✦✧✧✧✧✦✦✧✧✧✧✦✦✧✧✧✧✦✦✧✧✧✧
பள்ளப்பட்டியில் குர்ஆனை மனனம் செய்து ஹாபீஸாக வாழ்ந்த சமய சமூகத்தை சார்ந்தவர்.
✦✧✧✧✧✦✦✧✧✧✧✦✦✧✧✧✧✦✦✧✧✧✧
சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இஸ்லாமியர்கள் நிறைந்து வாழும் பள்ளப்பட்டியில் குர்ஆனையும் ஹதீஸ்களையும் நபி ஸல்லலாஹ் அலைவஸ்ஸலம் அவர்களை பற்றிய பைத்களையும் மனனம் செய்தவர்கள் ஏராளம்.
குர்ஆனை மனனம் செய்தவர்களை ஹாபீஸ் என்று பட்டம் வழங்கி அழைப்பது வழக்கம்.
இஸ்லாமியர்கள் மட்டும் தான் ஹாபீஸாக இருப்பார்கள்.
ஆனால் நமதூரில் பிறந்து வாழ்ந்து மறைந்த சமய சமூகத்தை சார்ந்த ஒரு பெரியவர் குர்ஆனையும் நபி ஸல்லலாஹ் அவர்களை பற்றிய பைத்களையும் மனனம் செய்து
ஹாபீஸ் ஆகவும் விளங்கி சமய நல்லினக்கத்திற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து மறைந்தார் அவரை பற்றிய சிறப்பு தொகுப்பே இது..
சுமார் 300 வருடங்களாக நம் மக்களின் கல்வி கண்ணை திறந்து கடந்த பத்து தலைமுறையாக கல்வி சேவையே குறிக்கோளாக எந்த கட்டணமும் பெறாமல் இலவசக் கல்வியாக நமதூரில் முத்த வாத்தியார் ஸ்கூல் என்று அழைக்கப்படும்.
மருதா முஸ்லீம் உதவி பெறும் ஆரம்பப் பள்ளி என்ற ஒரு பள்ளிக்கூடம் நடந்து வருவதை நாம் அறிவோம்.
அந்த பள்ளியில் அன்று முதல் இன்று வரை பல ஆயிரம் பேர்கள் படித்து இன்று சமூகத்தில் பெரும் தொழிலதிபர்களாகவும் மருத்துவர்களாகவும் சமூக சேவகர்களாகவும் அரசியல்வாதிகளாகவும்
இன்னும் பிறதுறைகளின் வல்லுனர்களாகவும் நல்ல நிலையில் வலம் வருகிறார்கள்.
அதில் பல பேர்கள் மறைந்தும் விட்டார்கள்.
சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் சப்பானி வாத்தியார் என்ற ஆசிரியர் மூலம் துவக்கப்பட்ட பள்ளியில் அவரை தொடர்ந்து அவரின் குடும்பத்தை சார்ந்தவர்கள் தொடர்ந்து அந்த பள்ளியை நடத்தி வருகிறார்கள்.
அந்த வரிசையில் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன் மருதா கவுண்டர் என்ற பெரியவர் அந்த பள்ளியை நடத்தினார்.
இந்த நிலையில் இவர் இஸ்லாமிய பெரியோர்களிடம் மத வேற்றுமை இல்லாமல் மிகவும் நெருக்கமாக இருப்பார்
இந்த நெருக்கத்தின் காரணமாக மருதா கவுண்டர் அவர்கள் குர்ஆனையும் நபி பெருமானாரின் புகழ் மாலை (பைத்)யும் மனப்பாடம் செய்து குர்ஆனையும் மனனம் செய்த ஹாபீஸாகவும் இருந்தார்கள்.
இருப்பினும் மனதளவில் இஸ்லாமியராகவும் தோற்றத்தில் தன் பெயரை மாற்றாமலும் தான் சார்ந்த சமூகத்திலேயே தன் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார்..
இவர் கடைவீதிகளிலும் கந்தூரி கமிட்டி கல்லிலும் அமர்ந்து தினசரி மாலை நேரங்களில் தன் கம்பீர குரலில் குர்ஆனின் வசனங்களையும் பைத்களையும் ராகமாக பாடுவார்.
இவர் குரலை கேட்டவுடன் ரோட்டில் நடந்து செல்பவர்கள் அப்படியே மெய்மறந்து நின்று விடுவார்கள்.[நாம் நாகூர் ஹணீபா அவர்களின் குரலை கேட்டவுடன் எப்படி மெய் மறந்து விடுகிறோமோ அதே போல்]
அதே போல் இவர் ரோட்டில் நடந்து போனால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை எழுந்து நின்று தன் குருவுக்கு மறியாதை செலுத்துவார்கள்..
மருதா கவுண்டர் அவர்கள் பெரும்பாலும் மூத்த உலமாக்கள் மத்தியிலேயே அமர்ந்து இருப்பார் உலமாக்களும் வேற்றுமை இல்லாமல் இவரிடம் உறையாடுவார்கள்.
நமக்கெல்லாம் நன்கு அறிமுகமான மானிக்க சார் அவர்களின் பாட்டனார் ஆவார்
இவர் இப்படி மனதளவில் இஸ்லாமியராக வாழ்ந்த மருதா கவுண்டர் இறைவன் நாட்டப்படி ஒரு நாள் காலமானார்..
அவர்கள் குடும்ப வழக்கப்படி
இறந்தவர்களை எறியூட்டும் வழக்க முடையவர்களாக இருந்துள்ளார்கள்.
அதேபோல் மருதா கவுண்டர் சடலத்தையும் எறியூட்ட சடங்குகள் நடைபெற்ற நேரத்தில் நமதூரின் மூத்த உலமாக்கள் அவர்கள் இல்லம் சென்று இறந்தவருக்கு அஞ்சலி செய்துவிட்டு மருதா கவுண்டர் குர்ஆனையும் ஸல்லலாஹ் அலைவஸல்லம் அவர்களின் புகழ் மாலையும் மனப்பாடம் செய்தவர்.
குர்ஆனை மனதில் சுமந்தவர் அவரை எறித்தால் குர்ஆனையும் நபி பெருமானார் அவர்களின் புகழ் மாலையையும் எறித்தது போல் ஆகி விடும் அதனால் அவரை எரியூட்டவேண்டாம் அடக்கம் செய்யுங்கள் மீதியை அல்லாஹ் பார்த்துக்கொள்வான்
என்று நமதூர் ஆலீம்கள் கேட்டுக்கொண்டார்கள்.
அவர்களின் வேண்டுகோளை ஏற்ற இக்குடும்பத்தினர். அவரை நங்காஞ்சி நதிக்கரை ஓரம் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர்.
ஊர் மக்கள் அனைவர்களும் இறுதி அஞ்சலி செலுத்தி உலமாக்கள் முன்னிலையில் அடக்கம் செய்யப்பட்டது அன்றிலிருந்து இன்றுவரை இவர்கள் குடும்பத்தில் யார் இறந்தாலும் அடக்கம் செய்யும் முறையை கடைபிடிக்கிறார்கள்.
அதன் தொடர்ச்சியாகவே சமீபத்தில் மறைந்த மாணிக்கம் சார் அவர்களையும் நங்காஞ்சி நதிக்கறையோரம் அடக்கம் செய்யப்பட்டது..
சோழவந்தான் என்ற ஊரை பூர்வீகமாக கொண்டு பள்ளப்பட்டிக்கு குடி புகுந்து.
நம் இஸ்லாமிய சொந்தங்களுடன் இனைந்தே வாழ்க்கையை அமைத்தவர்கள் இந்த குடும்பத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்றிலிருந்து இன்றுவரை கோவில் தெருவில் தங்கள் இருப்பிடத்தை அமைத்துக்கொண்டு சமய நல்லினக்கத்திற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருகிறார்கள்..
நமக்கு நன்கு அறிமுகமான செல்லமுத்து சார் அவர்களும் நம் மதிப்பிற்குறிய அக்பர் டாக்டர் அவர்களும் ஒரு வகுப்பில் படித்த சக நண்பர்கள் அதனால் இன்றும் இருவர்களும் நேரில் சந்தித்தால் வாடா போடா என்று பேசுவதை காணலாம்.
அதே போல் முருகேசன் சார் அவர்களும் தன் சக நண்பனை சந்தித்தால் தோளில் கை போட்டு பேசும் வழக்கமுடையவராக திகழ்கிறார்.
சமய ஒற்றுமைக்கு இதை விட வேறு எதையும் எடுத்துக்காட்டாக கூறமுடியாது.
▱ ▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
ஆசிரியர்:-
அன்வர் பாஷா அன்வாரி
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱