▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
பால்காரஅம்மா தன்நகையை கழட்டி கொடுத்த சம்பவம்.
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
கடந்த 30/40 வருடங்களுக்கு முன்பு வரை நாம் இன்று தினசரி வாங்கி சாப்பிடும் பால் பாக்கெட்டுகள் கிடையாது.
இன்று போல் பல நாட்கள் சென்ற பழைய பால்கள் அன்று கிடையாது.
சுத்தமான தூய்மையான ஆரோக்கியமான பால்களை கறந்த சூடு மாறாமல் பக்கத்து கிராமங்களில் இருந்து பால்காரர்கள் தூக்கு சட்டியில் கொண்டு வந்து வீட்டுக்கு வீடு பால் ஊற்றிச் செல்வார்கள்.
இதில் பெரும்பாலும்.
பால்கார அம்மா என்று சொல்லும் பெண்கள் அதிக அளவில் ஊரில் உள்ள வீடுகளுக்கு வழக்கமாக தொடர்ந்து பால் ஊற்றுவார்கள்.
காலையில் கறந்த பால்களை காலையிலும்.
மாலையில் கறந்த பால்களை மாலையிலும்.
குடித்து வளர்ந்தவர்கள் நாம் இன்று ஆரோக்கியமாக இருப்பதற்கு அவர்கள் கொடுத்த பாலும் ஒரு காரணம்.
அதனால் தான் இன்று வரை நல்ல ஆரோக்கியத்துடன் உலா வருகிறோம்.
அந்த பால்கார அம்மாக்கள் சில வீடுகளுக்கு வருடம் முழுவதும் தொடர்ந்து பால் ஊற்றுவார்கள்.
வீட்டில் புதிதாக குழந்தை பிறந்து விட்டால் அந்த குழந்தைகளுக்கு
சில வருடங்கள் தங்களிடம் இருக்கும் ஒரு குறிப்பிட்ட மாட்டின் பாலை மட்டும் அந்த குழந்தைக்கு தனியாக கொண்டு வந்து தொடர்ந்து கொடுப்பார்கள்.
காரணம்.
பாலை மாற்றி கொடுத்தால் குழந்தைக்கு அஜீரணக்கோளாறு வந்துவிடும் என்று அந்த குழந்தைகள் மீது அவ்வளவு அக்கரை இந்த பால்கார அம்மாக்களுக்கு இவை மட்டுமல்லாமல் தன் தோட்டத்தில் விளையும் கொய்யா மாதுளை சப்போட்டா
எலந்தைபழம் போன்ற பழங்களை பறித்து வழக்கமாக பால் ஊற்றும் வீடுகளில் வளரும் குழந்தைகளுக்கு இலவசமாக கொடுப்பார்கள்.
ஒரு சில நேரத்தில்.
பொண் வண்டுகளை பிடித்து வந்து ஆண் குழந்தைகளுக்கு கொடுத்து மகிழ்விப்பார்கள்.
ஒரு சில நேரங்களில்.
எங்கள் தோட்டத்திற்கு சுற்றுலா வாருங்கள் என்று நம் பெண்களை குடும்பத்துடன் அழைத்து சென்று தோட்டத்தை சுற்றி காண்பித்து அங்கு விளையும் காய் கனிகளை கொடுத்தும் பாதுகாப்பாகவும் ஊர் கொண்டு வந்தும் விடுவார்கள்.
அந்த குடும்பத்துடன் அப்படியே ஐக்கியமாகி உறவினர் போல் பழகுவார்கள் நம் வீட்டு பெண்களும் அவர்களிடன் அன்போடு பழகி.
அவர்களுக்கு காப்பி டீ போட்டு கொடுத்தும்.
ஒரு சில நேரத்தில் தன் வீட்டில் செய்யும் சுவையான உணவுகளை ஒரு தூக்கில் போட்டு அவர்கள் வீட்டுக்கு கொடுத்து அனுப்பியும் வீட்டு விஷேசங்களுக்கு அழைத்தும் மகிழ்வார்கள்.
இந்த நிலையில்
ஒரு பால்கார அம்மா சுமாரான வசதி படைத்த ஒரு வீட்டுக்கு பல வருடங்களாக தொடர்ந்து பால் ஊற்றி வந்து இருக்கிறார்.
அந்த வீட்டில் திருமண வயதில் இரண்டு பெண் பிள்ளைகளும் விளையாட்டு பருவத்தில் ஒரு ஆண் பிள்ளையும் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் அந்த வீட்டின் ஆண் தலைவர் திடீர் என மரணமடைந்து விட்டார்.
சில மாதங்கள் சென்று அந்த வீட்டில் உள்ள மூத்த பெண்ணுக்கு திருமணம் செய்ய மாப்பிள்ளை பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
ஒரு மாப்பிள்ளை இவர்களுக்கு பிடித்தும் விட்டது ஆனால் அந்த மாப்பிள்ளை வீட்டில் நகை அதிகமாக சீர் கேட்கிறார்கள்.
ஆனால் அந்த சீர் செய்ய இவர்களிடம் போதிய அளவு நகை இல்லை ஆனாலும் அந்த மாப்பிள்ளையை விட மனதும் இல்லை இந்த யோசனையில் அந்த பெண்ணின் தாய் கவலையில் முகம் வாடிய நிலையில்.
தினமும் இந்த பால்கார அம்மாவிடம் பால் வாங்கிக்கொண்டிருக்கிறார்.
இதை கவனித்த அந்த பால்கார அம்மா.
ஒரு நாள் ஏன் முகம் வாடிய நிலையில் கடந்த சில நாட்களாக இருக்கிறீர்கள் காரணம் என்ன என்னையும் உங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைத்து சொல்லுங்கள் என்று கேட்க பெண்ணுக்கு சீர் செய்ய முடியாத பொருளாதார சூல்நிலையை சொல்லி தன் வேதனையை கூறி உள்ளார்.
மாப்பிள்ளை யார்.
அவர் வீடு எது.
என்ன வகைரா.
என்று கேட்டு தெரிந்து.
கவலை படாதீர்கள் அதே மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து கொடுக்கலாம் நாளை நான் நல்ல தீர்வு சொல்கிறேன் என்று சொல்லி ஆறுதல் படுத்திவிட்டு சென்று விட்டார்.
இதில் ஒற்றுமை என்னவென்றால்.
அந்த மாப்பிள்ளை வீட்டிற்கும் இந்த அம்மாவே வழக்கமா பல வருடங்களாக பால் ஊற்றி வருகிறார் அந்த குடும்பத்தை பற்றியும் அந்த மாப்பிள்ளையை பற்றியும் நன்றாக அறிவார்.
இரவு முழுவதும் இந்த பால்கார அம்மாவிற்கு ஒரே சிந்தனை ஒரு முடிவு செய்து காலை கண் விழித்தார்.
பால்கார அம்மாவிற்கு வாரிசுகள் யாரும் கிடையாது கணவர் மட்டும் உள்ளார்.
தோட்டம் காடு சொந்தமாக உள்ளது.
இந்த அம்மாவிடம் 50 பவுன் நகையும் உள்ளது.
இந்த நிலையில் மறுநாள் விடிந்தவுடன்.
தன் கணவரிடம் நமக்கு தோட்டம் காடு உள்ளது அதை வைத்து நம் வாழ்க்கையை ஓட்டி விடலாம் நமக்கு வாரிசு கிடையாது.
ஆனால் என்னிடம் 50 பவுன் நகை உள்ளது.
நமக்கும் வயது ஏறிக்கொண்டே வருகிறது.
நம் காலத்திற்கு பிறகு இந்த நகைகளை வேறு யாரோ தான் அனுபவிக்கப் போகிறார்கள் அதனால் நான் உயிரோடு இருக்கும் போதே என் நகைகளை நல்லவழியில் செலவு செய்ய விரும்புகிறேன்
நான் பல வருடங்களாக பால் ஊற்றும் ஒரு குடும்பம் இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் பள்ளப்பட்டியில் உள்ளது.
அதனால் என் நகைகளை அவர்களுக்கு கொடுத்து விடலாம் என்று முடிவு செய்துள்ளேன் உங்கள் முடிவு என்ன என்று தன் விவசாய கணவரிடம் கேட்க அடுத்த வினாடி.அந்த கணவர் மனம் மகிழ்ந்து
உனக்கு எப்படி விருப்பமோ அப்படியே செய்து கொள் என்று அனுமதி அளித்து விட்டார்.
அனுமதி கிடைத்த அடுத்த நொடி தன் காதில் கழுத்தில் போட்டு இருந்த நகைகளையும் கழட்டி தன் வீட்டில் இருந்த அனைத்து நகைகளையும் எடுத்து ஒரு பையில் வைத்து.
மறுநாள் காலை எப்போது வரும் என்று எதிர்பார்த்து இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்து மறுநாள் அதிகாலை நேரத்தில் பால் ஊற்ற வரும் போது அந்த நகைகளை எடுத்து வந்து அந்த மணப்பெண்ணை அழைத்து தன் அருகே அமரவைத்து பிறந்தது முதல் இன்று வரை நான் கொடுத்த பால் குடித்து என் கண்முன்னால் வளர்ந்த பிள்ளை நீ...
அதனால் உனக்கு நல் வாழ்க்கை அமைத்து கொடுக்கும் பொருப்பு எனக்கும் உள்ளது.
உனக்கு பார்த்து இருக்கும் மாப்பிள்ளையும் அந்த குடும்பமும் நல்ல குடும்பம்.
நான் அந்த மாப்பிள்ளையை பற்றி நன்கு அறிவேன் அதே மாப்பிள்ளைக்கு உன்னை திருமணம் செய்து வைக்க நான் முடிவு செய்துவிட்டேன்.
உங்கள் அல்லாஹ் உதவியால் நீ சீறோடும் சிறப்போடும் வாழ்வாய் என்று தலையை நீவி தான் கொண்டு வந்த அனைத்து நகைகளையும் தன் கையாலேயே அந்த மணப்பெண்ணுக்கு அணிவித்து வாழ்த்தி.
உனக்கு திருமணம் முடிந்தும் நான் அங்கு வந்து பால் ஊற்றி தினமும் உன்னை பார்த்து செல்வேன் என்று சொல்லியும்.
உன் வருங்கால கணவரும் என்னிடம் பால் வாங்கி குடித்து வளர்ந்தவர் தான்.
நீயும் என்னிடம் பால் வாங்கி குடித்து வளர்ந்தவள் தான் இனி நீங்கள் இருவரும் என்னிடம் பால் வாங்கி குடித்து உங்களுக்கு பிறக்கும் குழந்தைக்கும் நானே பால் கொண்டு வந்து கொடுப்பேன் என்று வேடிக்கையாக பேசி இது என் பேத்திக்கு நான் செய்யும் சீர்வரிசை என்று சொல்லி அந்த பால்கார அ ம்மா மன நிறைவுடன் சென்றார்.
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
ஆசிரியர்
அன்வர் பாஷா அன்வாரி
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱