********************************

பள்ளபட்டி மேல் நிலைப் பள்ளி

********************************


கரூர் மாவட்டம் பள்ளபட்டியில் 1872ம் ஆண்டு முதல் மார்க்ககல்வியும் மூன்றாம் வகுப்புவரை பொதுகல்வியும் வழங்கும் மக்துமியா மாதரஸா இருந்து வருகிறது.


சில திண்ணை பள்ளிக்கூடங்களும் இருந்தன 200 வருட வரலாறு மிக்க முத்து வாத்தியார் பள்ளிக்கூடமும் நடைபெற்று வருகிறது.


இருந்தாலும் சிறுவர்கள் பெரும்பான்மையோரும் விதிவிலக்காக ஐந்தாவது வரையிலாவது படிக்கும் ஒரு சில மாணவர்களும் அதற்கு மேல் படிக்க ஆர்வம் இருந்தாலும் அதற்கான பள்ளி இல்லையே என்று வருந்தி கடைகளுக்கு சிப்பந்திகளாக பணி செய்ய அனுப்பி வைக்கும் பரிதாப சூழல் நிழவியது.


பெற்றோர்களில் பெரும்பாலோர் கல்வியின் மகத்துவம் தெரியாமல் நம்ம பிள்ளை படிச்சு கலெக்டர் உத்தியோகமோ அல்லது வக்கீல் வாதாட்டமோ செய்யவா போகிறார்கள் என்று கூறுவதன் மூலம் ஏதோ முன் எச்சரிக்கையாக தமது பிள்ளைகள் வழி தவறாமல் பாதுகாத்து இளம் பருவத்திலேயே பிழைப்பதற்கு வழிகாட்டுவதாக கருதி கடைகளுக்கு அனுப்பினர்.


சுற்றுப்புற கிராம பெற்றோர்களோ தன் குழந்தைகளை கால்நடை மேய்க்கவும் காடு தோட்ட வேலைகள்  பயிற்றுவித்து ஆரம்பக்கல்வி கூட கிடைக்காமல் இருந்தனர்.


இந்த சூழலில் மற்ற ஊர்களில் இயங்கும் கல்வி நிலையங்களையும் அதனால் மேன்மை அடையும் சமுதாய மக்களையும் கவனித்தவரும் மக்கள் சேவையே தன் குறிக்கோளாக கொண்டவரும்.

வாப்பு T.M..V.அப்துல் மஜீது ராவுத்தர் அவர்கள்.


நம் ஊரில் ஒரு உயர்நிலைபள்ளியை துவக்கிட வேண்டும் என்று இரவு பகல் என்று இடைவிடாமல் சிந்தித்து திட்டமிட்டார்.


அதன் முடிவாக


பள்ளபட்டியின் பிரதான பிரமுகர்கள். செல்வந்தர்கள்.சமூக நலன் நாடும் நல் உள்ளங்கள்.எனப் பலரையும் ஒருங்கினைத்து ஒரு உயர்நிலைப்பள்ளியை உருவாக்க நிதி திரட்டி பள்ளிக்கான இடம் கட்டிடங்கள் கட்டி திருச்சி ஜில்லா போர்டு நிர்வாகத்தில் ஒப்படைத்து விட தீர்மானித்தனர்.


அதற்கான சிலவு தொகையில் பாதியை மானியமாக அரசிடம் பெற்று பள்ளியை நிர்வாகிக்கும் பொருப்பை அவர்களிடமே ஒப்படைப்பது என்று முடிவெடுத்தனர்.


1954 ஜுன் 20ம் நாளன்று நிதி வழங்கியவர்கள் பிரதான பிரமுகர்கள் மற்றும் சுற்றுபப்புற கிராம பெரியவர்கள் என 200 பேர்களை அழைத்து பள்ளி கட்டிடகுழு ஒன்று அமைக்கப்பட்டது.


தொடர்ந்து கட்டிடபணிகள் துவக்கி பள்ளியின் கட்டமைப்பு விரைவாக முடிக்கபட்டிருந்தன.


எனவே பள்ளியை துவக்கி நிர்வாகிக்க வேண்டிய நிர்பந்த சூழல் நிலவியது.


இந்த நிலையில் புது சிக்கல் உருவாகியது திருச்சி ஜில்லா போர்டு பள்ளியின் நிர்வாகத்தை ஏற்று நடத்த மறுத்ததுடன் பாதி மானிய தொகையையும் தர ஒப்பவில்லை.


அதன் காரணமாக வேறு வழியில்லாமல்.20:05:1955 ஆம் நாளன்று பள்ளப்பட்டி எஜுகேஸன் சொசைட்டி  உருவாக்கப்பட்டது.


1955 மே 21ம் நாள் முதல் ஹாஜி T.M.V. அப்துல் மஜீது ராவுத்தர்  அவர்களை தாளாளராக கொண்டு.

மற்றநிர்வாகிகளும்  உறுப்பினர்களும் ஒருங்கினைந்து.

பள்ளப்பட்டி மிடில் ஸ்கூல் என்று பெயரிட்டு பள்ளியை துவக்க ஏற்பாடு செய்தனர்.


                

பள்ளி கட்டிடத்திற்க்காக பெற்ற கடன் தொகை ஒரு பக்கம் சுமையாகவும் பள்ளி செலவினங்களை  சமாளித்து நடத்துவது மறுபக்கசுமையாகவும் இருந்தது அவற்றை எல்லாம் உறுப்பினர்களே சமாளித்து  இலட்சிய நடை பயின்றனர். 


23:05:1955ஆம் நாள்தான் பள்ளப்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார மக்களுக்கு அறிவுக்கண் திறக்க கல்வி ஒளி கொண்டு பள்ளி என்ற விளக்கு ஏற்றிய நாள்.


அன்றையதினம்  ஊரும் சுற்றுப்புறமும் ஒன்று திரண்டு  பள்ளி திறப்புவிழா  கோலாகரமாக கொண்டாடப்பட்டது.


அதில் பள்ளி கட்டிடத்தை நிர்மானிக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து பேருதவி செய்த. கல்வித்துறை  இயக்குனர்.

திருவாளர் N.D. சுந்தர வடிவேலு M.A.L.T அவர்கள் பள்ளியை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.


தமிழஞர் திருமிகு கி.ஆ.பெ. விஸ்வநாதம் அவர்களும்.

கோவை கல்வித்துறை டிவிசன் இன்ஸ்பெக்டர் திரு V.Tடைட்டஸ் M.A..M.Litt.B.Tஅவர்களும். 

திருச்சி மாவட்ட கல்வி அதிகாரி திரு ப.  வேதக்கண்ணு M.A.B.Tஅவர்களும்.

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முதல்வர் ஜனாப் M.J முஹம்மதுசையத் M.A.L.T அவர்களும். 

மற்றும் பலரும் பங்கேற்று சிறப்பித்தனர்.


20:6:1956 ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதல் உயர் நிலைப்பள்ளியாக உயர்த்தப்பட்டு நமது கல்வி சேவையாளர்கள் கண்ட கனவு நினைவாகியது.


உயர்நிலை பள்ளிக்கான அரசு அங்கீகாரத்திற்கு வைப்புத்தொகை செலுத்தவேண்டிய நிலையில்.

ஈடாக செலுத்த 7000: மாதிப்புள்ள தன் சொத்தை நற்கொடையாக எழுதி வைத்த உன்னத மனிதர் நமது நகரத்தந்தை ஹாஜி 

T.M.V.அப்துல் மஜீது அவர்கள்.


மேலும் கடனாக பள்ளிக்கு வழங்கியிருந்த பத்து ஆயிரம் ரூபாயையும் பள்ளிக்கே நன்கொடையாகவழங்கிய வள்ளல்

அன்றைய நிலையில் கொடுக்கப்பட்ட இந்த தொகை இன்றைய மதிப்பில் எவ்வளவு என்பதை சிந்திக்கவும்.


உயர்நிலைப்பள்ளி வரையிலான

இடம்.கட்டிடங்கள். கிணறு. விளையாட்டுத்திடல்.

என பல்வேறு தேவைககையும் நிறைவேற்றியதால் பள்ளி நிர்வாகம் கடன் பட்டு கடுமையான நிதி நெருக்கடியில் தின்டாடியது.


பள்ளி ஆசிரியர் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கவும் நிதி பற்றாக்குறை நிலவியது.


ரூபாய் 80 ஆயிரம் மதிப்பில் பள்ளியின் கட்டிடபணிகளை சிறப்பாக தரமுடன் அழகுடனும் கட்டித்தந்தவரும் பள்ளி உறுப்பினர்களில் ஒருவருமான.

ஹாஜி A.C அப்துல் சலாம் அவர்களுக்கு சுமார் 12 ஆயிரம் தர முடியாமல் இருந்தது. 


அந்த தொகையை பெறுமனது படைத்த கொடை வள்ளல் அதை நன்கொடையாக பள்ளிக்கே வழங்கி இன்றும் அதைஅறிந்தவர்கள் மனதில் வாழ்கிறார்.


அன்று கடுமையான நிதி பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய.

கல்வி தந்தை ஹாஜி T.M.V. அப்துல் மஜீது அவர்கள் பட்ட கஸ்டம் சொல்லில் அடங்காது.


பள்ளி மாணவர்களை உடன் அழைத்து கொண்டு  தெரு தெருவாக துண்டேந்தி வசூல் செய்வார்.


"கற்கை நன்றே! கற்கை நன்றே!

பிச்சைபுகினும் கற்கை நன்றே!


என்ற வரிகளை அவர் சப்தமிட்டு முழங்க உடன் வரும் மாணவர்களும் பெரும் குரலில் உறக்ககூறுவர்.


பள்ளி மாணவர்களுடன் தோழமையுடன் பழகுவார் அவர்களுடன் விளையாடுவார்.


பொது அறிவு நூல்களை படிக்கதூண்டுவார் மாணவர்களை ஊக்குவிக்க அவரே புத்தகங்களை அன்பளிப்பார். 


கிராமங்களுக்குசென்று  அங்கு படிக்காமல் இருக்கும் பிள்ளைகளை கட்டாயப்படுத்தி அழைத்து வந்து பள்ளியில் படிக்க ஆவண செய்வார்.


உள்ளுர்  கிராம மாணவ மாணவியர்களுக்கு இலவச பாட புத்தகங்கள்  உணவு உடை  என்று பல்வேறு உதவிகளை சுயமாக வழங்கி உதவியுள்ளார்.


இந்த ஊரில் ஹாஜியார் என்றால்  அது மஜீது ஹாஜியார் மட்டும்தான் நன்றியுடன் இன்றும் கூறக்கேட்கலாம்.


பள்ளி தொடக்கவிழாவில் 

முத்தமிழ் காவலர் திருமிகு கி.ஆ.பெ விஸ்வநாதம் அவர்கள்  உங்களுக்கு எத்தனை குழந்தைகள் என்றுகேட்க.

அதற்கு ஹாஜியார் அவர்கள் தற்போது 216 வரும் ஆண்டுகளில் ஆயிரக்கணக்கில் இருக்கும் என்று பதில் கூறினார்.


பல்வேறு அரசியல் தலைவர்கள் அறிஞர்களை எல்லாம் பள்ளிக்கு அழைத்துவந்த பெருமை அவரையே சாரும்.


பள்ளியின் நூல் நிலையத்தை அன்றைய தமிழக முதல்வர்  கர்ம வீரர் கு. காமராஜ் அவர்களை அழைத்து வந்து திறக்கச்செய்தார்.


ஹாஜியார் பதவி விலகளுக்கு பின் அல்ஹாஜ் T.S.அப்துல் சலாம் அவர்கள் தாளாளராக தேர்வு செய்யபட்டார்.


ஹாஜி T.S.A அவர்கள் தாளாளராக சில வருடங்களுக்கு பிறகு.

மீண்டும் ஹாஜி T.M.V அப்துல் மஜீது அவர்கள் தலைவராக பொருப்பேற்று அவரது மறைவுவரை செயல்பட்டார்.


1979 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் நாளன்று ஏற்காட்டில் மறைந்து பள்ளப்பட்டியில் நல்லடக்கம் செய்யப்பட்டார்.


நன்றி:- பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி பொன் விழா ஆண்டு  மலர்.