⇱⇲⇱⇲⇱⇲⇱⇲⇱⇲⇱⇲⇱⇲⇱⇲⇱⇲⇱⇲

மௌலிஷா ஹஜரத் அவர்கள்

⇱⇲⇱⇲⇱⇲⇱⇲⇱⇲⇱⇲⇱⇲⇱⇲⇱⇲⇱⇲


காந்த மணி விளக்கு.


என்று சம கால இறை நேசரான கீழக்கரை பல்லாக்கு  பலாஹி வலியுல்லாஹ் அவர்களால் சிறப்பிக்கப்பட்டவர்கள்.....


மௌலிஷா ஹஜரத் என்று எல்லோராலும் மரியாதையுடன் அழைக்கப்பட்டவர்கள்.....


பாக்கியங்கள் நிறைந்த பாக்கியாத்துல் ஸாலிஹாத்தில் முதல் மாணவராக சேர்ந்து பாக்கியாத்தின் நிறுவனர் அஃலா ஹஜரத் அவர்களிடம் பயிலும் பேறு பெற்று பட்டம் வாங்கியவர்கள்.....


இத்தகைய சிறப்புகள் பெற்றவர்.

அஸ்மியான் ராவுத்தரின்  மைந்தரான முஹம்மது ஹுஸைன் அவர்கள்.


பள்ளப்பட்டியில் பிறந்த இவர்களின் மூதாதையர்கள் மதீனாவிலிருந்து இந்தியாவில் குடியேறி கோல் கொண்டா.

(ஆந்திரா) கெங்குவார் பட்டி (மதுரை ஜில்லா) முதலிய இடங்களில் வாழ்ந்துள்ளார்கள்.


மௌலானா மௌலவி முஹம்மது காசீம் ஹஜரத்.அல்ஹாஜ் ஹாஃபீஸ் அப்துல் ஜாப்பார் ஹஜரத்.குர்ஆனின் குரல் ஆசிரியர் மௌலவி ஹாஃபீஸ் அல்ஹாஜ் அப்துல் வஹ்ஹாப் ஹஜரத்.ஆகிய மூவரும் அவர்களின் ஆண்மக்கள் ஆவார்கள் இரு பெண் மக்களும் உண்டு கிழக்கு பள்ளியின் துனை முத்தவல்லியாகவும் முதர்ரிஸாகவும் இமாமாகவும் தொடர்ந்து ஆயுள் வரை பணியாற்றினார்கள்....


அன்னம்பாரி அப்துல் வஹ்ஹாப் ஹஜரத் அவர்கள்.நைனார் முஹம்மது ஹஜரத் அவர்கள்.ஆத்தூர் முஹம்மது இப்ராஹீம் ஹஜரத் (தேவ்பந்தி)அவர்கள்.பள்ளப்பட்டி கத்தீப்ஷா ஹஜரத் அவர்கள்.

படேஷா ஹஜரத் அவர்கள் போன்ற முத்துக்களை தன் பிராதான மாணவர்களாக பெற்றவர்கள்.....


1924ல் வஃபாத்தான இவர்கள் பள்ளப்பட்டி மேற்கு பள்ளியில் அடக்கபெற்றார்கள்....


அவர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ராமலான் பிறை 28-ல்  பள்ளப்பட்டி கிழக்குபள்ளியில் குர்ஆன் கத்தம் ஓதி ஈசால் தவாப் செய்து தபரூக் வழங்கப்படு வருகிறது.


பாக்கியாத்தின் நிறுவனர் ஷம்சுல் உலமா அப்துல் வஹ்ஹாப் அஃலா ஹஜரத் அவர்கள் பள்ளப்பட்டிக்கு வருகை தந்த போது களிம்பு செய்யும் வைத்திய முறையை பற்றி கற்றுக்கொடுத்தார்கள்.


கட்டி புண் போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணி இது இன்று வரை அஸ்மியான் களிம்பு என்ற பெயரில் இவர்களின் வழித்தோன்றல்களின் மூலம் தயாரிக்கபடுகிறது.


அவர்களின் மூத்த புதல்வர் மௌலானா முஹம்மது காசீம் (ரஹ்) அவர்கள்.

பள்ளப்பட்டி காரைக்கால் நீடூர் சங்கரம் பந்தல் ஈரோடு போன்ற பெரும் மதராஸாகளில் முதல்வராக நீண்டகாலம் பனியாற்றி மதுரையில் காலமாகி அங்கு நூருதீன் தர்ஹாவில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.


அவர்களின் இரண்டாம் புதல்வர்

மதுரையில் குர்ஆனின் குரல் பத்திரிக்கையை நிர்வாகிறார்கள்.


மூன்றாம் புதல்வர் மௌலவி ஹாஜி ஹாஃபீஸ்  அப்துல் வஹ்ஹாப் அவர்கள்

ஐங்சனில் அஸ்மியான் ஷாப்பிங் பாரடைஸ் என்ற விலாசத்தில் வியாபாரம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱

ஆசிரிய ர்:-

அன்வர் பாஷா அன்வாரி

▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱