《《《《《《《《《《《《《《《《《《《《《《《《《《《《《《

இந்தியாவே பள்ளப்பட்டியை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்த நோய்

《《《《《《《《《《《《《《《《《《《《《《《《《《《《《《


சமீபத்தில் கொரானா நோய் உலகமெங்கும் பரவி மனிதர்களை அச்சப்பட வைத்தது அது இந்தியாவிலும் எதிரொலித்து பள்ளப்பட்டியிலும் அதன் தாக்கம் ஏற்பட்டதை நாம் அறிவோம்.


இதே போல் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் பிளேக் என்ற நோய் இந்தியாவில் பரவி அது தமிழகத்தையும் பயமுறுத்தியது.


அப்போது அந்த நோய் பள்ளப்பட்டியிலும் பரவியது அப்போது நடந்த சம்பவத்தின் தொகுப்பே இக்கட்டுரை.


1994-95 கால கட்டத்தில் இந்தியாவில் குறிப்பாக குஜராத் மாநிலம் சூரத் நகரில் பிளேக் நோய் பரவி பல ஆயிரம் மக்கள் மடிந்தார்கள்.


நாடெங்கும் ஒரு வித அச்சம் நிலவியது மற்ற மாநிலங்களிலும் பரவி விடுமோ என்ற கவலையின் ரேகை அனைவர்கள் முகத்திலும் நிழலாடியது.


மற்ற மாநிலங்களில் அந்த நோய் பரவாமல் இருக்க அந்த அந்த மாநில அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தது.


அந்த வரிசையில்.


தமிழ்நாடும் நடவடிக்கை எடுத்து மாநிலத்திற்குள் நோய் பரவாமல் இருக்க கண்காணித்தது இந்த நிலையில். பள்ளபட்டியை சார்ந்த ஒருவர் சூரத் நகரில் கடை வைத்து இருந்தார்.


அவருக்கு அங்கு காய்ச்சல் ஏற்பட்டு அவர் ஊர் வந்து விட்டார் இங்கு வந்த பிறகு நமதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற மருத்துவமனைக்கு சென்றார்.


பரிசோதனை செய்து பார்த்ததில் அவருக்கு பிளேக் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு

அரசுக்கு இந்த செய்தியை தெரிவிக்கப்பட்டது


அன்றைய வாணொலியில் தொலைக்காட்சியில் தமிழகத்தில் பிளேக் நோய் என்று முக்கிய செய்தியாக வாசிக்கப்பட்டது.


டெல்லி தூர்தர்ஷன் ஹிந்தி செய்திகளிலும் பள்ளபட்டி பெயர் சொல்லி செய்தி வாசிக்கப்பட்டது.


பிபிசி வானொலியிலும் செய்தி வந்தது.


அதனால் பரபரப்பு ஏற்பட்டது .


தமிழ்நாடே அச்சத்தில் பள்ளபட்டியின் பக்கம் பார்வையை திருப்பியது.


அரசின் முழு கவனமும் பள்ளப்பட்டி பக்கம் திரும்பி ஒரே பரபரப்பு ஏற்பட்டது.


திருச்சி மாவட்ட ஆட்சி தலைவருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது (அப்போது கரூர் மாவட்டம் துவக்கப்படவில்லை)


மாவட்ட ஆட்சி தலைவர் பள்ளப்பட்டி வந்து தங்கி பல முன்னெச்சரிக்கை  நடவடிக்கை உத்தரவுகளை பிறப்பித்து நம்ம அக்பர் டாக்டர் தலைமையில் குழு அமைத்து இரவு பகல் வைத்தியம் பண்ணினார்கள்.


பள்ளப்பட்டி நகர் முழுவதையும் சுத்தப்படுத்தி மருந்து தெளித்து சுத்தம் சுத்தம்  என்று பரபரப்பாகவும் அச்சத்துடனும் ஊரே காட்சி அளித்தது.


எங்கு திரும்பினாலும் மருந்து வாடை.


இந்த நிலையில் மேலும் ஒருவர் அதே சூரத்தில் இருந்து ஊர் வந்தார் அவருக்கும் அதே நோய் கண்டறியப்பட்டது மாநிலம் மேலும் பரபரப்பு அடைந்தது.


இந்த இருவரையும் நமதூர் அரசு மருத்துவமனையில் கடைசியில் இருக்கும்  ஒரு தனி அறையில் வைத்து சிகிச்சை நடைபெற்றது.