►.◄►.◄►.◄►.◄►.◄►.◄►.◄►.◄►.◄►.◄
ஆரணி பாவா [ரஹ்] அவர்கள்
►.◄►.◄►.◄►.◄►.◄►.◄►.◄►.◄►.◄►.◄
இருள் அகற்றும் ஒளிக்கதிராம் திருமறையை புவிக்களித்த ஒப்பற்ற இறைவனுக்கே புகழனைத்தும் ஈருலக நாதர் ஏகனின் தூதர் எம் பெருமானார் முஹம்மது நபி [ஸல்] அவர்கள் மீதும் அவர்கள் அடிச்சுவட்டை பின்பற்றி நடந்து காட்டிய சத்திய சஹாபாக்கள் நல்லோர்கள் இறைநேசர்கள் மீதும் நம் அனைவர்கள் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.
அன்பானவர்களே..
பாரம்பரியமிக்க பள்ளப்பட்டியில் அடங்கி அரசாளும் மஹான் ஷைய்கு அப்துல் காதிர் வலியுல்லாஹ் அவர்கள்.
முஹம்மது நபி [ஸல்] அவர்களின் வம்சாவழியை சார்ந்தவர்கள் என்பதை
அவர்களின் முன்னோர்களின் பெயர் பட்டியலை ஏற்கனவே நாம் பதிந்திருந்தோம்.
அந்த வரிசையில் ஆரணி பாவா ஹஜரத் என்று அன்போடும் மறியாதையோடும் அழைக்கப்பட்டு வரும் ஷைய்குனா மௌலானா அல் ஹாஜ் கமாலுதீன் ஹஜரத் @ஆரணி பாவா தாமத்பரகாதுஹும் அவர்களும் அதே சங்கிலி தொடரில் வந்தவர்கள் தான் என்று தெரியவருகிறது.
"இப்ராஹிமுல் பக்தாதி (ரஹ்)" என்ற பெரியாரின் மக்கள் பக்தாதில் இருந்து இஸ்லாத்தை பரப்ப இந்தியா வந்தவர்கள்...
இப்ராஹிமுல் பக்தாதி (ரஹ்) அவர்கள் எவ்வாறு இறைநேசச் செல்வர்களாக இருக்கிறார்களோ அது போன்றே அவர்களுடைய மைந்தர்கள் இருவரும் இளம் வயதிலேயே இறை நேசச் செல்வர்களாக பரிணமிக்கிறார்கள்.
இந்த நிலையில் பல வருடங்கள் கடந்தன முகம்மது நபியின் வம்சாவழியைச் சார்ந்த இப்ராஹிமுல் பக்தாதி (ரஹ்) அவர்களின்இரண்டு புதல்வர்கள் சுல்தான் கமாலுதீன் / சுல்தான் ஜமாலுத்தீன் தலைமையில் ஒரு குழுவினர் இஸ்லாத்தை பரப்ப கடல் வழியே பாரத திருநாட்டின் தென் கிழக்கு எல்லையில் உள்ள சேர நாட்டின் துறைமுகமாக முற்காலத்தில் பிரசித்தி பெற்ற கேரளக்கரையில் உள்ள கோழிக்கோடு வந்தார்கள்.
பாண்டிய மன்னன் சுந்தர பாண்டிய தேவன் ஆட்சி காலமான கி.பி.1284 (ஹிஜ்ரி737)ல் "காயலில்" வந்து குடியேறினார்கள்,இவர்கள் அங்கு இருந்த ஜும்ஆ பெரிய பள்ளியை பிரமாண்டமாக விரிவுபடுத்தி கட்டினார்கள்.,
இவர்கள் பகல் பொழுதில் வியாபாரிகளாகவும் இரவு நேரங்களில் சன் மார்க்கத்தை போதிப்பவர்களாகவும்
வாழ்ந்து மக்களின் வாழ்க்கையை நேர் வழி படுத்தி வாழ்ந்தனர்.
இவர்களின் நற்போதனையாலும் இவர்களின் தூய பழக்கங்கள் காரணமாகவும் இந்திய திரு நாட்டில் இஸ்லாம் பரவியது இப்படி இஸ்லாத்தை போதித்தவர்களில் முக்கியமானவர்களில் கமாலுதீன் /ஜமாலுதீன் அவர்கள் முதன்மை இடத்தில் இருக்கிறார்கள்.
இவர்களின் வம்சாவழியினர்
இந்தியாவில் பல பாகங்களுக்கு சென்று இஸ்லாத்தை போதித்தவர்கள்
இவர்கள் பாக்தாத்தில் இருந்து வந்தவர்கள் இதில் கமாலுதீன். ஜமாலுதீன் இந்த இருவர்களின் வாரிசுகளில் சில பேர்கள் பள்ளப்பட்டி அருகே உள்ள ஜமீன் ஆத்தூரில் தங்கி வாழ்ந்தார்கள்.
இந்த நிலையில் ஜமாலுதீன் வாரிசு தொடரில் மீரான்ஷா காதிரி அவர்களின் மகனாக ஜமீன் ஆத்தூரில் பிறந்து பள்ளப்பட்டியில் வாழ்ந்தார்கள்
அவர்களின் வாரிசுகளை ஷாஹா வகைரா என்றும் சாயபு வகைரா என்றும் அழைக்கிறோம்.
அப்போது கமாலுதீன் வாரிசுகளும் பள்ளப்பட்டியில் வாழ்ந்தனர் அவர்களின் வாரிசுகளை கமாலுதீன் சாயபு வகைரா என்று அழைக்கிறோம்.
அப்படி வாழ்ந்தவர்களின் வாரிசாக ஆரணி பாவா [ரஹ்] அவர்கள் சீர்காழி அருகே உள்ள மேலச்சாலை என்ற ஊரில் ஜமாலுதீன் ஜைனப்பீவி தம்பதியர்களின் மகனாக 1912 [ஹிஜ்ரி1330 பிறந்து ஆரணியில் வாழ்ந்து 24:08:2000 [ஹிஜ்ரி1421] ல் மறைந்தார்கள்.
ஆரணிபாவா மற்றும் மஹான் ஷைய்கு அப்துல் காதிர் வலியுல்லாஹ் அவர்களும் ஓரே மரத்தின் இரு கிளைகளாக பிரிந்தவர்கள்.
இதன் அடிப்படையில் ஆரணி பாவா [ரஹ்] அவர்களும் நபி பெருமானார் [ஸல்] அவர்களின் வம்சத்தை சார்ந்தவர்களே.
இந்த சங்கிலித்தொடரைக்கொண்டு
கமாலுதீன் @ ஆரணிபாவா [ரஹ்] அவர்களின் முன்னோர்கள் யார் யார் என்ற விபரங்களின் தொகுப்பை கீழே வரிசையாக பதிகிறோம்.
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
1 ஸையிதினா அமீருல் மூஃமினீன் இமாமுல் முஸ்லிமீன் ஈருலக தலைவர் அகிலத்தின் அருட்கொடை:உத்தம மாண்பாளர்:அமைதியின் தூதுவர் கருணையின் வடிவம் குர்ஆனை நமக்கு தந்தவர் நாளை நமக்காக வாதாட தகுதி பெற்றவர் மதினாவில் வாழும் அன்னலம் பெருமானார் ரசூலே கரீம் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
2 ஹஜரத் ஸய்யதினா இமாமுல் முஸ்லிமீன் சொர்க்கத்து வாலிபர்களின் தலைவர் நபிகளாரின் நறுமலர்: "உன்னதக் குருதி அநீதிக்கு எதிரான குரல்:கர்பலாவின் நாயகர்: ரசூலே கரீமின் பேரர் அன்னை பாத்திமா அலி ரலி தம்பதியர் அவர்கள் ஈன்றெடுத்த புதல்வர்.ஷுஹதா ஹஜரத் இமாம் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
3 வணக்கசாலிகளினது அழகு துஆக்களின் உறைவிடம் கர்பலாவை வென்ற சகிப்புத்தன்மை மறைமுகக் கொடையாளி மன்னிப்பின் சிகரம் ஹஜரத் சைய்யதினா இமாமுல் ஹுமாம் ஹஜரத் ஷாஹ் முஹம்மது ஜைனுலாபிதீன்(ரலி)
இப்னு அவர்கள்.
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
4 அறிவை வெளிக் கொணர்ந்தவர்:
நபிகளார் வாழ்த்திய உத்தமர் கல்வியின் வழிகாட்டி இறை வழி பாட்டின் உறைவிடம் ஹஜரத் சைய்யதினா இமாமுல் ஹுமாம் ஹஜரத் சையது ஷாஹ் முஹம்மது Bபாக்கீர் (ரலி) இப்னு அவர்கள்.
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
5 சத்தியத்தின் குரல்: அதி உன்னத வம்சாவளி அறிஞர்களின் ஆசிரியர்: "
மதீனாவின் பல்கலைக்கழகம்:
ஹஜரத் சைய்யதினா இமாமுல் ஹுமாம் சையது ஷாஹ் முஹம்மது ஜாபர் சாதிக் (ரலி) இப்னு அவர்கள்.
[ இவர்களின் நினைவாகவே நமதூரில் ஜாபர் சாதிக் என்று பெயர் வைத்தவர்கள் வீட்டில் பூரியான் பாத்திஹா கொடுக்கப்படுகிறது ]
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
6 கோபத்தை வென்றவர்: நன்மையால் வென்ற நற்குணாளர்: சிறையிலும் தொடர்ந்த சஜ்தாக்கள்: அதி உன்னத வணக்கசாலி: "ஹஜரத் சையதினா இமாமுல் ஹுமாம் சையது மூஷா காZஜிம் (ரலி) அவர்கள்.
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
7 அறிவின் மாபெரும் திறவுகோல்: நபிகளார் வாழ்த்திய உத்தமர்: ஹஜரத் சையதினா மௌலானா ஷாஹ் சையிது முஹம்மது கத்தஸல்லாஹு சிர்ரஹுல் அஜீஸ் இப்னு அவர்கள்.
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
8 ஞானிகளின் பேரரசர்: இருள் நீக்கும் ஒளிவிளக்கு: சத்தியத்தின் அடையாளம்: ஹஜரத் சுல்தானுல் ஆரிபீன் சையதினா மௌலானா
முஹம்மது ஹாZஜிம் கத்தஸல்லாஹு ஸிர் ரஹுல் அஜீஸ் இப்னு அவர்கள்.
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
9 ஹஜரத் சையதினா சையது ஷாஹ் சையது முஹம்மது ஸாபித்
கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் இப்னு அவர்கள்.
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
10 ஹஜரத் சையதினா சையது ஷாஹ்
முஹம்மது ஷம்ஷுதீன் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் இப்னு அவர்கள்.
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
11 ஹஜரத் சையதினா சையது ஷாஹ்
சையது முஹம்மது அலி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் இப்னு அவர்கள்.
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
12 ஹஜரத் சுல்தானுல் ஆரிஃபீன் சையது ஷாஹ் சையது அஹமது
கத்தஸல்லாஹுஸிர்ரஹுல் அஜீஸ் இப்னு அவர்கள்.
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
13 ஹஜரத் சையதினா சையது ஷாஹ்
முஹம்மது இப்ராஹீம் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் இப்னு அவர்கள்.
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
14 ஹஜரத் சையதினா சையது ஷாஹ்
முஹம்மது அலி கத்தஸல்லாஹு ஸிர்ரஹூல் அஜீஸ் இப்னு அவர்கள்.
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
15 ஹஜரத் சையதினா சையது ஷாஹ்
முஹம்மது ஹாதிம் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் இப்னு அவர்கள்.
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
16 ஹஜரத் சையதினா சையது ஷாஹ்
நூர்முஹம்மது கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் இப்னு அவர்கள்.
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
17 ஹஜரத் சுல்தானுல் ஆஃரிபீன்
குதவதுஸ ஸாலிஹீன் சையதினா சையது ஷரீப் முஹம்மது
கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அவர்கள்.(உள்ளாள் கேரளா)
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
18 ஹஜரத் சையதினா சையது ஷாஹ்
முஹம்மது ஜமாலுதீன் பகுதாதி கத்தஸல்லாஹு ஸிர் ரஹூல் அஜீஸ் இப்னு அவர்கள்.
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
19 ஹஜரத் சையதினா சையத் ஷாஹ்
முஹம்மது இப்ராஹீம் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் இப்னு அவர்கள்.
(அடக்கஸ்தளம் பாக்தாத்.)
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
20 ஹஜரத் ஷேகுல் மஷாயிக் சையதினா சையத் ஷாஹ் ஹாஜி முஹம்மது அலி கத்தஸல்லாஹு ஸிர் ரஹுல் அஜீஸ் இப்னு அவர்கள்
(அடக்கஸ்தளம் பம்பாய் சமுத்திரம்.
ஹாஜி அலி தர்ஹா)
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
21 ஹஜரத் ஷேகுல் மஷாயிக் சையத் ஷாஹ் முஹம்மது இஸ்மாயில்
கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் இப்னு அவர்கள்.
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
22 ஹஜரத் ஷேகுல் மஷாயிக் ஷாஹ் சையது முஹம்மது ஐதுருஸ் காதிரி
கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் இப்னு அவர்கள்.(அடக்கஸ்தளம் ஹைதராபாத்)
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
23 ஹஜரத் ஷேகுல் மஷாயிக் சையது ஷாஹ்.முஹம்மது ஜமாலுதீன் காதிரி
கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் இப்னு அவர்கள்.(அடக்கஸ்தளம்-- தாதா பஃஹாட் சிக்மங்களுர்)
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
24 ஹஜரத் ஷேகுல் மஷாயிக் சையதினா ஷாஹ் ஷேக் சையது முஹம்மது காதிரி
கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் இப்னு அவர்கள்.
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
25 ஹஜரத் ஷேகுல் மஷாயிக் குத்புல் ஆஃலம் சையதினா சையத் ஷாஹ்
முஹம்மது ஜமாலுதீன் பக்தாதி காதிரி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் இப்னு அவர்கள்.(அடக்கஸ்தளம் வைரவ நாங்கூர் திருமங்களம் கரியாபட்டி)
[இவர்களின் வழி தோன்றலே ஆரணி பாவா அவர்கள்]
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
26 ஹஜரத் சுல்தானுல் ஆரிபீன் ஷேகுல் மஷாயிக் சையது ஷாஹ் முஹம்மது கமாலுதீன் ஆலி காதிரி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் Fபி Bபலத்
அஜீஸ் இப்னு அவர்கள்.
(அடக்கஸ்தளம் - சுண்ணாம்பு நாங்கூர் மதுரை மாவட்டம் இவர்கள் கபர் 60அடி நீளம் கொண்டவை)
இந்த இரண்டு கிராமங்களும் மதுரை பக்கம் திருப்புவனம் அல்லது சுலைமான் ஸ்டேஷனில் இருந்து 10 K.M தூரத்தில் உள்ளது இவர்களின் கபரின் நீளம் நாற்பது முழம் இருந்தாக பெரியோர்களின் வாயிலாக பிரபலமாகி இருந்தது தற்சமயம் கபரின் நீளத்தில் வித்தியாசம் ஏற்பட்டுள்ளது.
இந்த இருவரைக்கொண்டு தான் தொடர்பு பக்தாதுடன் இணைகிறது.
[ இதில் முஹம்மது ஜமாலுதீன் பக்தாதி இவர்களின் வழித்தோன்றலே மஹான் ஷேக் அப்துல் காதிர் வலியுல்லாஹ் அவர்கள்.]
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
27 ஹஜரத் ஷேகுல் மஷாயிக் சையதினாஷேக் ஹுஸைன் மக்தூம் அZஜ்ஹாரிகாதிரி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் இப்னு அவர்கள்.
(அடக்கஸ்தளம் --மாஹிம் பம்பாய்)
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
28 ஹஜரத் ஷேகுல் மஷாயிக் சையத் ஷாஹ் பரீதுத்தீன் அZஜ்ஹாரி காதிரி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் இப்னு அவர்கள்.
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
29 ஷேக் மலிக் ஷாஹ் காதிரி இப்னு அவர்கள்.
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
30 ஷேக் ஜமாலுதீன் ஷாஹ் காதிரி இப்னு அவர்கள்.
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
31 காதிர் மீரா உசேன் இப்னு அவர்கள்.
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
32 சுல்தான் அப்துல் காதர் இப்னு அவர்கள்.
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
33 காஜி முஹம்மது மஃரூப் சாஹிப் [ஜமீன் ஆத்தூர்] இப்னு அவர்கள்.
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
34 முஹம்மது ஜமாலுதீன் இப்னு அவர்கள்.
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
35 அல்ஹாஜ் மௌலவி முஹம்மது கமாலுதீன் பாகவி இப்னு [ஆரணி பாவா அவர்கள்]
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
இந்த தொகுப்பு மஹான் ஷைய்கு அப்துல் காதிர் வலியுல்லாஹ் அவர்களின் முன்னோர்களின் பட்டியலிலும்.ஆரணி பாவா அவர்களின் மகனார் M.K.இப்ராஹீம் அவர்கள் 1991 ல் தொகுத்த ஈராக்கில் குடி கொண்ட இறை நேசச் செல்வர்கள் என்ற நூலில் இருந்தும் எடுத்து இரண்டையும் சரி பார்த்து பதியப்படுகிறது.
இதில் மஹான் ஷைய்குஅப்துல் காதிர் வலியுல்லாஹ் அவர்களின் முன்னோர்களின் பட்டியலில் இடம் பெற்றிருந்த சில பேர்களின் பெயர்கள்
ஆரணி பாவா அவர்களின் முன்னோர்கள் பட்டியலில் விடுபட்டு இருக்கிறது முடிந்தவ ரை சரி பார்த்து தொகுக்கப்பட்டுள்ளது.
மேலும் அல்லாஹ்வே அறிவான்.
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
ஆசிரியர்:-
அன்வர் பாஷா அன்வாரி
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱