✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦
சின்னப்பள்ளி
✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦
சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த
பாரம்பரியமிக்க நமதூரில் முதல் பள்ளி வாசலாக மேற்கு பெரிய பள்ளி திகழ்கிறது.
அதன் மிக அருகிலேயே சின்னப்பள்ளி என்று அழைக்கப்படும் மஸ்ஜிதே காதிரியா பள்ளி இருக்கிறது.
அன்று சிறிய கிராமமாக இருந்த ஊரில் மிக அருகிலேயே இரண்டு பள்ளிகள் அமைந்து இருப்பது நமக்கு ஆச்சரியத்தை உண்டு பன்னுகிறது.
சின்ன பள்ளியை உருவாக்கிய லத்தீப் ஹஜரத் அவர்கள்.
கொள்கை முரண்பாட்டால் சண்டை வந்து பிரிந்து தனி பள்ளியை அமைத்து தொழ வைத்தார்கள் என்று ஒரு கருத்து நம்மிடையே உள்ளது.
அதன் உண்மையை இன்றைய நாமும் அறிந்து கொள்வோம்.
மஸ்ஜிதே காதிரியா (சின்னப்பள்ளி) நிறுவனர்.மௌலானா மௌலவி V.M.அப்துல் லத்தீப் ஆலீம் அவர்கள்.
ரசூல் ( ஸல்) வழிமுறையில் வந்தவர்
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வம்சாவழியை சார்ந்தவர்களில் ஜமாலுதீன் கமாலுதீன் என்ற பெரியார்கள்
பாக்தாது நகரில் இருந்து இந்தியாவில் உள்ள கேரளா மாநிலத்தின் கடைசி ஊரும் கர்னாடக மாநிலத்தின் கடைசி பகுதியுமான பட்கல் எனும் ஊரில் வந்து வாழ்க்கை நடத்தினர் என்றும் அவர்களின் வாரிசுகள் பல பாகங்களுக்கு பரவி இஸ்லாத்தை போதித்தார்கள் என்று வரலாறு கூறுகிறது
அவர்களில் வாரிசுகளில் மீரான் ஷா காதிரி என்ற பெரியார் இவர்களுக்கு மூன்று மகன்கள் மூத்தவர் சையது அஹமது.
இரண்டாம் மகன் ஷைய்கு அப்துல் காதிர் வலியுல்லாஹ் அவர்கள் மூன்றாவது மகன் குலாம் அஹமது இவர்களது அடக்கஸ்தளம்
ஜன்னத்துல் முஅல்லா மக்காவில் உள்ளது இவர்களின் மகன் மீரான் ஹுசேன் ஷா காதிரி வெள்ளையப்பா ஷாஹிபு அவர்களின் மகனாக ஹிஜ்ரி 1280 பிறந்தார்கள்.
இவர்கள் மிகவும் மார்க்க பேனுதலுடன் தன் வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர்.
தாங்கள் வாழ்ந்த காலத்தில் பள்ளப்பட்டி மக்களை சீர்திருத்த பல முயற்சிகள் செய்து சீர் திருத்தம் செய்தவர்கள்.
அந்த நேரத்தில் இவர்கள் பட்ட கஸ்டங்கள் மிக கடுமையானவை.
அவர்கள் அல்லாஹ் விற்கு அஞ்சியவர்களாக மக்களை நேர்வழி படுத்த எடுத்த முயற்சிகள் எத்தனையோ அதில்.
திருமணம்.உடுத்தும் உடை
பழக்க வழக்கம் தொழுகை அனைத்தும் ஷரீஅத் படி நடக்க வழியுறுத்தினார்கள்.
அனைத்தும் தீனுக்காக அவர்கள்காட்டிய முத்தான வழிகள்.
சிறிது காலம் பள்ளப்பட்டி பஞ்சாயத்து போர்டு சேர்மனாகவும் பணியாற்றி ஊருக்கு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தியவர்.
மரக்கடை வைத்து வியாபாரமும் செய்து இருக்கிறார்கள்.
மேலும் பள்ளப்பட்டி பெரிய மதரஸாவில் உஸ்தாதாகவும் பணி புரிந்து மார்க்க கல்வியை மக்களுக்கு போதித்தார்கள்.
அன்றைய நேரத்தில் மேற்கு பள்ளியில் தொழுகைக்கான நேரம் வந்ததும் இவர்களும் மதரஸா மாணவர்களும் தொழுகையில் கலந்து கொள்வார்கள்.
அன்றைய பள்ளி இமாம்கள் ஜமாத்தாக தொழ வைத்து விடுவார்கள்.அப்போது தொழ வைத்தவர்கள் மார்க்க பேனுதல்படி எப்படி முறைபடி தொழ வேண்டும் என்று தெரியாமல் சில தவறுகளுடன் தொழ வைத்து வந்தார்கள்.
இதை கவனித்த லத்தீப் ஹஜரத் அவர்கள் நீங்கள் தப்பும் தவறுமாக தொழ வைக்கிறீர்கள் இது கூடாது தொழ வைப்பதற்கும் தொழுவதுக்கும் சில வரைமுறைகள் உள்ளது அதன் படி தொழ வைத்தால் தான் தொழுகை கூடும் என்று வற்புறுத்தினார்கள்.
அதை அப்போது தொழ வைத்துக் கொண்டிருந்தவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
அதனால் உங்கள் பின்னால் நான் நின்று தொழுதால் என் தொழுகையும் ஏற்றுக்கொள்ளாமல் போய்விடும் அதே போல் மதரஸாவில் ஓதும் மாணவர்களுக்கும் இப்படித்தான் தொழ வேண்டும் என்ற உண்மை தெரியாமல் போய் இவர்கள் ஓதி முடித்து இமாமாக பணி செய்யும் போதும் இதே வழி முறையைத்தான் பின்பற்றுவார்கள்.
இதுவே பிற்காலத்தில் நிலைத்து விடும்
என்று இதை காரணமாக வைத்து லத்தீப் ஹஜரத் அவர்கள் தன் சொந்த முயற்சியில் பெரிய மதரஸா பின் புறம் உள்ள ஒரு இடத்தை வாங்கி அதில் கூரைகொட்டகை அமைத்து அங்கு ஒரு பள்ளியை நிர்மானித்து மஸ்ஜிதே காதரியா என்று பெயர் சூட்டி தானே பேஸ் இமாமாக பொறுப்பேற்று மார்க்க முறைப்படி பேனுதலுடன் மதரஸா மாணவர்களுக்கும் அப்பகுதி மக்களுக்கும் தொழ வைத்தார்கள்.
இவர் வாழ்ந்த காலத்தில் கிள்ரு (அலை )
அவர்களை நேரில் சந்தித்து உறையாடியதாகவும் ஒரு தகவல் உள்ளது.
லத்தீப் ஹஜரத் அவர்கள் தங்கள் இறுதி காலம் வரை அந்த பணியை செய்து வந்தவர்.
அல்லாஹ்வின் அழைப்பை ஏற்று 28:12:1928.ல் வஃபாத் ஆனார்கள்.
(இன்னாலில்லாஹி....)
சின்னபள்ளியின் வடபுறம் அப்போது காலியாக இருந்த ஒரு இடத்தை 200 ரூபாய்க்கு வாங்கி அன்னார் அவர்களின் பொன்னுடலை அடக்கம் செய்யப்பட்டது.
பிறகு பள்ளியை எடுத்து கட்டும் போது அவர்கள் அடக்க இடத்தை விட்டு விட்டு மீதி உள்ள இடத்தையும் இனைத்து பெரிய பள்ளியாக கட்டப்பட்டது.
லத்தீப் ஹஜரத் அவர்களுக்கு இரண்டு மனைவியர் முதல் மனைவி ஆயிஷா பீவி.
அப்போது ஆயிஷா பீவி அவர்களுக்கு வயது 10.திருமணம் ஹிஜ்ரி 1295:ரபியுல் அவ்வல் பிறை 15 நடைபெற்றது.
இவர்களுக்கு இரண்டு ஆண் மக்களும் நான்கு பெண் மக்களும் பிறந்தது.
முதல் மனைவி ஆயிஷா பீவி அவர்கள் உடல் நலக்குறைவால் ஹிஜ்ரி 1309 வஃபாத் ஆனார்கள் அப்போது இவர்களுக்கு
வயது 24.இவர்களை பெரிய மதரஸா முன்புறத்தில் மேற்புறம் உள்ள சந்தில் அடக்கப்பட்டது.
மனைவி மறைவுக்கு பிறகு
தனிமையை உணர்ந்த லத்தீப் ஹஜரத் அவர்கள் இரண்டாம் மனைவியாக. ராபியா பீவி என்ற அம்மையாரை மணம் புரிந்தார்.
அப்போது அந்த அம்மையார் அவர்களுக்கு வயது 14.இவர் தன் கணவரை போல் இபாதத்தில் மிகைத்தவராக காணப்பட்டார்.
ஊர் பெண்கள் அனைவர்களுக்கு தீன் கல்வி புகட்டினார்.
இவர்களுக்கு ஐந்து ஆண் மக்களும் மூன்று பெண் மக்களும் பிறந்தன அம்மையார் அவர்கள் நீண்ட காலம் இவ்வுலகில் வாழ்ந்து தன் 94. வது வயதில் 8:3:1969 ல் காலமானார்.
அம்மையார் அவர்கள் தீன் பணியில் சிறந்து வாழ்ந்த காரணத்தினாலும் பள்ளியை நிர்மானிக்கும் போது தன் உடல் உழைப்பை கொடுத்ததின் காரணமாகவும் லத்தீப் ஹஜரத் அவர்கள் அடக்கப்பட்ட இடத்துக்கு அருகிலேயே இவர்களையும் அடக்கப்பட்டது.
லத்தீப் ஹஜரத் அவர்களின் முதல் மனைவி மூலம் பிறந்த நான்கு பெண் மக்களில்.
மூன்றாம் மகளாக மஃமூதா பீவி என்பவரும் பிறந்திருந்தார்.இவர்களை மீ. மௌலவி ஜமால் முஹம்மது ஆலீம் அவர்களுக்கு ஹிஜ்ரி 22:6:1317.திருமணம் முடித்து வைக்கப்பட்டது இத்தம்பதியர்களுக்கு மூன்று ஆண்மக்களும் இரண்டு பெண் மக்களும் பிறந்தனர்.
இவர்களில் மூத்தவராக கலீலுர் ரஹ்மான் என்பவரும் பிறந்திருந்தார்.
கலீலுர் ரஹ்மான் அவர்கள் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு நேதாஜியின் நெருக்கத்தை பெற்ற மணிமொழி மௌலானா என்று மதிப்புடன் அழைக்கப்படும் கலீலுர் ரஹ்மான் பாகவி ஆவார்.
மணிமொழி மௌலானா அவர்கள் லத்தீப் ஹஜரத் அவர்களின் மகள் வயிற்று பேரர் ஆவார்.
அன்னார் அவர்களும் அவர்களின் ஆண் வாரிசுகள் அனைவர்களும் ரசூல் (ஸல் )
அவர்களின் வம்சாவளியை சார்ந்தவர்கள் ஆவார்கள் இவர்கள் இறந்தால் தனியாக அடக்கம் பன்ன சின்னபள்ளியில் இடப்பற்றாக்குறை காரணமாக மக்தூமியா மதரஸாவின் கிழக்கு பகுதியில் தனியாக அடக்கம் செய்தார்கள்.
அதில் முதலாவதாக மஹான் அல்லாமா முஹம்மது ஹாதி ஹஜரத் இப்னு வெள்ளையப்பா ஷாஹிப் அவர்கள் 1908 ல் அடக்கம் செய்யப்பட்டது.
அதன் பிறகு மஹான் அல்லாமா ர.னி. அப்துல் வஹ்ஹாப் இப்னு முஹம்மது ஹாதி அவர்கள்.
[ இவர்கள் சிறந்த ஆலீமாக விளங்கி சேலம் செவ்வாய் பேட்டை அஞ்சுமன் பள்ளியை உருவாக்கி அப் பள்ளியில் இமாமாக பணியாற்றினார்கள்]
இவர்களையும் இதே வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
அடுத்து மஹான் அல்லாமா ர.னி. குதரத்துல்லாஹ் ஹஜரத் அவர்களை 1952 ல் அடக்கம் செய்யப்பட்டது [ பார்க்க சாதாத் வரலாறு]
அடுத்து சுதந்திர போராட்ட தியாகியும் நேதாஜியின் நெருங்கிய நண்பரும் மணிமொழி மௌலானா என்று மதிப்புடன் அழைக்கப்படும் M.J.கலீலுர் ரஹ்மான் பாகவி அவர்கள்.12:6:1969 ல் காலமானார்.
[இவர் லத்தீப் ஹஜரத் அவர்களின் மகள் வயிற்று பேரர் ஆவார்.]
அவர்களின் அடக்கஸ்தளமும் அங்கேயே அமைந்து இன்றும் மீஜான் கல் பொருத்தப்பட்ட நிலையில் காணலாம்.
அடுத்து சிண்டிக்கேட் ஹஜரத். ர.னி.லு. ஹபீபுர் ரஹ்மான் பாகவி அவர்களை அடக்கம் செய்யப்பட்டது.
அடுத்து லக்னோ ஹஜரத். ர.னி.லு.
அப்துல் ஹை பாகவி அவர்களை அடக்கம் செய்யப்பட்டது.
அடுத்து ஷாஹா ர. க்ஷா. அஸ்ரப் அலி அவர்களை அடக்கப்பட்டது.
அடுத்து மஞ்சவளி அப்துல் ஜப்பார் னி.ஸி.பு. அவர்களை அடக்கம் செய்யப்பட்டது.
அடுத்து முஹம்மது ஹனீப் [லத்தீப்ஷா ஹஜரத் அவர்கள் மகன்] அவர்களை அடக்கம் செய்யப்பட்டது.
லத்தீப் ஹஜரத் வாரிசுகளை தவிற வேறு யாரும் அங்கு அடக்கம் செய்ய அனுமதி இல்லை.
இவர்கள் கபர்கள் மதரஸாவை ஒட்டிய கிழக்கு பகுதியில் அமைந்திருக்கிறது.
தனியாக இருந்த கபர்களை மதரஸாவை விரிவாக்கம் செய்யும் சமயத்தில் கபர்களை சுற்றி சுற்றுச்சுவர் எழுப்பட்டது.
ஆதாரம் :- வெள்ளைப்பாஷாஹிபு குடும்ப நஸபு ஸில்ஸிலா மற்றும் சாதாத் வரலாறு
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
ஆசிரியர்:-
அன்வர் பாஷா அன்வாரி
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱