〘〙〘〙〘〙〘〙〘〙〘〙〘〙〘〙〘〙〘〙〘〙

      பள்ளபட்டியை தாக்கிய புயல்

〘〙〘〙〘〙〘〙〘〙〘〙〘〙〘〙〘〙〘〙〘〙


1977-ல் தமிழகத்தின் அனைத்து பாகங்களிலும் பேய் மழை.


அந்த மழை தென் தமிழகத்தையும் விட்டு வைக்கவில்லை இரண்டு நாட்களாக தொடர்ந்து பலத்த மழை எங்கு திரும்பினாலும் வெள்ளம்.


M.G.R. அவர்கள் முதன் முதலில் ஆட்சி பொருப்யை ஏற்ற நேரம் அது.


வேடசந்தூரை மையமாக கொண்டு பலத்த மழை இதனால் திண்டுக்கல் சுற்று வட்டார பகுதிகளில் இருக்கும் அனைத்து ஊர்களும் வெள்ளத்தில் மூழ்கின.


குறிப்பாக வேடசந்தூரை சுற்றி உள்ள கிராம பகுதிகளும் வேடசந்தூரும் வெள்ளத்தில் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டு விட்டது.


(அதை வேடசந்தூர் புயல் என்றும் சொல்வார்கள்)


பல சடலங்கள் ஆடுமாடுகள் வெள்ளத்தில் மிதந்து தொற்று நோய் பரவும் அபாயம்.


இந்த வெள்ளம் பள்ளப்பட்டியையும் விட்டு வைக்கவில்லை பள்ளப்பட்டியிலும் தொடர் மழை மேற்கு பகுதியில் இருந்து நங்காஞ்சி நதி கரை புரண்டு ஓடியது அருகில் இருந்த கிராமங்கள் தண்ணீரில் மூழ்கின.


தென் பகுதியில் ரங்கமலையில் இருந்து வெள்ளம் கரை புரண்டு வரும் வழி எங்கும் பலத்த சேதாரத்தை உண்டு பண்ணி பள்ளப்பட்டியை நோக்கி பாய்ந்து வந்து நமதூரின் கிழக்கு பகுதியில் இருக்கும் குப்பைக்கா ஓடையிலும் வெள்ளம் கரை புரண்டு ஓடியது.


அப்போது இன்றைய ஷா நகர் பகுதியும் செல்லு மீரான் நகரும் காலி இடமாக காடாக இருந்தது அப்பகுதி முழுவதும் தண்ணீர் புகுந்தது.


(இப்போது இருக்கும் பெட்ரோல் பங்க் அருகில்) சாலையில் தண்ணீர் இடுப்பளவு ஓடி போக்குவரத்தையும் துண்டித்து விட்டது.


கிழக்குபகுதியில் இருந்து யாரும் ஊருக்குள் நுழையமுடியவில்லை 


அதே போல் வடக்கு பகுதியில் நங்காஞ்சி நதியில் வெள்ளம் ஓடி பாலத்தை துண்டித்து விட்டது இதனால் வடக்கு பகுதியில் இருந்தும் யாரும் ஊருக்குள் நுழைய முடியவில்லை.


பாலத்தின் இரு கரைகளும் வெள்ளத்தில் அடித்து சென்று பாலம் தனியாக துண்டாக காட்சி அளித்தது போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.


பாலத்தின் மேல் வரை தண்ணீர் ஓடி பாலத்தின் தடுப்பு சுவரையும் இடித்து விட்டது 


[ இப்போதும் பழைய பாலத்தில்தடுப்புசுவர் இடிந்த பகுதியை பார்க்கலாம் பாலத்தில் மையபகுதியில் உடைந்த இடத்தில் புதிதாக கட்டி இருப்பார்க ள் கவனித்து பார்த்தால் தெரியும். ]