⌬⌬⌬⌬⌬⌬⌬⌬⌬⌬⌬⌬⌬⌬⌬⌬⌬⌬⌬⌬⌬⌬⌬⌬

பள்ளப்பட்டியில் சுமார் 262 வருடமாக ஒரே இடத்தில் இருக்கும் கொக்கி கல்கள்.

⌬⌬⌬⌬⌬⌬⌬⌬⌬⌬⌬⌬⌬⌬⌬⌬⌬⌬⌬⌬⌬⌬⌬⌬


சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாரம்பரியமிக்க பள்ளப்பட்டியில் அடங்கி அரசாளும் மஹான் ஷைய்கு அப்துல் காதிர் வலியுல்லாஹ் அவர்கள் நினைவாக கடந்த 262 வருடங்களாக உருஸ் விழா நடந்து வருவதை நாம் அறிவோம்.


அந்த நிகழ்வின் முதல் வைபவமான கொடியேற்றும் நிகழ்வு நடைபெறுவதையும் நாம் அறிவோம்.


அந்த பச்சை கொடி சுமார் 15 /20 நாட்கள் தொடர்ந்து பறந்து கொண்டிருக்கும் அதையும் நாம் அறிவோம்.


பறந்து கொண்டு இருக்கும் கொடி கீழே விழாமல் இருக்க நான்கு பக்கமும் கயிறு கட்டி இருப்பார்கள் இதையும் நாம் அறிவோம்.


இப்போது...


அந்த கயிறு கட்டி இருக்கும் கல்லை பற்றி அறிந்து கொள்வோம்.


சுமார் 262 ஆண்டுகளாக கயிறு கட்ட பயன்படும் கல் பல நூறு வருடங்களுக்கு மேலாக அங்கு இருக்கிறது..


அந்த இடத்தை ஆய்வு செய்யும் போது கொடி மரத்தை சுற்றிய பகுதிகள் அனைத்தும் பூமிக்கு கிழேயும் மேலேயும் கருங்கல்களால் சூழப்பட்டு இருக்கிறது.


அனேகமாக உருஸ் வைபவ ஆரம்ப காலத்தில் அந்த பகுதி முழுவதும் கருங்கல்களின் குன்றாக இருந்து இருக்கலாம்.


அப்போது கொடிமரத்தை தாங்கி பிடிக்க கயிறு கட்ட வேண்டி அந்த கருங்கல் குன்றிலேயே  4 கல்களை கொக்கி வடிவில் செதுக்கி உள்ளார்கள்.


அதை கொக்கிக் கல் என்று சொல்கிறார்கள்.


தற்போது நம் கண்ணில் தென் படும் கயிறு கட்டும் அந்த கொக்கிக் கல்லை ஆய்வு செய்யும் போது அந்த கல்களை வேறு இடத்தில் இருந்து கொண்டு வந்து நடப்பட்டது போல் தெரியவில்லை.


எற்கனவே அங்கு இருந்த பாராங்கல் குன்றிலேயே பூமியில் இருந்து செதுக்கி உள்ளது நன்றாக தெரிகிறது.


எப்படி எனில் அந்த கல்லை சுற்றிலும் பாராங்கற்களின் படிவங்கள் பூமியில் உள்ளது வேறு இடத்தில் இருந்து கொண்டு வந்து இந்த கல்லை நடவேண்டும் என்றால் மணல் பகுதியில் தான் நடவேண்டும்.


ஆனால் அந்த கல்லுக்கு கீழே பாராங்கல்கள் பூமியில் பதிந்து உள்ளது.


இந்த நிலையில் வேறு இடத்தில் இருந்து கொண்டு வந்த கல்லை அங்கே நட வாய்ப்பில்லை.


அப்படியே நட்டாலும் சில நாட்களில் கீழே விழுந்து விடும் மணலில் நட்டு இருந்தாலும் சில  நாட்களில் புதைந்தோ அல்லது கீழே விழுந்தோ விடும்.


ஆனால்..


கால சுழச்சியில் பல நூற்றாண்டுகள் கடந்தும் ஒரு அடி கூட நகராமலும் கீழே சரியாமலும் மணலால் மூடாமலும் ஒரே மாதிரி இருக்கிறது.


அப்போது எப்படி நட்டார்களோ அதே போல் இன்று நட்ட கல் போல் காட்சி தருகிறது.

இதனால் ஏற்கனவே இருக்கும் பாராங்கல்லிலேயே செதுக்கி செய்திருப்பது உறுதி செய்கிறது கல்லில் முகப்பு பகுதி மட்டும் சற்று சிதைந்து காணப்படுகிறது.


இதையெல்லாம் நாம் ஆராயும் போது ஒரு உண்மை புலப்படுகிறது அந்த கல் பூமியில் புதைந்துள்ள பாராங்கல்லில் இருந்துதான் கொக்கி வடிவில் செதுக்கி கொடி மர கயிறை கட்டி இருக்கிறார்கள்.


மேலும்...


உருஸ் வைபவம் ஆரம்பித்த காலம் முதல் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு வரை மரத்தால் ஆன கொடிக் கம்பம் நடப்பட்டது.


கொடிக்கம்பம் நடப்படும் இடத்தின் கீழேயும் பாராங்கல் படிவங்கள் உள்ளது.


சுமார் 4 அடி மட்டுமே பூமியில் குழி தோன்றி கம்பத்தை நிறுத்தி நாலுபக்கமும் கயிறு கட்டுவார்கள் பூமியில் மேல் மட்டத்தில் நடப்படும் பல கிலோ எடை உள்ள கம்பம்.


தனியாக நிற்கும் போது காற்றின் திசைக்கேற்றவாறு  இங்கும் அங்கும் அசையும் இதில் ஆச்சரியமான விசயம் என்ன வென்றால் பூமியில் சுமார் 4 அடி பள்ளத்தில் பதிக்கப்பட்டு மணலால் மூடப்பட்டு இருந்தாலும் கொடிக்கம்பம் இதுவரை கீழே சரிந்தது இல்லை.


இது மஹான் அவர்களின் கராமத் என்று கூட சொல்லலாம்.


பொதுவாக நமதூரில் காற்றுக்காலத்தில் மிக அதிகமாக காற்று அடித்து ஒரு சில நேரங்களில் பெரிய பெரிய மரங்கள் கூட சரிந்துள்ளது.


ஆனால்..


அதே காற்று காலத்தில் பல முறை உருஸ் வந்துள்ளது சுமார் 30 அடி உயரம் உள்ள கொடிமரம் சாய்ந்தது இல்லை.


கடந்த 4 நான்கு வருடங்களுக்கு முன்புவரை இந்த நிலை நீடித்தது.


கடந்த 4 வருடங்களுக்கு முன் 260 வருடத்து கொடிமரம் கொடி ஏற்றும் போது தன் செயல் இழந்து ஒடிந்தது.


அதன் பிறகு இரும்பினால் செய்யப்பட்ட கொடிமரம் தயாரிக்கப்பட்டு கீழே நட்டு போல்ட் போட்டு நான்கு திசைகளிலும் கயிறு கட்டி கிரேன் மூலம் தற்சமயம் ஏற்றப்படுகிறது.


நான்கு திசைகளிலும் கயிறு கட்டினாலும் கூடுதல் பாதுகாப்புக்காக மேலும் இரண்டு கல்கள் நடப்பட்டு மொத்தம் 6 திசைகளில் கயிறு கட்டப்படுகிறது அந்த கல்லும் அதே இடத்தில் 262 வருடமாக இருக்கிறது.


மஹான் அவர்களின் ரவ்ழா சரீபில் இருந்து நேர் கோட்டில் கொடிமரம் அமைந்துள்ளது மேலும் சிறப்பு.


வருடத்தில் சில நாட்களே உபயோகத்தில் இருக்கும் கல் மீதி நாட்களில் காட்சி பொருளாக இருந்து ஊரின் பழமையையும் பாரம்பரியத்தையும் வராலாற்றையும் மவுனமாக சாட்சியும் சொ ல்கிறது.


▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱

ஆசிரியர்:-

அன்வர் பாஷா அன்வாரி

▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱