▨▨▨▨▨▨▨▨▨▨▨▨▨▨▨▨▨▨▨▨▨
பள்ளப்பட்டியின் அமைப்பு
▨▨▨▨▨▨▨▨▨▨▨▨▨▨▨▨▨▨▨▨▨
பள்ளப்பட்டி ....
இந்த ஊர் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டத்தில் கரூரில் இருந்து திண்டுக்கல் செல்லும் வழியில் திபள்ளப்பட்டியின் பரிணாமம் ருச்சி திண்டுக்கல் ஈரோடு மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ளது.
இந்த ஊர் மேற்கு பகுதியில் நங்காஞ்சி நதியும்.கிழக்கு பகுதியில் குப்பைக்கா ஓடை என்ற சிறு ஓடையும் தெற்கு பகுதியில் தூரத்தில் அழகாக காட்சி தரும் ரெங்கமலையும் அமைந்து ஊரின் எழில் மிகு தோற்றத்தை மேலும் அழகு படுத்துகிறது....
ஊருக்குள் நுழையும்போதே பள்ளிவாயில்களின் ஓங்கி உயர்ந்த மினாரக்கள் நம்மை வரவேற்கும் ஊருக்குள் நுழைந்த உடன் பேருந்து நிலைய உட்பகுதியிலேயே அமைந்து இருக்கும் பள்ளிவாயில் நம்மை தொழ அழைக்கும் ஊருக்குள் அமைந்து இருக்கும் ஊருக்குள் நடந்தால் இனம் புரியாத ஆனந்தம் ஏற்பட்டு ஒருவிதமான உணர்வு ஏற்படும்.
தெருவெங்கும் அஸ்ஸலாமு அலைக்கும் என்ற ஓசை முழங்க அனைவர்களும் கடந்து செல்வார்கள்.
பாங்கின் ஓசைஊரெங்கும் எதிரொலித்து தொழுகைக்கு நம்மை அழைக்கும் ஜும்மா தொழுகை நேரத்தில் ஊரில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களும் மூடி இருக்கும் காட்சி கண்களை விரிய செய்யும்.
தெருவெங்கும் தொப்பி அணிந்த சிறுவர்களின் விளையாட்டுக்கள் பரவசமூட்டும் மாலை நேரங்களில் அனைத்து வீடுகளிலிருந்தும் குர் ஆன் ஓதும் மெல்லிய ஓசைகள் காதில் ரீங்காரமிடும்.
தீன் மணம் கமழும் இந்த மண்ணில்
பல பெரியோர்கள் நல்லோர்கள் வலிமார்கள் மார்க்க மேதைகள் பாதம் பட்ட. வாழ்ந்து மறைந்த வாழ்ந்துகொண்டிருக்கிற பழமை வாய்ந்த இந்த ஊர்.
இப்படி பல சிறப்புக்கள் உள்ளடங்கிய பள்ளபட்டியின் வரலாறை இன்ஷா அல்லாஹ் தெரிந்து கொள்வோம்...
துவக்கத்தில் விவசாயத்தில் ஈடுபட்டிருந்த இவ்வூர் முஸ்லீம்கள்
பின்னர் ஜவுளி வாணிபத்தில் ஈடுபட்டு வட நாடு சென்று ஜவுளிகளை கொள்முதல் செய்து வந்து ஆறுமாதக் கடனுக்கு விற்று வரும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தனர்....
இத்தொழில் முறைக்கு தாவளம் என்று பெயர் இதன் காரணமாக இங்கு வேலை தேடி பலர் வந்து குடியேறியதால் இது நாளடைவில் பேரூராகிறது.
இன்றும் கூட எந்த ஊரில் இருந்து இங்கு வந்து குடியேறினார்களோ அந்த ஊர் பெயரிலேயே கம்பத்துவீடு பாளையத்தாம்வீடு திண்டுக்கல்லாம் வீடு.மஞ்சவளியாம் வீடு.ஈரோட்டாம் வீடு.கீரனூராம் வீடு.நத்தத்தாம் வீடு என்று வலம் வந்து பரம்பரை பரம்பரையாக குடும்பத்துடன் வசிக்கிறார்கள்.
மேலும் இங்குள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு பெயர் உள்ளது ...
அதை வகைரா என்று அழைக்கிறார்கள்..
உதாரணம் ....
சவ்வாஸ் வீடு.அன்னம்பாரி வீடு ஊக்கர் வீடு .மணியம் வீடு சின்னாரத்தவீடு நெட்டவான வீடு வாப்புவீடு கூலச்சி வீடு என்று பல பெயர்களில் அழைத்து வாழ்கிறார்கள்.
இங்கு பல பள்ளிவாயில்களும்.
ஆண்கள் மேல்நிலை பள்ளியும்..
பெண்கள் உயர் நிலை பள்ளியும்.
பெண்கள் அரபி கல்லூரியும்
பெண்கள் கலைக்கல்லூரியும்
பல துவக்கப்பள்ளிகளும்.
பல மதரஸாக்களும்.
ஒரு நூலகமும் உள்ளது..
மக்கள் தொகை சுமார் முப்பது ஆயிரத்தை தாண்டும் 99 சதவீதத்தினர் முஸ்லீம்களே மீதி உள்ள 1 சதவிதத்தினர் மாற்று மதத்தினர்....
மாற்றுமதத்தினர் வழிபாட்டுதளங்களான.ஒரு கோவிலும்.ஒரு சர்ச்சும் உள்ளது....
ஆண்கள் அனைவர்களும் வயது வித்தியாசம் இல்லாமல் தொப்பி அணிந்தே காணப்படுவார்கள்...
பெண்கள் புர்கா அணிந்தே வெளியில் செல்வார்கள்....
இங்கு ஓவ்வொரு ஆண்டும் ஈதுல் அல்ஹா ( பக்ரீத்) பெருநாளின்போது.
சுமார் நாற்பது ஆயிரம் முதல் ஐம்பது ஆயிரம் ஆடுகள் வரை குர்பானி கொடுப்பார்கள்
அவற்றின் தோல்களை விற்பனை செய்து வரும் பணத்திலிருந்து மதர்ஸாக்கள் நடத்தபடுகிறது...
அது பெரும் தொகையாகும்..
ரம்ஜான் காலத்தில் சிறுவர்கள் பெரியவர்கள் முதியோர்கள்ஆண்கள் பெண்கள் என்று அனைவர்களும் நோன்பு நோற்று தங்கள் கடமையை செய்வார்கள்....
அந்த நேரத்தில் ஊரே பக்தி மணம் கமழும் பெரும் பாலான பள்ளிகளில் நோன்பு கஞ்சி காய்ச்சி ஊற்றுவார்கள். அந்த கஞ்சி காய்ச்ச நான் நீ என்று போட்டி போட்டு நன்கொடை வழங்குவார்கள்.
இங்குள்ள பெரிய பள்ளி பழமையானது
அதை மேற்கு பள்ளி என்றும்பாவா பக்ருதீன் தர்ஹா பள்ளி என்றும் அழைக்கபடுகிறது...
ஜமீன் ஆத்தூரை சார்ந்த பிரபல பாக்கு வணிகரின் கொடைவளத்தால் நிர்மாணிக்கபட்டது இந்த பள்ளியை ஒட்டிய பகுதியிலேயே பொது கபருஸ்தானும் இருக்கிறது....
இதையடுத்து நூறுமீட்டர் தொலைவில் சின்ன பள்ளி என்று அழைக்கப்படும் மஸ்ஜித் இருக்கிறது ஹஜரத் லத்தீப்ஷா அவர்களின் முயற்சியில் நிர்மாணிக்கபட்டது.
ஊரின் மையபகுதியில் உள்ள கிழக்கு பள்ளி கீரணூர் சக்கரை முஹம்மது அவர்கள்முயற்சியால் கூறை கொட்டகையில் ஆரம்பித்து பின்னர் ஆத்தூர் செல்லக்கனி ஹாஜியார் அவர்களின் முயற்சியால் விரிவு படுத்தப்பட்டது....
தெற்கு பள்ளி சின்னாரத்த ஹாஜி இப்ராஹீம் ராவுத்தர்.
ஹாஜி அப்துல் குத்தூஸ் ராவுத்தர்
ஹாஜி அப்துல் மஜீது ராவுத்தர்.
ஹாஜி முகையத்தீன் பாஷா ராவுத்தர். ஆகியோரின் பெரும் முயற்சியாலும் கட்டப்பட்டது
ஷா நகர் பள்ளி வாயிலை நிர்மானித்து வழங்கியவர் சின்னாரத்த ஹாஜி முஹம்மது C.K.E. ஹனீஃப் ஆவார்
இவர் அடக்கஸ்தளம் பள்ளி வாயில் உள்பகுதியிலேயே உள்ளது.
1976 ல் பிரபல முஸ்லீம் லீக் அபிமானியான டான் இஸ்மாயில் அவர்களின் முயற்சியால் ஜன்னத்துல் பிஃதொவ்ஸ் பள்ளி நிர்மானிக்கபட்டது.
வடக்கு பள்ளியும் பேருந்து நிலைய பள்ளியும் பொதுமக்களால் நிர்மானிக்கபட்டவையாகும்.
இவ்வூரில் ஆண்கள் மேல்நிலை பள்ளியும்.அரசு மருத்துவ மனையும் குடிநீர் வசதியும் ஏற்பட பெரும் முயற்சி எடுத்துக்கொண்டவர் T.M.V. ஹாஜி அப்துல் மஜீது ஆவார் அவரை இவ்வூரின் நகர தந்தை என்றும் அழைக்கப்படுகிறார்...
P.K. ஹாஜி ஹபீப் அவர்கள் தர்ம சிந்தனையும் பொது நல சேவையும் நோக்கமாக கொண்டவர்.இவரை ஹபீப் ராஜா என்றும் அழைக்கபடுகிறார்.
இவரின் நினைவு சின்னங்களாக.ஹாஜி ஹபீப் திருமண கூடம் ஹபீப் பூங்கா ஆகியவை இருக்கின்றன.
(இன்று ஹபீப் பூங்கா இல்லை அந்த இடத்தில் பேருந்துநிலைய ஒரு பகுதியும் அதை ஒட்டிய சைக்கிள் ஸ்டாண்டும் மண் எண்ணை பூத்தும் இருக்கிறது) இவ்வூரின் வடக்கு பகுதியில் அமையப்பட்ட நகருக்கு ஹபீப் நகர் என்று அவர் பெயராலேயே வழங்கப்பட்டு வருகிறது.
P.M. சுல்தான்ஷா என்பவர் பொது நலப்பணியில் ஈடு பட்டதோடு தாயக சேவா சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் தலைவராகவும் இருந்து பணியாற்றினார் அவர் நினைவாக இவ்வூரின் கிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் பகுதிக்கு.
"ஷா நகர்" என்று பெயர் சூட்டி வழங்கப்பட்டுள்ளது.
பிரபல மார்க்க மேதைகளான மணிமொழி மௌலானா கலீலுர் ரஹ்மான் ஹஜரத் அவர்களும் திருமதீனா சரித்திரம் எழுதிய தொ.கு. அப்துல் கரீம் ஹஜரத் அவர்களும் தங்கள் சாஹிபு ஹஜரத் முஹம்மது காசிம் ஹஜரத் அவர்களும் இவ்வூரில் தோன்றியவர்களே..
இந்த ஊரில் ஷைய்கு அப்துல் காதிர் வலியுல்லாஹ்.அவர்கள் குத்புதீன் வலியுல்லாஹ் அவர்கள் முத்தப்பா ஷாஹிபு வலியுல்லாஹ்.அவர்கள்.
ஆகிய இறை நேசர்கள் அடங்கப்பெற்று தர்ஹாக்களாக எடுத்து கட்டப்பட்டு மக்கள் ஜியாரத் செய்து வருகிறார்கள்.
பள்ளப்பட்டி முஸ்லீம் கல்வி சங்கம் என்ற அமைப்பின் கீழ். உஸ்வத்துன் ஹஸனா ஓரியண்டல் அரபி பெண்கள் பள்ளியும்.
நர்ஸரி பள்ளியும் நடைபெறுகிறது.
மேலும் மக்கள் மன்றம்.அன்பு மன்றம் காயிதே மில்லத் மன்றம். மீலாது மன்றம் போன்ற மன்றங்களும் இங்கு இருந்து பொது சேவையில் ஈடுபடுகின்றன.
பிரண்ட்ஸ் பெடரேஷன் என்ற அமைப்பு 1990 முதல் இன்று வரை தொடர்ந்து செயல்பட்டு பல சாதனைகள் செய்து தனக்கென தனி இடத்தை பிடித்து அமைதியாக செயல் பட்டு வருகிறது.
இவைகளை தவிர இந்த ஊரில் இன்னும் பல மன்றங்களும் உள்ளன.
பாவா பஃக்ருதின் தர்ஹா பள்ளி
(மேற்கு பள்ளி.) இப் பள்ளி முன்னூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த பள்ளப்பட்டியின் முதல் பள்ளியாகும் இப்பள்ளியில் பல வலிமார்கள் நல்லோர்கள் இமாமத் பணி செய்தும் தொழவைத்தும் வருகை தந்தும் இருக்கிறார்கள்.
மிகவும் பழமை வாய்ந்த பள்ளியை புது பொழிவுடன் கடந்த சில வருடங்களுக்கு முன் புதிப்பித்து கட்டப்பட்டுள்ளது.
இப்பள்ளி அருகில் அமைந்திருக்கும் மஃதுமியா அரபி கல்லூரி தமிழகத்தின் தலை சிறந்த அரபி கல்லூரிகளின் ஒன்றாக உள்ளது..
ஆசிரியர்:- அன்வர் பாஷா அன்வாரி