாக இருந்தது அதில் கிடைக்கும் இடத்தில் குடிசைபோட்டு வாழத் துவங்கினர்.
அப்போது வாகன வசதியோ மக்கள் நெருக்கமோ இல்லாத காலமாக இருந்ததால் முறையான சாலை வசதிகள் இல்லாமல் வளைந்தும் நெளிந்தும் ஒரு வரைமுறையில்லாமல் ஒன்று அல்லது இரண்டு நபர்கள் நடக்கும் அளவே வழிவிட்டு குடிசைகளை அமைத்தார்கள்.
அப்போது தெருப்பெயர்களே இல்லாமல் அந்த பகுதியில் பிரபலமானவர்கள் பெயரிலும் அப்பகுதியில் பிரபலமான இடங்களின் பெயரிலும் அழைத்தார்கள்.
(உதாரணம்:- நமதூரின் கோவில் தெரு.
இன்றைய மேற்கு தெருவில் பல சந்துகளை பார்த்தால் ஒரு வரைமுறையில்லாமல் இன்றும் காட்சியளிப்பதை பார்க்கலாம்)
மன்னர்கள் ஆட்சி அகன்று ஆங்கிலேயர்கள் ஆட்சியில்தான் குடிசை போட்டு வாழ்ந்தவர்களுக்கு அந்த இடத்தை அவர்களுக்கே சொந்தமாக்கி பதிவு செய்து கொடுத்தார்கள்.
அவர்கள் எந்த பெயரில் தெருக்களை அழைத்தார்களோ அதே பெயரில் அரசு ஆவணங்களில் பதிவு செய்தார்கள்.
அன்றைய பள்ளப்பட்டி
குக்கிராமாக காட்சி அளிக்கும்.
இவர்கள் வருகைக்குப் பிறகே பள்ளபட்டி அபார வளர்ச்சி அடைந்தது...
வந்தாரை வரவேற்று அவர்களுக்கு தீட்சை அளித்து தங்களோடு வைத்துக்கொண்டார்கள்.
அவர்களை அடையாளம் தெரிவதற்காக வேண்டி அவர்களின் ஊர் பெயர்களை வைத்து அழைத்து வந்தனர்...
அதுவே குடும்ப பெயராக (வகைரா) இன்றளவும் நிலைத்து நிற்கிறது.
மஹான் அவர்களின் கால கட்டத்தில்.
மஹான் அவர்களுடைய மாமனார் ஆத்தூர் ஹாஜி சாஹிப் அவர்கள் பாக்கு வியாபாரத்திற்காக மைசூர் சென்றிருந்த சமயம் ஆத்தூரில் கடுமையான மழை பெய்து அங்குள்ள வீடுகள் அனைத்தும் நீரில் மூழ்கின.
ஆனால் ஹாஜி சாஹிப் அவர்கள் இரும்பு பெட்டியில் வைத்திருந்த பணம் மட்டும் பத்திரமாக இருப்பதை கண்டு பரவசமடைந்து அப்பணத்தை கையில் எடுத்துக்கொண்டு தன் மருமகன் மஹான் ஷைய்கு அப்துல் காதிர் வலியுல்லாஹ் அவர்கள் கையில் கொடுத்து அல்லாஹ் இந்த பணத்தை நல்வழியில் சிலவு செய்ய வேண்டும் என்று பாதுகாத்திருக்கிறான் அதனால் உங்கள் விருப்படி நல் வழியில் சிலவு செய்யுங்கள் என்று கூறிச்சென்றார்.
அன்றைய காலத்தில் பள்ளப்பட்டியில் பள்ளி வாசல் கிடையாது.
இஸ்லாமியர்கள் அதிக அளவில் வாழும் ஊராக பள்ளப்பட்டி திகழ்வதை கருத்தில் கொண்டு அப்பணத்தை கொண்டுதான் பள்ளபட்டியில் பாவா பக்ருதீன் வலியுல்லாஹ் தர்ஹா என்ற பெயரில் அங்கு மவ்லீது ஓதியும் தொழுதும் வந்த இடத்தில் இன்றுள்ள பெரிய பள்ளிவாசலை கட்டினார்கள்.
அதன் காரணமாகவே மேற்கு பள்ளிக்கு பாவா பக்ருதீன் தர்ஹா பள்ளி என்று பெயர் வந்தது.
மிகப்பெரிய அளவில் கட்டி முடித்திட திட்டம் போட்டு கட்டி முடிக்கும் முன்பே
ஆத்தூர் ஹாஜி சாஹிப்
அவர்கள் காலமாகிவிட்டார். (இன்னாலில்லாஹி)
மீதி உள்ள கட்டிடத்தை ஊர்மக்கள் கட்டி முடித்தார்கள் அப்போது அவர்களிடம் போதிய பொருளாதார வசதி இல்லாததால் நீண்ட தொலைதூரம் சென்று தண்ணீர் கல் மண் சுமந்து கொண்டு மிகச் சிரமத்திற்கு இடையே கட்டி முடித்தார்கள்.
இதை பார்த்த வலியுல்லாஹ் அவர்கள் அந்த மக்களுக்கும் அந்த சந்ததியினர்களுக்கும் பரக்கத்திற்காக மூன்று துஆச் செய்தார்கள்.
அதில் முதலாவது....
இந்த ஊர் மக்கள் எப்போதும் வறுமையை சந்திக்ககூடாது செல்வ செழிப்புடன் வாழ வேண்டும்.
அந்த துஆ வின் பொருட்டால் இன்றுவரை இவ்வூர்வாசிகள் தமிழகத்திலேயே மாபெரும் வணிக வல்லுனர்களாக திகழ்வதை காண முடிகிறது.
பள்ளப்பட்டியை பொருத்தவரை ஏழைகள் கிடையாது ஏழைகள் என்று சொல்பவர்கள் வீட்டில் கூட குறைந்தது இரண்டு பவுன் நகை இருக்கும்.
இரண்டாவது...
இந்த ஊர் மக்கள் தன் குடும்பத்தை தனியே விட்டு விட்டு வெளியூர் சென்று பொருளீட்டும் நிலையில் இருக்கிறார்கள்.
ஆண் துனை இல்லாமல் இருக்கும் இவ்வூர் பெண்களுக்கு நீயே துணை நிற்பாயாக என்று கேட்டார்.
அதன் காரணமாகவே நமதூர் பெண்கள் ஆண் துணை இல்லாமல் தனியாகவும் தைரியமாகவும் எந்த ஆபத்தும் இல்லாமலும் இருக்கிறார்கள்.
இந்த அளவு பாதுகாப்பான நிலை பெண்களுக்கு வெளியூரில் இல்லை என்பது இந்த இடத்தில் குறிப்பிடத்தக்கது.
மூன்றாவது....
இவ்வூர் ஒரு குறுகிய வட்டத்துக்குள் இல்லாமல் வளர்ந்து விரைவடைந்து சென்று கொண்டே இருக்கவேண்டும்.
அதன் காரணமாகவே இவ்வூர் தொடர்ந்து.
கிழக்கும் தெற்கும் நோக்கி பல நகர்கள் பெயர் கொண்டு விரிவடைந்து கொண்டே செல்வதை காணலாம்.
இன்ஷா அல்லாஹ் இன்னும் சில வருடங்களில் திண்டுக்கல் கரூர் பைபாஸ் ரோடு வரை சென்று அங்கேயே புதிய பஸ் நிலையம் கூட அமைய வாய்ப்புள்ளது.
பிறகு உள் பள்ளியில் பாவா பக்ருதீன் அவர்கள் சில்லா இருந்த இடத்தின் மேல்.
அழகிய கும்பா அமைத்து கட்டப்பட்டது.
இதைத் தவிர பள்ளியின் உள் ஓரப்பகுதியில் சிறு சிறு தடுப்புகள் இருந்தது.
அதில் மஹான் அவர்களும் அவரது மகன் அவர்களும் பேரர் அவர்களும் பல நாட்கள் சில்லா (தவம்) இருந்துள்ளார்கள்.
பின்னர் வலியுல்லாஹ் அவர்களின் வேண்டுதல்படி திண்டுக்கல்லை ஆண்ட.
திப்புசுல்தானின் பிரதி நிதிகள் பல கோடி மதிப்புள்ள நிலங்களை பள்ளிக்கு மானியமாக வழங்கினார்கள்.
மஹான் அவர்களின் சிறப்பை அறிந்து ஆற்காடு நவாப் அவர்கள் நேரில் வந்து ஹஜரத் அவர்களுக்கு நிறைய பொன் முடிப்புகளை பரிசாக தந்தார்.
அதை அப்படியே வறியவர்களுக்கு வழங்கி விட்டார்கள்.
எனினும் வலியுல்லாஹ் அவர்கள் தங்குவதற்காக
இன்றைய தர்ஹா உள்ள பகுதியையும் அதை சுற்றியுள்ள பகுதியையும் மானியமாக வழங்கினார்கள்.
அப்போது மஹான் அவர்களுக்கு சில பிரச்சனைகளின் காரணமாக அவர் உயிருக்கு பாதுகாப்பு இல்லாமல் இருந்தது
அதை கருத்தில் கொண்டு இவர்களுக்கு எதிரிகளிடமிருந்து ஆபத்து வரக்கூடாது என்று எண்ணிய. நவாப் அவர்கள்.
உர்துவை தாய்மொழியாக கொண்ட அந்த நவாப் தன்னுடைய இராணுவ வீரர்கள் சிலரை இவர்களுக்கு காவலுக்காக அனுப்பி வைத்தார்கள்.
அவர்கள் தான் இன்று பள்ளபட்டியில் வாழும் பட்டானியர்கள்.
நவாப் வழங்கிய இடத்தில் ஒரு தவச்சாலை நிறுவி அங்கே இருந்து மக்களுக்கு அறபோதம் செய்து வந்த மஹான் அவர்கள்
ஹிஜிரி 1120ஆம் ஆண்டு ஷவ்வால் பிறை 22 ஞாயிற்றுக்கிழமை தம் இல்லத்தில் காலமானார்கள்.
(இன்னாலில்லாஹி)
(குறிப்பு:-
இவர்கள் காலமான வருடம்
ஒரு குறிப்பில் ஹிஜ்ரி 1120 என்றும்.
மறுகுறிப்பில் ஹிஜ்ரி 1110 என்றும் காணப்படுகிறது இதில் எது சரியான வருடம் என்று தெரியவில்லை.)
அப்போது மண்ணும் மலையும் அழுதன
மக்களும் மாக்களும் அழுதனர் மரமும் செடியும் அழுதன
மாநபியின் மாண்புமிகு பேரர் மறைந்து விட்டார்
காண்பதற்கரிய அம்மேதை இப்பூவுலகைப் "பூ" வென உதறித்தள்ளி
இதுகாறும் மனிதக் கண்கள் கண்டறியா மாபெறும் பொன்னுலகை விண்ணுலகை அடைந்து விட்டார்கள்.
ஆசிரியர் அன்வர் பாஷா அன்வாரி