◰◱◰◱◰◱◰◱◰◱◰◱◰◱◰◱◰◱◰◱◰◱
ஷைய்குஅப்துல் காதிரி ஆலீம் என்கிற
[ சூஃபி ஹஜரத் ]அவர்கள்
◰◱◰◱◰◱◰◱◰◱◰◱◰◱◰◱◰◱◰◱◰◱
மஹான் ஷைய்கு அப்துல் காதிர் வலியுல்லாஹ் அவர்களின் பேரர்
மக்தூமியா மதரஸா நிறுவனர்
ஷைய்கு அப்துல் அஜிஸ் என்ற புது சாஹிபு அவர்களின் மூத்த குமாரர் ஷைய்குஅப்துல் காதிரி ஆலீம் என்கிற [ சூஃபி ஹஜரத் ]அவர்கள்
இவர் தன் தந்தையிடமே அரபி மொழியின் ஆரம்ப இலக்கணம் அரபி இலக்கியம் சமய இலக்கியம் பயின்று பின்னர் சில நாட்கள் ஆன்மீகத்தையும் பயின்று அதில் கீர்த்தி பெற்று சிறந்து விளங்கினார்கள்.
அந்த நாட்களில் பணத்தை விட குணத்தையும் குலத்தையும் பெரிதாக போற்றி வந்தபடியால் அப்பொழுது நகரிலேயே மிகப்பெரும் பணக்காரர்களாக உள்ள நஞ்சமணியார் இல்லத்தில் பாத்திமா பீவி என்ற மங்கை நல்லாளை இவர் மணமுடித்தார்.
இவர்களது மாமனார் வீட்டில் 16 குதிரைகள் இருந்ததாகவும் அதனால் இவரது மூத்த மகனார் சாதாத் சாஹிப் அவர்கள் குதிரையிலேயே ஆத்தூர் சென்று வருவார் என்றும் கூறப்படுகிறது.
இறைஞானத்தில் திளைத்திருந்த இந்த மஹான் மக்களையும் இறைவனின் பால் அழைக்கும் திருப்பணியில் தங்களை இனைத்துக்கொண்டார்.
பெரும்பாலும் தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்யும் இவர்கள் கீழக்கரை சென்றால் இரவு விடிய பயானுக்கு இவர்களுக்காக ஏற்பாடு செய்தார்களாம்.
கீழக்கரையில் பள்ளி கொண்டுள்ள "ஆன்மீக பேரரசு"சதக்கத்துல்லா அப்பா அவர்கள் இயற்றிய."விதிரியா"
என்னும் நாயக காவியத்தில் ஒரே ஒரு செய்யுளுக்கு மட்டும் இவர்கள் மூன்று காலமாதம் வரை தொடர் விளக்க உரை ஆற்றியுள்ளார்கள்.
உள்ளத்தை கொள்ளை கொள்ளும் இவர்களுடைய உணர்வூட்டும் உபதேசத்தால் ஈர்க்கப்பட்ட அன்றைய நாட்களில் மாபெரும் இறைநேசச் செல்வர்களாக விளங்கிய.
மாப்பிள்ளை லெப்பை ஆலீம் இவர்கள் பால் பெரிதும் அன்பு செலுத்தி இவர்களுக்காக மிகவும் துவா இறைஞ்சுவார்கள்.
மாப்பிள்ளை லெப்பை ஆலீம் அவர்கள் அரபு தமிழிலேயே ஷாபியீ மத்ஹப்புடைய சட்ட தொகுப்பு நூல் வெளியிட்ட சமயம் மஹான் சூஃபி ஹஜரத் என்ற இப்பெரியவர்.
அவர்களை சந்திக்க அவர் இல்லம் சென்று அவருக்கு 5 ரூபாயை காணிக்கையாக வைத்தார்கள்.
அன்றைய காலத்தில் அது பெரிய தொகை
அதை அன்போடு ஏற்றுக்கொண்ட மாப்பிள்ளை லெப்பை ஆலீம் அவர்கள்.
தான் எழுதிய "மஙானீ"என்ற அரபு தமிழில் உள்ள ஷாபியீ மத்ஹப்புடைய சட்ட நூலை தந்து ஓர் அழகிய கவிதையை இயற்றினார்.
அது மாபெரும் சிறப்பும் கண்ணியமும் பொருந்திய சன்மார்க்க அறிஞர் அப்துல் அஜீஸ்(புது சாஹிபு) அவர்களின் அருமை புதல்வர் ஷைய்குஅப்துல் காதிரி ஆலீம் என்கிற (சூஃபி ஹஜரத்) "மஙானீ" என்ற அழகிய கிதாபை பெற்றார்கள்.
அல்லாஹ் அவர்களுக்கு அழகிய சாலிஹான காரியங்களை கொண்டு நீண்ட ஆயுளை நல்குவானாக என்பது அதன் பொருள்.
◰◱◰◱◰◱◰◱◰◱◰◱◰◱◰◱◰◱◰◱◰◱
சூஃபி ஹஜரத் அவர்கள் நிகழ்த்திய அற்புதம்:
◰◱◰◱◰◱◰◱◰◱◰◱◰◱◰◱◰◱◰◱◰◱
மஹான் சூஃபி ஹஜரத் காதிரி அவர்கள் தனது வாழ்வில் உன்னத நிலையை அடையப்பெற்றிருந்தார்கள்.
ஒரு பணக்கார பெண்மணியை மணமுடித்தும் அப் பெண்மணியிடமிருந்து ஒரு பொன்மணியைக்கூட பெறாதவர்களாக இருந்தார்கள்.
பொருளாசையோ பட்டம் பதவிகளின் மோகமோ அவர்களிடம் துளிகூட இல்லை.
வேளா வேளைக்கு சாப்பிட வேண்டும் என்ற. உணர்வு கூட அவர்களுக்கு இருக்காது.
உணவளிப்பவன் இறைவன் அவன் என்னை உண்ணவைத்தால் உண்பேன்.
இல்லையேல் அதுவும் அவனது நாட்டமே என்றுணர்வேன் என்று சொல்வார்கள்.
இன்னும்கொஞ்சம் கூடுதலாக தவ நிலை எய்தப் பெற்று உணவின் அளவும் அவனே செய்பவன் என்றெண்ணி உண்பதிலும் ஒரு அதிசய முறையை கையாள்வார்கள்.
ஆகார தட்டின் முன் அமர்ந்து வெறுமனே வீற்றிருப்பார் அவரது மனைவியார் உணவை வைத்து உண்ணீர் உண்ணீர்! என்று உபசாரவார்த்தை கூறினால் உண்ணத் துவங்குவார்.
எடுத்து வைக்க வைக்க போதுமென்று சொல்லாமல் சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்களாம்.
அவர்களது மனைவியார் உணவு தட்டையை பிடுங்கி கொண்டு கை கழுவீர் என்று சொன்னால் கை அலம்பி சென்று விடுவார்களாம் அந்த அளவு தவவலிமை கொண்டு இருந்ததினால் இவர்களுக்கு மறைவானவைகளை அறியக்கூடிய ஞானமும் வன விலங்குகளும் அச்சப்படும் கீர்த்தியும் இவர்களுக்கு வழங்கப்பட்டது.
ஒருமுறை இவர்கள் ஊரில் பிரயானம் செய்து கொண்டு இருக்கும்போது இவர்கள் அணிந்துள்ள பச்சை தலைப்பாகை தானகவே அவிழ்ந்து விழுந்து விட்டன.
உடனே வண்டி ஓட்டியை(அந்நாளில் கட்டை வண்டிதான் வாகனம்) கூப்பிட்டு ஊருக்கு திரும்பு என்றார்களாம்.
அவ்வாறு திரும்பி அவர்கள் ஊர் எல்லையில் நுழையும் போது அவரது தந்தையார் புது சாஹிப் அவர்களின் இன்னுயிர் பிரிகிறது.
பேஃக்ஸ் போன் வசதி இல்லாத நாட்களில் வெகு தூரத்தில் உள்ள அன்னாருக்கு தந்தையின் மரணச்செய்தி எட்டியுள்ளது விந்தையிலும் விந்தையன்றோ.
இன்னொரு முறை தனது ஏழு வயது மகன் முஹம்மது அப்துல் அஜீஸ் (அரபி ஹஜரத்) அவர்களுடன் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு கால்நடையாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
புனித மிகு ரமளான் மாதத்தின் அந்நாளில் தந்தையும் மகனும் நோன்பு நோற்ற நிலையில் நோன்பு திறப்பதற்குள் ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றிட வேண்டும் என்ற எண்ணத்தில் குறுக்கு வழியில் சென்று கொண்டிருந்தார்கள்.
அவர்கள் வழியில் செல்ல முயன்ற போதே ஒரு சிலர் தடுத்தார்கள் ஹஜரத் அவர்களே அவ்வழியே சிங்கம் புலி நிறைந்துள்ளது (சிங்கம்புணரி வரை உள்ள ஒரு காட்டுப்பகுதி) எனவே இருட்டு வேளையில் அவ்வழியே செல்வதை தவிப்பீர் என்றனர்.
அவர்களோ அவசியம் செல்ல வேண்டி இருப்பதால் தன் மகனை அழைத்துக்கொண்டு ஒத்தையடி பாதையில் சென்று கொண்டிருந்தார்களாம்.
அச்சமயம் அதே ஒத்தையடி பாதையில் எதிர் திசையில் மனித வாடையை கண்ட ஒரு புலி வேகமாக வந்து கொண்டிருந்தது.
புலியும் இவர்களை பார்த்து விட்டது
இவர்களும் அப்புலியை பார்த்து விட்டனர்.
சில அடி தூரத்தில் புலியும் இவர்களும் நேருக்கு நேர் நிற்கிறார்கள்.
இரு பக்கமும் முள் செடியாக இருந்ததினால் எங்கும் ஒதுங்க வழியில்லை.
இறைவன் நமக்கு துனை இருக்கும் போது அவனின் அற்ப படைப்பான இந்த புலியை பார்த்து நாம் ஏன் பயப்படவேண்டும் என்று நினைத்தார்.
எனவே அவர்களோ தன் மகனை இருக அணைத்து கொண்டு அதே இடத்தில் அப்படியே நின்றுவிட்டனர்.
வேகமாக வந்த புலி அவர்களை
கூர்ந்து பார்க்கிறது இவர்களும் அப்புலியை கூர்ந்து பார்க்கிறார்கள்.
இவர்களின் பார்வை புலியை கிலி பிடிக்க வைத்துவிட்டது தன் வேகத்தை குறைத்து இவர்களை கடந்தால் போதும் என்று அச்சப்பட்டு இவர்களை
உரசிக்கொண்டே சென்று மறைந்து விட்டது அதன் பிறகு இவர்கள் தன் பயணத்தை தொடர்ந்து சென்றனர்.
◰◱◰◱◰◱◰◱◰◱◰◱◰◱◰◱◰◱◰◱◰◱
அண்ணலாரின் அருளாசி
◰◱◰◱◰◱◰◱◰◱◰◱◰◱◰◱◰◱◰◱◰◱
மஹான் சூஃபி ஷைய்கு அப்துல் காதிர் ஹஜரத் காதிரி தாங்கள் வழமையாக. தினமும் ஓதிவரும் "தலாயிலும் கைராத்"
என்னும் நாயக சலவாத்தின் தொகுப்பு நூலின் காலியான பக்கங்களில் தாங்கள் கனவில் தரிசித்த பெரியார்களை பற்றியுள்ள குறிப்புகளை பதிவு செய்திருக்கிறார்கள்.
அதில் அண்ணலெம் பெருமானார் அருமை கோமான் (ஸல்) அவர்களை பல முறை கண்ட செய்திகளை தேதிவாரியாக குறிப்பிட்டுள்ளார்கள்.
ஒரு முறை 3 நாட்களில் 1 ல் அண்ணலம் பெருமனார்(ஸல்) அவர்களும்.
இன்னொன்றில் அவர்களின் அருமை புதல்வி பாத்திமா (ரலி) அவர்களும்.
பிரிதொன்றில் ஹஜரத் இப்ராஹீம் நபி (அலை) அவர்களும் கூறியதாக சொல்லி அதையும் சங்கேத மொழியில் குறிப்புக் காட்டியுள்ளார்கள்.
நான் மிக சிறியவனாக இருந்த பொழுது 17/18 வயதுப் பிராயத்தில் சுமார் 25/26 ஆண்டுகளுக்கு முன்பு அதைக் கண்டேன்.
அப்பொழுது அதை புரிந்து கொள்ளும் பக்குவமும் எனக்கு இல்லை இப்போது அந்த கிதாபு எங்கே என்று தெரியவில்லை.
◰◱◰◱◰◱◰◱◰◱◰◱◰◱◰◱◰◱◰◱◰◱
குடும்பம்
◰◱◰◱◰◱◰◱◰◱◰◱◰◱◰◱◰◱◰◱◰◱
அநேகமாக 1934 ஆம் ஆண்டு ரமளான் பிறை 11 ல் காலமான சூஃபி ஹஜரத் அவர்களுக்கு ஐந்து ஆண் மக்களும் ஐந்து பெண் மக்களும் உண்டு இதில் இலியாஸ் என்பவர் பழநி அருகில் பெரிச்சியாளையத்தில் தன் தந்தையுடன் பிரயாணம் செய்யும் பொழுது பேதி கண்டு மரணித்து இன்னொரு மகன் ஷாஹ் அப்துல் ஹமீது சாஹிப் அவர்கள் வேலூர் பாக்கியாத்தில் 6ம் ஆண்டு படிக்கும் போது மரணித்தார் அவரை அங்கேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
முத்த மகன் அப்துல் அஹத் என்கிற சாதாத் சாஹிப் இரண்டாவது மகன் முஹம்மது அப்துல் அஜீஸ் என்கிற அரபி ஹஜரத் இறுதி மகன் முஹம்மது அபூபக்கர் ஹஜரத் ஆகிய மூவரும் வேலூர் பாக்கியாத்தில் பட்டம் பெற்ற ஆலீம்களாவார்கள்.
இவர்களின் உடன் பிறந்த சகோதரிகளில் இருவரும் சூஃபி ஹஜரத் அன்னையாரும் அரபி மொழியில் சரளமாக உரையாடும் வல்லமை பெற்றவர்கள்.
புது சாஹிப் அவர்களுடைய சகோதரிகள் அரபி மொழியில் பதிவு செய்த குறிப்புகளும் பாடங்களின் விரிவுகளும் இன்று வரை இருக்கின்றன.
சூபி ஹஜரத் அர்களின் மூத்த மகன் சாதாத் சாஹிப் ஹஜரத் மஹான் சூஃபி ஹஜரத் என்கிற ஷாஹ் ஷைய்கு அப்துல் காதிரி ஹஜரத் அவர்களின் மூத்தமகன் சதாத் சாஹிப் என்கிற அப்துல் அஹத் ஹஜரத் ஆலீம் பாகவி அவர்களுக்கு குறிப்பிடதக்க ஒரு பெருமை உண்டு அது என்னவென்றால்.
இவர்கள் மஹான் புது சாஹிப் அவர்களால் வளர்க்கப்பட்டவர்கள்.
மேலும் அவர்கள் போன்ற சரீரமும் சாரிரமும் வாய்க்கப்பெற்ற சிம்மக்குரலும் புஜ பலமும் பொருந்திய மறப்போர் வீரர் போன்ற தோற்றமும் கொண்டவர்கள்.
தனது தம்பி அரபி ஹஜரத் அவர்களை விட 6 ஆண்டுகள் மூத்த இவர்கள்.
பாக்கியாத்தின் ஆரம்ப கால மாணவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது திண்டுக்கல் டவுன் பள்ளி நிறுவன பேராசிரியராக ஈராண்டு பணியாற்றினார்கள்.
அநேகமாக 1934 ஆம் ஆண்டு ரமளான் பிறை 11ல் காலமானார் என்று அறியப்படுகிறது.
சூஃபி ஷைய்கு அப்துல் காதிர் சாஹிப் காதிரி (சூஃபி ஹஜரத்) அவர்கள்.
தனது அந்திய காலத்தில் வஸிய்யத் செய்தபடி தனது தந்தை புது சாயபு அவர்கள் காலடியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.
இவர்கள் அடக்கஸ் தளம் தர்ஹா வளாகத்தில் அமையப்பெற்றுள்ளது.
வருடந்தோறும் உரு ஸ் நேரத்தில்
பூசி முழுகப்பட்டு இன்றுவரை திகழ்கிறது.
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
ஆசிரியர்:-
அன்வர் பாஷா அன்வாரி
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱