⚞⚟⚞⚟⚞⚟⚞⚟⚞⚟⚞⚟⚞⚟⚞⚟⚞⚟⚞⚟⚞⚟⚞⚟⚞

நங்காஞ்சி நதியும் தரை பாலமும்

⚞⚟⚞⚟⚞⚟⚞⚟⚞⚟⚞⚟⚞⚟⚞⚟⚞⚟⚞⚟⚞⚟⚞⚟⚞


வரலாறு என்பது ஒரு வற்றாத அருவி.

அதில் ஈரம்பட்டு சிலிர்ப்பது ஒரு அறிவுசார் அனுபவமாகும்.


அதுவும் நாம் பிறந்த மண்ணின் வரலாற்றை தெரிந்துகொள்வதில் மிகப் பெரும் நீர் அருவியில் நீராடிய சந்தோசமும் புத்துணர்ச்சியும்  நிகழும் பல ஊர்களின் வரலாறுகளை நாம் அறிவோம்.


அந்த வரிசையில் நாம் பிறந்து வளர்ந்த நமதூரின் வரலாறுகள் முற்றிலும் பதியப்பெறாமல் காலச்சூழலில் கறைந்தும் மறைந்தும் விட்டது.


சில வரலாற்று சான்றுகள் இன்று வரை தொடரவும் செய்கிறது.


ஒரு ஊரைப்பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என்றால் அதன் கடந்த கால வரலாறுகளை தெரிந்தால் நிகழ்காலம் நம் முன்னால் முகம் பார்க்கும்  கண்ணாடி போல் தெள்ள தெளிவாக தெரியும்.


அந்த வரிசையில்..


பாரம்பரியமிக்க பள்ளப்பட்டியில் இருந்து கரூர் பழனி செல்ல அண்ணா நகர் பாலத்தை கடந்து செல்ல வேண்டும் இதை நாம் அனைவர்களும் அறிவோம்.


இன்று கார்களிலும் பஸ்களிலும் டூவீலர்களிலும் ஒரு நொடியில் பாலத்தை கடந்து பறந்து விடுகிறோம்.


ஆனால் சுமார் 80 வருடங்களுக்கு முன் பாலம் இல்லாத அந்த காலத்தில் எப்படி ஆற்றை கடந்தார்கள் எந்த வழியாக சென்றார்கள் என்பது நமக்கு தெரியாது.


அதை இன்று தெரிந்து கொள்வோம்.


பாலம் இல்லாத அந்த காலத்தில் நங்காஞ்சி நதியை கடக்க நதியில் இறங்கி மாட்டு வண்டிகளிலும் நடந்தும் கடக்க வேண்டிய நிலை அப்போது உபயோகப்படுத்திய ரோடு இன்றும் அதன் சுவடுகளை பதித்து சாட்சி சொல்கிறது.


பள்ளப்பட்டி அரசு மருத்துவமனையை ஒட்டிய மேற்கு பகுதியில் அதாவது இன்று இருக்கும் ஒரு பெரிய ஹோட்டல் நேர் எதிரில் ஆற்றை நோக்கி ஒரு சிதிலடைந்த ஒரு ரோடு செல்கிறது.


அதன் தொடர்ச்சி ஆற்றின் மறுபுறமும் தொடர்ந்து ஆற்றின் மறு கரையில் சௌந்திராபுரம் கோயி ல் நேர் எதிரே முடிவடைகிறது.