பள்ளப்பட்டியின் பிரபலமான. ஒரு பெருந்தகை பல ஆண்டுகள் பள்ளப்பட்டி பஞ்சாயத்து போர்டு சேர்மனாக இருந்து நற்சேவைகள் பல செய்துள்ளார்...
பள்ளப்பட்டி மேற்கு தெரு பெரிய பள்ளிக்கு சொந்தமான காலி நிலத்தில் பல வீடுகளை கட்டிவாடகைமூலம் பள்ளியின் வருமானத்தை உயர்த்தினார்....
பள்ளியின் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்த "லோக்கல் பண்ட்" ஆஸ்பத்திரி ஊர் மக்களின் தேவைக்கு போதுமான அளவு இல்லாத குறையை போக்க நல்தொரு வசதியான கட்டிடத்தை அமைத்து அதன் மூலம் மக்கள் நற்பயன் அடைய வேண்டும் என்பதற்காக இடம் பார்த்துக்கொண்டு இருக்கும் நேரத்தில் அல்லாஹ் அவர் வாழ்நாளை முடித்து விட்டான்
(இன்னாலில்லாஹி)
தந்தையின் இந்த உயர்ந்த எண்ணத்தை பூர்த்தி செய்வதற்காக அவரின் மகன்களாகிய ஜனாப்T.M.V ஹாஜி அப்துல் அஜீஸ்.
T.M.V .ஹாஜி அப்துல் மஜீது ஆகிய இருவரும் பொதுப்பணியில் தங்கள் பொருளையும் வாழ்நாளையும் தியாகம் செய்தவர்கள்.
மற்ற சகோதர்கள் ஆதரவிலும்
ஊர் மக்களுக்கும் சுற்று வட்டார கிராம மக்களுக்கும் என்றும் பயன் தரும் நல்ல தரமான. மருத்துவ மனையை ஏற்படுத்த திட்டமிட்டனர்.
அத்தியாவசியமான கட்டிடங்களை கட்ட தீர்மானித்தபோது சேலாதி ராசப்பா ராவுத்தர் . ஊக்கர் .காதர்பாட்ஷா ராவுத்தர். ஊக்கர் ஜைனுல் ஆபிதீன் ராவுத்தர் .
பூணைக்கண்ணன் அப்பாஸ் ராவுத்தர்
பூணைக்கண்ணன் யாக்கூப் ராவுத்தர் இவர்களுடன் மற்றும் நெருங்கிய உறவினர்களும் இதில் பங்கு பெற ஆர்வம் செலுத்தி பொருள் உதவி செய்ய முன் வந்தனர்..
நான்கு ஏக்கர் புறம்போக்கு இடத்தில் ஆஸ்பத்திரி கட்ட ஜில்லா போர்டில் அனுமதியும் பெற்றார்கள்.
திருச்சி ஜில்லா போர்டு தலைவரான உயர்திரு B.வெங்கடாசலம் பிள்ளை B.A.B.L.
M.L.A அவர்கள் தலைமையில் 30:4:1945 ல் அடிக்கல் நாட்டு விழா சிற ப்பாக நடைபெற்றது....