‎

‎✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦

‎மஸ்ஜிதே கலீல்யா.

‎[ ஷா நகர் பள்ளி  ]

‎✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦

‎

‎

‎பள்ளப்பட்டியின் மையப்பகுதியாக திகழும் ஷா நகர்  1955 ல் பக்கீரத்த  பி.எம். சுல்தான் ஷா அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது.  

‎

‎அப்போது அந்த பகுதியில் ஒரு மஸ்ஜித் நிறுவ சுமார் 13:500 சதுர அடி காலிமனையை பள்ளிவாசல் கட்ட பக்கீரத்த பி.எம். சுல்தான் அவர்கள் 20:05:1968 ம் வருடம் வக்ஃபு செய்தார்.

‎

‎அந்த இடத்தில் அழகிய மஸ்ஜித் ஒன்று  சின்னாரத்த ஹாஜி சி.கே.இ. முஹம்மது ஹனீப் அவர்கள் தன் சொந்த பணத்தில் 

‎அழகிய மினாராக்களுடன் கட்டத்துவங்கினார்.

‎

‎

‎கட்டுமான பணி நடந்து கொண்டிருக்கும் போது பள்ளியின் முகப்பு அழகாக அமைய நாலு மினாராக்களை அமைத்து மினாராக்கள்  கட்டுமான பணி நடக்கும் போது அதில் ஒரு மினாரா கட்டுமான பணியின் பாதியிலேயே காற்றடித்தால் ஆடத்துவங்கியது..

‎

‎இடிந்து விழுந்து விடாமல் இருக்க

‎நான்கு புறமும் கம்பிகள் கட்டி அந்த மினாரா இடிந்து விழாமல் பாதுகாக்கப்பட்டது...

‎

‎ஏன் ஆடுகிறது என்று காரணம் தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்தனர் ஆனால் மினாரா ஆடுவது நிற்கவில்லை....

‎

‎ஆன்மீக ரீதியில் பல காரணம் சொல்லப்பட்டநிலையில்.

‎ஹாஜி சி.கே.இ. முஹம்மது ஹனீப் அவர்களால் வெளியில் யாரிடமும் வசூலிக்காமல் முழுக்க முழுக்க தன் சொந்த நிதியில் பள்ளியை கட்டுகிறார்.

‎

‎ஒரு பள்ளியை கட்டி வக்ஃபு செய்யவேண்டும்  என்றால் தனி ஒருவரின் பணத்தில் இருந்து கட்டக்கூடாது.... 

‎

‎பொது மக்களிடமும் வசூல் பண்ணி பொது பள்ளியாகத்தான் கட்டவேண்டும்.

‎

‎ஆனால் இப்பள்ளி தனி ஒருவரின் பணத்தில் கட்டுவதால் மினாரா ஆடுகிறது என்று காரணம் சொல்லப்பட்டது...

‎

‎இது போல் பல காரணங்கள் சொல்லப்பட்ட நிலையில் அனைத்து காரணங்களை நிறைவேற்றப்பட்டு அதைத்தொடர்ந்து பொது மக்களிடமும் நிதி வசூலிக்கப்பட்டும்  

‎பள்ளியின் கட்டுமான பணி நிறைவடைந்தது.

‎

‎அதன் பிறகு மினாரா ஆடுவது நின்று விட்டது.

‎

‎மீதி வேலைகள் அனைத்தும் முடிந்து 27:04:1972 [ ஹிஜ்ரி 1392 ரபியுல் அவ்வல் மாதம் பிறை 12 ] அன்று

‎மஸ்ஜிதே கலீல்யா என்று பள்ளிக்கு பெயர் சூட்டி டெல்லி  ஹஜரத்ஜீ  மௌலானா இன் ஆமுல் ஹஸன் அவர்களால் முதல் தொழுகை நடைபெற்று பள்ளி துவக்கப்பட்டது.

‎

‎அதை தொடர்ந்து ஹாஜி சி.கே.இ. முஹம்மது ஹனீப் அவர்கள் முத்தவல்லியாக பொருப்பேற்று தன் சொந்த நிதியிலேயே பள்ளியை நிர்வாகித்தார்.

‎

‎அன்னார் அவர்கள் 24:01:1985 ம் வருடம் காலமானார் (இன்னாலில்லாஹி...)

‎அவர்களின் ஜனாஸாவை பள்ளியின் ஒரு இடத்தில் அடக்கம் செய்து மீஜான் கல் பொருத்தப்பட்டது.

‎

‎அதன் பிறகு அவரின் வாரிசுகள் பொருப்பேற்று தொடர்ந்து பள்ளியை நடத்தினார்கள்.

‎

‎சில வருடங்கள் சென்று நிர்வாக பொருப்பை மக்களிடம் ஒப்படைத்து விட்டனர்.

‎

‎அப்போது ஊர் முக்கியஸ்தர்கள் ஒன்று கூடி புதிய தலைவரை தேர்தெடுத்து மக்களிடையே சந்தா வசூல் செய்து தொடர்ந்து பள்ளி நடைபெற்று வருகிறது.

‎

‎அதை தொடர்ந்து பள்ளி நிர்வாகத்தின் கீழ் ரமலான் மாதத்தில் கஞ்சி காய்ச்சி விநியோகம் செய்ய கஞ்சி கமிட்டி என்று ஒரு கமிட்டி அமைத்து பொது மக்களிடம் நிதி வசூல் செய்து ரமலான் மாதம் முழுவதும் கஞ்சி விநியோகம் நடைபெற்று வருகிறது.

‎

‎ஷா நகர் மொஹல்லா பெரியதாக இருக்கும் காரணத்தினால் சுமார் 500 பேர்களுக்கு மேல் வரிசையாக நின்று கஞ்சி வாங்கி செல்கிறார்கள்.

‎

‎கஞ்சி வாங்கும்போது தள்ளு முள்ளு ஏற்படக்கூடாது என்று இரும்பு கம்பிகளை கொண்டு வரிசையில் வருவதற்கு வழிவகையும் செய்யப்பட்டுள்ளது.

‎

‎ரமலான் மாதம் முழுவதும் அனைவர்களுக்கும் கஞ்சி கிடைக்க வேண்டும் பற்றாக்குறை ஏற்பட்டு விடக்கூடாது என்ற நோக்கத்தில் தினசரி 5 பெரிய தேக்ஷாகளில் கஞ்சி காய்ச்சப்படுகிறது.

‎

‎

‎அதே போல் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு திறக்கும் நிகழ்சி (இப்தார்) க்கு பள்ளியிலேயே ஏற்பாடு செய்யப்பட்டு நோன்பு திறக்க ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.

‎

‎மஞ்சவள்ளி ஆற்காடு சௌகத்அலி அவர்கள் முத்தவல்லியாகவும்

‎அன்னம்பாரி சிக்சர் ஹாஜியார் அவர்கள் பொருளாலராகவும் பல ஆண்டுகள் சேவை செய்தார்கள்.

‎

‎அவர்களுக்கு வயதாகி விட்டதை கருத்தில் கொண்டு தன் முத்தவல்லி பதவியை லெவைன அன்சார் அலி [பொள்ளாச்சி பிங்கி ] அவர்களிடம் ஒப்படைத்தனர்.

‎

‎அன்னம்பாரி சிக்சர் ஹாஜியார் அவர்கள். கௌரவ தலைவராகவும் அன்சார் அலி முத்தவல்லியாகவும் பதவியேற்று பள்ளியை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.

‎

‎புது நிர்வாகத்தின் கீழ் பள்ளியை புது பொழிவுக்கு மாற்ற ஏற்பாடு செய்து பள்ளி முழுவதும் டைல்ஸ்கள் ஒட்டியும் பள்ளியில் A/C வசதியும் செய்து சேலம் அபூத்தாஹீர் ஹஜரத் அவர்களை அழைத்து மறு திறப்புவிழா செய்யப்பட்டது.

‎

‎பள்ளியின் தலைமை இமாமாக அப்துல் ரஹ்மான் சிராஜி ஹஜரத் அவர்கள் தொடர்ந்து பணி செய்து  வருகிறார்கள்.

‎

 ‎▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱

‎ஆசிரியர்:-

‎அன்வர் பாஷா அன்வாரி

‎▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱

‎

‎

‎