கிழக்கு பள்ளி
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
அன்ஜுமனே தாயத்துல் இஸ்லாம் (கிழக்குபள்ளி)
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
பள்ளப்பட்டி பெருநகரின் மைய பகுதியில் இரு பெரும் மினாராக்களை கொண்டு காட்சி அளிக்கும் இந்த பள்ளி.
பள்ளப்பட்டி நகரையே எழிலுறச் செய்கிறது.
வெளியூரில் இருந்து நகரை நோக்கி வருகின்ற விசுவாசிகளின் உள்ளத்தில் பக்தியின் உணர்வை உண்டுபன்னும் அளவுக்குதோற்றம் அமையபெற்றுள்ளது.
மக்களால் கிழக்கு பள்ளி என்று அழைக்கப்படும் இப்பள்ளி.
நகரின் இரண்டாவது பெரிய மஸ்ஜிதாக இந்த மஹல்லா வாசிகளால் 1905 ஆம் ஆண்டு தாயித்துல் இஸ்லாம் அன்ஜுமன் என்ற சபையினரால் நிறுவப்பட்டது.
அதற்கு கீரனூர் சக்கரை முஹம்மது அவர்களை முத்தவல்லியாகவும்.
அஸ்மியான் ஆலீம்ஷா என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்டவர்களும் வலித்தன்மை பெற்றவர்களுமான.
மறியாதைக்குறிய மௌலவி அஸ்மியான் முஹம்மது ஹுசைன் ஆலீம்ஷா அவர்களை உதவி முத்தவல்லியாகவும்.
கொண்டு பெரும் மனம் படைத்தவர்களால் வக்பு செய்யப்பட்ட நிலத்தில் கூரைகொட்டகை அமைத்து தொழுகை நடத்திவந்தார்கள்.
கூரைப்பள்ளியின் மூன்று வயதுகள் நிறைவுற்ற நேரத்தில் 12-03-1908 ஆம் நாள் அந்த மஸ்ஜிதையும், மதரஸாவையும் கெட்டி மச்சுக் கட்டிடமாக மாற்றும் பணி இறையருளால் துவங்கியது. அன்றைய கையிருப்பு ரூ. 127-0-09.
பின்னர் கெட்டி கட்டிடமாக கட்டப்பட்டது.
அதன் பின் வந்த முத்தவல்லிகளில் குறிப்பாக ஆத்தூர் ஹாஜி செல்லக்கனிஅவர்கள் மிகப்பெரும் சொத்துக்களை இப்பள்ளிக்கு வஃக்ப் செய்துள்ளார்.
அவர்களின் மூத்த புதல்வர் ஹாஜி அப்துல் சலாம் அவர்கள் இப்பள்ளியில் உதவி முத்தவல்லியாக இருந்து மஸ்ஜிதின் இரண்டாவது பகுதியை விரிவாகியும் இன்னும் பல நல்ல காரியங்களை இப் பள்ளிக்கு செய்துள்ளார்.
இதன் பின்னர் முத்தவல்லியாக 1960 ஆம் ஆண்டு தேர்வு பெற்ற சின்னாரத்த C.K.E.
ஹாஜி முஹம்மது ஹனீப் அவர்கள் காலத்தில் செயலாளரான P.M.முஹம்மது சுல்தான் ஷா அவர்களால் இன்றைய நிர்வாக அமைப்பை ஏற்படுத்தி.
பிற்கால பள்ளி விஸ்தரிப்புக்கு நிலம் வாங்கியும் நிர்வாகத்தை சீராக செயல்படுத்தி வந்தார்கள்.
I.C.D. என்று அழைக்கப்படும் C.A. ஹாஜி ஷேக் தாவூது அவர்களும் பொருளாளராக இருந்து பேருதவி செய்துள்ளார்கள்.
சுல்தான் ஷா அவர்கள் வஃபாத்தான பிறகு.
செயலாளராக பொறுப்பேற்ற கணக்க ஹாஜி K.M. அப்துல் ரஹீம் அவர்கள் பள்ளியின் பொருளாதார மேம்பாட்டுக்கு அரும் பாடு பட்டார்கள்.
தலையூர் T.P. அப்துல் சமது அவர்களாலும்.
உதவி செயலாளர் மோதி
M.M.அப்பாஸ் அவர்கள் துனை முயற்சி யிலும் பொது மக்களின் ஒத்துழைப்புடன் பள்ளியை ஏறக்குறைய முன்னிருந்த அளவு விஸ்தரித்தது குறிப்பிடத்தக்கது.
இப் பள்ளியில் மேற் குறிப்பிட்ட அஸ்மியான் ஆலீம்ஸா அவர்களும் அவர்களின்.
கேரளத்து மாணவராம்
கண்ணியமிக்க நைனா முஹம்மது ஹஜரத் போன்ற வலித்தன்மையுடைய ஆலீம் பெருமக்களும் ஆலீம்ஸா அவர்களின் தலைமகனார் அரபி கல்லூரிகளில் ஆசிரியராக இருந்த மார்க்க மேதை அஸ்மியான் அ.மு. முஹம்மது காசிம் ஹஜரத் அவர்களும் அவர் தம் இளவலும் குர் ஆனின் குரல் ஆசிரியருமான அ.மு. அப்துல் ஜப்பார் ஹஜரத்அவர்கள்.
மற்றும்.
நாடறிந்த ஆலீமான அன்னம்பாரி அப்துல் வஹ்ஹாப் ஹஜரத் அவர்களும் பல்வேறு துறைகளில் திறன் பெற்ற ஆலீம் பெருமக்களும் இப் பள்ளியிலும் இதை சார்ந்த அரபி மதர்ஸா விலும் பணியாற்றியுள்ளார்கள்.
தூய எண்ணத்தோடும், இறை பக்தியோடும், இறையச்சத்தோடும் துவக்கப்பட்ட அந்த மஸ்ஜிதின் முதல் இமாமாக மர்ஹும் முஹ்யித்தீன் பாஷா சாஹிப் [ரஹ்] அவர்கள் 24-03-1905 முதல் 08-10-1912 வரை பணியாற்றி வரலாறு படைத்துள்ளார்கள்.
அதன்பின் அந்த முதல் முத்தவல்லியின் பாசத்திற்கும் - பேரன்பிற்கும் உரித்தானவரும் வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்தில் ஷம்சுல் உலமா அஃலா ஹள்ரத் நவ்வரல்லாஹு மர்க்கதஹு அவர்களின் பொற்கரத்தால் '
பாகவி ' ஸனது பெற்ற மாணவர்களில் முதல் குழுவில் இடம் பெற்றவரும், '
ஸலாத்துல் முஸாபிர் ' எனும் அரபுத் தமிழ் நூலின் ஆசிரியருமான ' மௌலிசா ஹள்ரத் ' என்று பொது மக்களால் அன்போடு அழைக்கப்பட்டவருமான பள்ளபட்டி மர்ஹூம் அஸ்மியான் மவ்லானா மவ்லவி முஹம்மது ஹுஸைன் ஹள்ரத் நவ்வரல்லாஹு மர்க்கதஹு அவர்கள் 08-10-1912 அன்று அந்த கிழக்கு பள்ளிவாசலின் இமாமாக பொறுப்பேற்று சுமார் 20 ஆண்டு காலத்திற்கு மேல் புகழ்சேர்க்கும் வண்ணம் இமாமாகவும், கிழக்கு மஸ்ஜிதில் நடைபெற்ற அரபுக்கல்லூரியின் பேராசிரியராகவும் பணியாற்றினார்கள்.
அத்தோடு பள்ளிவாசலின் கட்டுமானப் பணியிலும் முன்நின்று தம் உழைப்பையும், தம் தகுதியையும் பயன்படுத்தி
பள்ளிவாசலின் இன்றைய முழு உள்பள்ளி, அதையொட்டியுள்ள கீழ்புறம் சுமார் 8அடி அகலமுள்ள வெளிப்பள்ளியையும் நிறைவுப்படுத்தினார்கள்.
அவர்களுக்கு அன்றைய மாத் சம்பளம் ரூ. 19-0-0.அன்னாருக்குப்பின் அவர்களிடமே அதே அரபுக்கல்லூரியிலேயே ' மவ்லவீ ' வகுப்பு வரை கல்விகற்று பயிற்சி பெற்ற அல்லாமா ஸுபி நைனார் முஹம்மது ஹள்ரத் நவ்வரல்லாஹு மர்க்கதஹு அவர்கள் இமாமாகவும் அரபுக்கல்லூரியின் முதர்ரிஸாகவும் பொறுப்பேற்று பணியாற்றி சிறப்பித்தார்கள்.
அதற்குப் பின் மர்ஹூம் அஸ்மியான் அல்லாமா முஹம்மது ஹுசைன் ஹள்ரத் நவ்வரல்லாஹு மர்க்கதஹு அவர்களின் இரண்டாவது புதல்வர் மர்ஹூம் அல்லாமா அ.மு. அப்துல் ஜப்பார் ஹள்ரத் பாகவி அவர்கள் இமாமாகவும், முதர்ரிஸாகவும் சுமார் 9 ஆண்டு காலங்களுக்கு மேல் பணியாற்றி புகழ் படைத்தார்கள்.
மேலும் பள்ளபட்டி மர்ஹூம் ஷைகுல் ஹதீஸ் அல்லாமா முஹம்மது காசிம் ஹள்ரத் பாகவி [ரஹ்] அவர்களும் முதர்ரிஸாக சில ஆண்டு காலம் பணியாற்றினார்கள்.
பள்ளபட்டி அன்னம்பாரி அல்லாமா அப்துல் வஹாப் ஹள்ரத் [ரஹ்]அவர்களும்,
பள்ளபட்டி ஜாமிஆ இஸ்லாமியா உஸ்வத்துல் ஹஸனாவின் நிறுவனர் மவ்லானா அப்துற் ரஹீம் ஹள்ரத் ரஷாதி அவர்களின் அருமை தந்தையும், இன்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் ' ஹயாத்துல் வலி ' இறை நேசச் செல்வருமாகிய அல்லாமா அப்துல் ஹை நக்காதி பாகவி ஹள்ரத் கிப்லா அவர்களும்,அன்னாரோடு இணைந்து, பள்ளபட்டி டிப்ஸ் [T.B.S.] ஹள்ரத் என பள்ளபட்டி மக்களால் அன்போடு அழைக்கப்படுபவருமான.
மர்ஹூம் மவ்லானா T.B.ஷாகுல் ஹமீது ஹள்ரத் கிப்லா அவர்களும். பள்ளபட்டி புர்கானியா ஹிப்ளு கல்லூரியின் நிறுவனரும், நிர்வாகியுமான மர்ஹூம் கம்பத்து மவ்லானா ஷாஹுல் ஹமீது ஹள்ரத் [ரஹ்] அவர்களும் மிகச் சிறப்போடு பணியாற்றி புகழ் சேர்த்தனர்.
இப் பள்ளியை ஒட்டி மாணவர்களுக்கு இலவச உணவு தங்குமிடத்துடன் மதரஸா தாயித்துல் இஸ்லாம் எனும் அரபி மதரஸா ஒன்றும் நடந்து வருகிறது.
இதில் பயின்ற மாணவர்கள் ஆலீமாகளாகவும் ஹாஃபீஸ்களாகவும். எழுத்தாளர்களாகவும். ஏற்றம் பெற்று இந்தியாவெங்கும்வலம் வந்து இப் பள்ளிக்கும் இந்த ஊருக்கும் பெருமை சேர்க்கிறார்கள்.
தகவல்:-
கிழக் கு பள்ளியின் பதிவு செய்யப்பட்ட வரலாறு.
ஆசிரியர்:-
அன்வர் பாஷா அன்வாரி.