▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
பள்ளப்பட்டி முனீருல் இஸ்லாம்.
[ தெற்கு பள்ளி வரலாறு ]
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
தெற்கு பள்ளியின் ஆரம்ப சரித்திரம்.
பள்ளப்பட்டி தெற்கு மஹல்லாவில் ஒரு பள்ளி கட்டுவதற்காக 1940ம் ஆண்டு நாலு ஆயிரம்( 4000) ரூபாய்க்கு ஒரு இடத்தை பேசி முடித்து மௌலானா மௌலவி ஷதாத் ஹஜரத் அவர்கள் மூலம் முனீருல் இஸ்லாம் என்று பெயரிட்டு ஹாஜி C.K.முஹைய்யதீன் பாஷா அவர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் மூலமாக ரிஜிஸ்டர் செய்தும் பொது மக்களிடத்தில் வசூல் செய்து ரூபாய் 35 ஆயிரம் செலவில் 24:3:1941ம் வருடம் பள்ளிவாசல் கட்டிமுடிக்கப்பட்டது.
பள்ளியின் நிர்வாகம் சந்தா வசூல் முலமாக நடந்து வந்தது.
இப்பள்ளியின் ஆரம்ப இமாம்
குதரத்துல்லாஹ் சாஹிப் மகன்.
அப்துல் ஹை ஹஜரத் அவர்கள் ஒரு வருடமும். ஹாஜி மௌலவி K.A.அப்துல் அஹத் பாகவி அவர்கள் ஆறு வருடமும். மௌலவி ஜப்பார் ஹஜரத் அவர்கள் 25 வருடமும் பனியாற்றினார்கள்.
சந்தா வசூலில் மட்டும் நிர்வாகத்தை நடத்தமுடியாது என்பதை அறிந்த ஹாஜி முஹையதீன் பாஷா சாகிப் அவர்கள்.
இதற்கு தகுந்த சொத்தை ஏற்பாடு செய்ய முக்கியஸ்தர்களின் கூட்டத்தை கூட்டி.
முதன் முதலாக தமக்கு சொந்தமான அலங்கியம் என்ற ஊரில் வாங்கி இருந்த மூன்றரை ஏக்கர்கொண்ட நெல் வயலை ஹதியா செய்தார்கள்.
பிறகு
C.S ஹாஜி முஹம்மது இப்ராஹீம் அவர்களும் புதுக்கோட்டை தாவுத் மில் தாராருமான சேர்ந்து முப்பது ஆயிரத்துக்குள்ள பங்குகளை அளித்தார்கள்.
C.S.ஹாஜி அப்துல் குத்தூஸ் ராவுத்தர் குளித்தலையில் தனக்கு சொந்தமான பத்தரை ஏக்கர் அளவுள்ள நெல் வயலை ஹதியா செய்தார்கள்.
P.K. ஹபீப் அவர்களின் தாயார் ஹாஜியா சஹர்பான் பீவி அவர்கள் அலங்கியத்தில் தமக்கு சொந்தமான மூன்றரை ஏக்கர் அளவுள்ள வயலை ஹதியா செய்தார்கள்.
பிறகு அன்னம் பாரி சேக் அப்துல் காதிர் ராவுத்தர் அவர்கள் கொடுத்த ரூபாய் 2500ல் அலங்கியத்தில் ஒன்றரை ஏக்கர் அளவில் நெல் வயல் ஒன்று பள்ளிவாசலுக்காக வாங்கப்பட்டது.
இதன் பின் ஈரோடு பஜார் ரோட்டில் மெயின் கடைகளும்.பள்ளப்பட்டியில் தற்போது தெற்கு பள்ளிக்கு சொந்தமான மதரஸா கட்டிடமும்.ஹபீப் ஷாதி மஹால் கட்டிடமும்.காலி நிலமும்.
தெற்கு பங்களா காட்டில் ஆஜாத் நகர் என்ற இடத்தில் 2 பிளாட்(80க்கு84) அளவிலும்.
பள்ளிவாசலின் உள்புறமுள்ள வாழை தோட்டத்தின் பக்கத்தில் உள்ள வீடும் காலி நிலமும்.சாமையல் இடமும்குளிக்கும் ரூம் வரை உள்ள இடங்களும் வாங்கப்பட்டது.
சிக்கந்தர் ஜப்பார் வீடும் வாங்கப்பட்டது.
இந்த சொத்துக்கள் எதீம்களுக்கும் புதிய முஸ்லீம்களுக்கும் கல்வி போதிப்பதற்காகவும் பள்ளி நிர்வாகம் ஹதியா செய்யப்பட்டுள்ளது.
அதன் படி இங்கு ஆரம்பத்தில் ஓதி இன்று பெரிய ஆலீம்களாக தமிழகத்திலும் வெளி மாநிலங்களிலும் பணியாற்றி இப்பள்ளிக்கும் இந்த ஊருக்கும் பெருமை சேர்த்துகிறார்கள்.
பழமை மாறாமல் இன்று வரை அப்படியே கம்பீரமாக காட்சி தருகிறது இப்பள்ளி.
இப் பள்ளியில் ஜப்பார் ஹஜரத் அவர்கள் 25 ஆண்டுகளாக செய்த இமாமத் பணி மறக்க முடியாத காலச்சுவடுகள்.
முன்பெல்லாம் இப்பள்ளியில் நஃபில் தொழுது விட்டுத்தான் மணமகன் ஹாஜி ஹபீப் நினைவு ஷாதி மஹால் சென்று திருமணம் செய்வார்கள்.
ஹாஜி ஹபீப் ஷாதி மஹால் கட்டுவதற்கு முன் இப்பள்ளியில்தான் திருமணங்கள் நடைபெறும்.
இடப்பற்றாகுறையை போக்க பள்ளிக்கு சொந்தமான இடத்தில் இன்றைய ஷாதிமஹால் கட்டப்பட்டது.
ஷாதி மஹால் தெற்கு பள்ளிக்கு சொந்தமானது திருமணங்கள் நடைபெற முன்பதிவு தெற்கு பள்ளியில் தான் செ ய்யப்படுகிறது.
ஆசிரியர் அன்வர் பாஷா அன்வாரி