❍✩❍✩❍✩❍✩❍✩❍✩❍✩❍✩❍✩❍

             டிப்ஸ் ஹஜரத் அவர்கள்

❍✩❍✩❍✩❍✩❍✩❍✩❍✩❍✩❍✩❍


சுமார் 80 வருடங்களுக்கு முன் பள்ளபட்டி கிழக்கு பள்ளி மஸ்ஜ்தில் முஅத்தினாக பனியாற்றிய பாஷா ராவுத்தர் மகனாக சங்கை மிகு மௌலவி ஷாகுல் ஹமீது- டிப்ஸ் ஹஜரத் அவர்கள் பிறந்தார்கள்.


அவர் சிறு வயது முதலே மார்கத்தின்பால் ஈடுபாடுடன் வளர்ந்தார்....


அவர் லால் பேட்டை மதரஸா மன்பஹுல் அன்வர் அரபிக்கல்லூரியில் சங்கை மிகு அமானி ஹஜரத் அவர்களின் மாணவராக சிறந்து ஆலீம் பட்டம் பெற்றார் ..


திருமணத்திற்கு முன் சின்ன தாராபுரம் பள்ளியில் இமாமத் பணியில் சேர்ந்து அங்குள்ள மக்களின் நன்மதிப்பை பெற்றார்.


திருமணத்திற்கு பின் பள்ளபட்டி கிழக்கு பள்ளியில் கால் பதித்து சங்கை மிகு நோட்டக்கார அப்துல் ஹை நக்காதி ஹஜரத்

மற்றும் சங்கைமிகு கம்பத்து ஹாஃபிழ் ஷாகுல் ஹமீது ஹஜரத் ஆகியோரிடம் இனைந்து இமாமத் பணிபுரிந்தார்.


தனது குரல் இனிமை ராகம் தஜ்வீதுடன் ஓதும் பாங்கு அகியவற்றால் தொழுகைகளின் கிராஅத்திலும் ஜும்ஆ மற்றும் திருமண குத்பாக்களிலும் மக்களை தன் வசம் ஈர்த்தார்..


அவர் குரலின் இனிமையை கேட்க மக்கள் திரள்வார்கள்......


இமாமத் பனியில் இருக்கும் போதுகிழக்கு பள்ளியில் நடந்து வந்த இஸ்லாமிய ஆரம்ப பாடசாலையை திறம்பட நிர்வாகித்தார் ..


அந்த பள்ளியில் தன் பிள்ளைகளை படிக்கவைக்க மக்கள் ஆர்வத்துடன் வந்து சேர்த்தி படிக்க வைப்பார்கள் காரணம்.

இவரிடம் படித்தால் நல்ல ஒழுக்கசீலராக தன் பிள்ளை வளரும் என்று நம்பினார்கள்..


அப்பள்ளியில் இருந்து தீன் இனைந்த ஆரம்பக் கல்வி பெற்றவர்களாக ஏராளமான மாணவர்களை உருவாக்கினார்..


அன்று வெளியேறிய மாணவர்கள் இன்று ஆலீம்களாவும் மார்க்க அறிஞர்களாகவும் வலம் வந்து இவருக்கு பெருமை சேர்க்கிறார்கள் !!!


இமாமத் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின் புரவலர்களின் உதவியுடன் பள்ளபட்டியிலேயே தனியாக இஸ்லாமிய ஆரம்ப பாடசாலையை ஆரம்பித்தார் .


அதில் தீன் இனைந்த ஆரம்ப கல்வியளித்து மேலும் ஏராளமான மாணவர்களை உருவாக்கினார் தொடர்ந்து மார்க்க கல்வி சேவையாற்றினார்...


பள்ளபட்டியில் பொதுவாக ஆரம்ப கல்வி முடித்தவுடன் குழந்தைகளை வேலை கற்றுக்கொள்ளகடைகளுக்கு அனுப்பி விடுவது வழக்கம் ஆனால் இவரோ நமது சமுதாயத்தின் ஒவ்வொரு குழந்தையும் குறைந்தது பத்தாவது வரையிலாவது படிக்கவேண்டும் என்ற கொள்கை உடையவராக இருந்தார் ..


தனது பிள்ளைகளையும் அவ்வாறே படிக்க வைத்தார் தன் மகன்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு துறைகளில் சிறக்க வேண்டும் என்று விரும்பினார் ஒரு மகனை மருத்துவம் படிக்கவைத்து டாக்டராகவும் ஆக்கினார் !!


ஒரு மகனை தனக்கு ஆலீம் வாரிசாகவும் ஆக்கிக்கொண்டார்...


கிழக்கு பள்ளி எதிரில் மார்க்க புத்தககடை ஒன்று வைத்து அதையே மக்களை சந்தித்து மார்க்கத்தை பேசுவதற்குரிய அலுவலகமாகவும் உயர்த்திக் கொண்டார்.....


அங்கு காலைமுதல் இரவு வரை அமர்ந்து மக்களுக்கு சேவையாற்றினார் !!


வயது அதிகரித்து விட்ட போதும் டிப்ஸ் திருமறை டியூசன் சென்டர் என்ற பெயரில் டியூசன் சென்டர் ஆரம்பித்து குழந்தைகளுக்கு காலையிலும் மாலையிலும் கலகலப்பாகத் தஜ்வீதுடன் திருமறை ஓதிக்கொடுப்பதை தனது உயிர் மூச்சாக ஆக்கிக்கொண்டார்.....


அத்துடன் அன்றாடம் கல்விச் சங்க அலுவலகத்திற்கு சென்று மக்களுக்கு அவர்கள் விளங்கி கொள்ளும் வகையில் ....

மார்க்கவிளக்கமளிப்பதையும் கனவுகளுக்கு விளக்கமளிப்பதையும்...

தனது கண் எதிரில்தென்படும் ஒவ்வொருவருக்கும் அவரது நடை உடை பாவனை சுன்னத்திற்க்கு மாற்றமாக இருப்பின் அதை ஆளுக்கேற்றார் போல்...

நளினமாகவோ.நயமாகவோ.வேடிக்கையாகவோ.நட்பாகவோ.சுட்டிக்காட்டுவதையும்

மாலை நேரங்களில் சின்னகடைவீதியில் நடந்து சென்று வழியில் தென்படுபவர்களிடமும் தன் சகாக்களிடம் அளாவுவதையும் தனக்குத்தானே  ஆயுட்காலக் கடமையாக ஆக்கிக்கொண்டார்..


அவர் ஆயிரக்கனக்கான மாணவர்களுக்கு பாடம் கற்றுக்கொடுத்ததுடன் தனது பனி முடிந்து விட்டதாக கருத வில்லை !!!


மேலும் மேலும் அவர்களை கண்காணிப்பதையும் அவர்களிடம் காணப்படும் குறைகளை உரிமையுடன் திருத்துவதையும் தன் மீதுள்ள பொருப்பாக ஏற்றுக்கொண்டார்..


அவற்றை அவர் உளமார இரசித்ததால் அவரது முதுமை பருவம் மகிழ்சியுடனும் மன நிறைவுடனும் விடை பெற்றுக்கொண்டிருந்தது!!


இவை மட்டும் இல்லாமல் குழந்தைகளுக்கு அழகான பெயர்களை தேர்ந்தெடுத்து சொல்வதில் கைதேர்ந்தவர்...


அரபி பாஃஸி மொழியில் எழுதிய அழகிய பெயர்கள் அடங்கிய மிகபெரும் தொகுப்பு அவரிடம் இருந்தது....


குழந்தைகளுக்கு அழகான அர்த்தம் பொதிந்த பெயர்களை தேர்ந்தெடுத்து தர பெற்றோர்கள் அவரை நாடுவார்கள்....


இன்று நல்ல பெயர்களில் நாம் உலாவுகிறோம் என்றால் அது அவரிடம் நம் பெற்றோர்கள் வாங்கிய பெயராகத்தான் இருக்கும்!!!

➢➢➢➢➢➢➢➢➢➢➢➢➢➢➢➢➢➢➢

டிப்ஸ் ஹஜரத் அவர்கள் நகைச்சுவையாக பேசுவதில் கைதேர்ந்தவர் அதில் சுவையான சம்பவம்.


ஒருவர் தன் பிள்ளைக்கு பெயர் தேர்தெடுக்க ஹஜரத் அவர்களிடம் சென்று என் பிள்ளைக்கு ஒரு பெயர் தேர்ந்தெடுத்து தாருங்கள் ஆனால் இதுவரை யாரும் வைக்காத பெயராக இருக்க வேண்டும் என்று கேட்டார்.


அதற்கு ஹஜரத் அவர்கள் சிரிக்காமல் சற்று நேரம் சிந்திப்பது போல் பாவனை செய்து விட்டு யாருமே இதுவரை வைக்காத ஒரு பெயர் உள்ளது  ஆனால் நான் அந்த பெயரை சொன்னால் மறுக்காமல் வைப்பீர்களா என்று கேட்டார்.


வந்தவர் ஹஜரத் நீங்க சொன்னால் நான் மறுக்க மாட்டேன் கண்டிப்பாக அதே பெயரை வைத்து விடுவேன் என்றார்.


ஹஜரத் அவர்கள் மேலும் நான் சொன்னால் நீ வைக்கமாட்டாய் அதனால் அந்த பெயரை நான் சொல்லமாட்டேன் என்று சொன்னார்.


வந்தவர் என்ன ஹஜரத் அவர்களே நீங்கள் எவ்வளவு பெரிய ஆலீம் உங்கள் பேச்சுக்கு மறு பேச்சு பேசாமல் அதே பெயரை நான் கண்டிப்பாக வைக்கிறேன் என்றார்.


ஹஜரத் அவர்கள் சரி இவ்வளவு தூரம் கேட்ப்பதால் சொல்கிறேன் என்று சொல்லி சைத்தான் என்று பெயர் வைக்கவும் அந்த பெயர் தான் உலகத்தில் யாரும் வைக்காத பெயர் இந்த பெயரை வைத்தால் உன் பிள்ளை ரோட்டில் நடந்து செல்லும் போது இதோ சைத்தான் செல்கிறான் என்று அனைவர்களும் கூப்பிடுவார்கள் என்று சொன்னதும்.


வந்தவர் தன் தவறை உணர்ந்து மன்னித்து விடுங்கள் ஹஜரத் என் தவறை நான் உணர்ந்து கொண்டேன் என்று மன்னிப்பு கேட்டபிறகு அழகான சஹாபாக்களின் பெயர்களில் ஒன்றை தேர்ந்தெடுத்து தந்தார்.

➢➢➢➢➢➢➢➢➢➢➢➢➢➢➢➢➢➢➢


அடுத்து கனவுகளுக்கு விளக்கம் சொல்வதில் வல்லவர்....


கனவு கண்ட நேரத்தையும் உடல் தூய்மையையும் துல்லியமாக அறிந்து அதற்கு சரியான விளக்கமளிப்பார்....

அவர் சொல்வது அப்படியே நடக்கும்!!!


அவரது இரண்டு பண்புகள் பலரும் போற்றதக்கவையாக இருந்தது..


முதலாவதாக திருமறையை தஜ்வீதுடன் ஓதிக்கொடுக்கும் பாங்கு அதற்காகவே பல பெற்றோர்கள் தமது குழந்தைகளை அவரிடம் திருமறை கற்றுக்கொள்ள அனுப்பிவைத்தார்கள் .


ஓதும் போது நாக்கு சூழல வேண்டும் என்பதற்காக மாணவர்களுக்கு விசித்திரமான பாட்டுக்களையும் சொல்லிக்கொடுத்து வந்தார் ....


தஜ்வீதுடன் திருமறை ஓதும் கலை என்ற ஒரு நூலையும் வெளியிட்டார்!!!


அடுத்த பண்பு வட்டியின் மூலம் பொருளீட்டுபவர்கள் வீட்டில் சாப்பிடுவதை நளினமாகத் தவிர்த்து கொள்ளும் பாங்கு சாப்பிடுவதில்லை என்பதை அவர் ஒரு விரதமாகவே பின் பற்றி வந்தார்.


பின் பற்றி நடந்தது மட்டும் அல்லாமல் வட்டியின் மீது பொருள் ஈட்டுவர்களை பார்த்தால் நீங்கள் அல்லாஹ்விடம் போர் தொடுக்கிறீர்கள் என்று எச்சரிக்கையும்  செய்வார்!!!


இப்படி வாழ்ந்து வந்த அவரது

வாழ்க்கையில் அல்லாஹ் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தி அவரை நிலைகுலைய செய்தான்.


ஒவ்வொன்றுக்கும் அல்லாஹ் ஒரு தவணையை ஏற்படுத்தி வைத்திருக்கிறான் அல்லவா?


குதுகலத்துடனும் பொறுப்புணர்வோடும் கடமையாற்றி வந்த நிலையில் சீரான அவரது வாழ்க்கையை நிலைகுலைய செய்யும் வகையில் ஒரு திருப்பத்தை அல்லாஹ்  அவருக்கு ஏற்படுத்திவைத்தான் !


இனை பிரியாமலும் அன்போடும் வாழ்ந்து....

திடீர் என்று நோய் வாய்ப்பட்டு சுமார் ஆறு மாதங்களில் இறையுலகம் மீண்டு விட்ட அவரது மனைவியின் நிரந்தர பிரிவு .


அவர் மனமொடிந்து ஒரேடியாக துவண்டுவிட்டார் அடுத்து என்ன என்று திக்குதெரியாமல் தவித்தார்...


இவரின் மனைவி மறைவுக்கு பிறகு இனி நீங்கள் தனியாக இங்கு இருக்க வேண்டாம் என்று அவரின் மகன்கள் அனைவர்களும் ஒருங்கினைந்து அவர்களிடம் வந்து தங்கிக் கொள்ள எவ்வளவோ வற்புறுத்தினார்கள்.


தொடர்ந்து வற்புறுத்திக்கொண்டே இருந்தார்கள்.ஆனால் அவரோ அதெல்லாம் முடியாதப்பா நான் ஊரில் இருந்தால் நான்கு பேருக்கு ஷரீ அத்தைச் சொல்லிக் கொடுப்பேன்....


நான்கு குழந்தைகளுக்கு குர்ஆனை கற்றுக்கொடுப்பேன் நல்ல விசயங்களை நான்கு பேருக்கு சொல்லி அவர்களை மார்கத்தின் பக்கம் திருப்புவேன் அதன் மூலம் எனக்குபல நண்மைகள் கிடைக்கும் நான் நண்மைகள் சம்பாதித்துக்கொள்வேன்....


உங்களோடு நீங்கள் இருக்கும் ஊரில் இருந்தால் என்ன கிடைக்கும் சாப்பாடும் உடுத்த துணிமணிகள் மட்டுமே கிடைக்கும் அவ்வளவுதான் என்று கூறி ஒவ்வொரு முறையும் மகன்களில் விண்ணப்பத்தை நிராகரித்து வந்தார்.


அவர் தன் மகன்களை விட பள்ளப்பட்டியையும் இங்குள்ள மக்கள்களையும்  அவர்களுடன் அளாவுவதையும் அவர்களுக்கு மார்க்க விளக்கமளிப்பதையும் அங்குள்ள குழந்தைகளுக்கு திருமறை கற்றுக்கொடுப்பதையும் அவர்களோடு வாழ்வதை மட்டுமே அதிகம் நேசித்தவராக இருந்தார்.


இதில் எந்த மாற்று கருத்தும் இல்லாமல் வாழ்ந்தார் எனவே அவரின் மனைவி மறைவுக்கு பிறகுஅவரது கடமைகள் பள்ளப்பட்டியிலேயே பொருப்புணர்வுடன் தொடர்ந்தன.


அவருக்கு இறுதி காலம் நெருங்குவதையும் வயது முடிவுக்கு வருவதையும் அவர் உணர்ந்தார்.


ஷஃபான் பிறை 15 பாரா அத் இரவுக்கு முன் தினம் தன் மாணவர்களுக்கு

அன்றைய ஆண்டின் திருமறை வகுப்பை முடித்து வைத்தார் ..


அது அவர் முடித்துதரவேண்டிய முக்கிய பணியாக இருந்துஇருக்கிறது.


அன்றையதினம் அவர் மகிழ்சிக்கு அளவே இல்லை  தன் மாணவர்களிடம் வழக்கத்திற்கு மாற்றமாக அதிக நேரம் செலவழித்தார்.....


அடுத்த நாள் பராஅத் இரவன்று மஃரிபிலிருந்து இஷாவரை  அவருடைய நேரம் மிகவும் மகிழ்சியுடன் சென்றது.


நடையில் தாள்ளாடம் இருந்தாலும் நண்பர்கள் துணையுடன் கபரஸ்தான் சென்று இறைவனிடம் மீண்டுவிட்ட தன் மனைவி உறவினர்கள் ஊர் மக்கள் அனைவர்களையும் ஜீயாரத் செய்து அவர்களுக்காக துவா கேட்டு விட்டு ஆட்டோவில் அவரை அமர்த்தி வீட்டு அழைத்து வந்து அவரது நண்பர்கள் விட்டார்கள்...


மறுநாள் தன் கடமை முடிந்த திருப்தியில் இமைகளை மூடினார்.


அதிகாலை 3:45 மணிக்கு தகஜ்ஜத் நேரம் அவர்மகன் அவர் அருகே சென்று பார்த்தார் .அவர் எப்படி படுத்தாரோ அதே நிலையில் அவர் உடல் இருந்தது

மூச்சு வருகிறாதா என்று சோதித்தார் ஆனால் மூச்சு வர வில்லை .....


ஆழ்ந்த உறக்கம் உலகில் எழ முடியாத உறக்கம்.அவர் உயிர் பிரிந்திருந்தது.....

இன்னா லில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்.


உயிர் பிரியும் போது நடைபெறும் கடின வேதனையில் மலம் விந்து போன்றவை வெளியேறி வாயில் நூரை தள்ளும் ஆனால் இவருக்கோ அப்படி எந்த அறிகுறியும் இல்லாமல் காய்ந்த நிலையில் அவர் உடல் ஜில்லிட்டு இருந்தது நல்லோர்களுக்கு எந்த அசுத்தமும் வெளியேறாது


அன்று மஃரிப்பிற்க்கு பிறகு ஜனாஸா குளுப்பாட்டி இஷாவிற்க்கு பெரிய பள்ளி கபரஸ்தான் சென்றடைந்தது.


அவர் ஜனாஸாஅங்கு அவர் மாணவர்கள்.....

ஆலீம் பெருமக்கள் ஊர் மக்கள் அக்கம் பக்கம் உள்ள ஊரை சார்ந்தவர்கள் என்று திரளான கூட்டம்.....


இஷா தொழுகைக்கு பிறகு ஜனாஸா தொழுகையை அவரின் மகன்களில் ஒருவரான ஆலீம் அவர்கள் தொழவைத்தார்

நல்லடக்கம் நடைபெற்றது.....


T.B.சாகுல் ஹமீது என்ற பெயர் கொண்ட இவருக்கு டிப்ஸ் ஹஜரத் என்று பெயர் வந்த காரணம்

T. தளி வகைரா

B. தந்தை பெயர் பாஷா 

S.இவர் பெயர் சாகுல் ஹமீது

TBS என்பதைத்தான் டிப்ஸ் என்று மக்கள் அன்போடு அழைத்தார்கள்.

▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱

ஆசிரியர்:-

அன்வர் பாஷா அன்வாரி

▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱