⦅⦆⦅⦆⦅⦆⦅⦆⦅⦆⦅⦆⦅⦆⦅⦆⦅⦆⦅⦆⦅⦆⦅⦆⦅⦆⦅⦆⦅⦆⦅⦆⦅⦆⦅⦆⦅⦆⦅⦆⦅⦆
பள்ளப்பட்டி மக்களின் வணிகம் அன்று முதல் இன்று வரை
⦅⦆⦅⦆⦅⦆⦅⦆⦅⦆⦅⦆⦅⦆⦅⦆⦅⦆⦅⦆⦅⦆⦅⦆⦅⦆⦅⦆⦅⦆⦅⦆⦅⦆ ⦅⦆⦅⦆⦅⦆⦅⦆
டைனோசர் பொம்மையை காட்சிக்கு வைத்த கடை.
பகுதி:- 4
சென்னை மையப்பகுதி கீழ்பாக்கத்தில் பத்து ஆயிரம் சதுர அடியில் முதன் முதலாக மிகப் பிரமாண்டமான ஷாப்பிங் மால் யாரும் நினைத்துக் கூட பார்க்காத புதுமையான முறையில் புதுமையான பெயரில். நிறுவினார்கள் அந்த கடையின் பெயரே அன்று வித்தியாசமாக இருந்தது.
சென்னை மக்கள் இவ்வளவு பெரிய கடையா..? என்று ஆச்சரியத்துடன் வாய் பிளந்து அந்த கடையை நோக்கி படை எடுத்தனர் 28:5 :1985.ல் மம்மி டாடி
என்ற பெயரில் NO 237.கீழ்பாக்கம் கார்டன் ரோடு கிழ்பாக்கம் சென்னை 10 என்ற முகவரியில் மிகப்பிரமாண்டமுறையில்
வட்டக்கட்டு சவுக்கத் அலி . ஹாஜியார் அவர்கள் தலையூர் குத்தூஸ் ஹாஜியார் அவர்கள் அவரின் தம்பி தலையூர் மைதீன் பாட்ஷா ஹாஜியார் (மையன்னா)அவர்கள்.
கூட்டு முயற்சியில் கடையை துவக்கினர்.
இந்த கடை தான் பல புதுமையான வியாபார யுக்தியை கடைபிடித்து தமிழகத்தின் வணிக வரலாற்றையே தலைகீழாக புரட்டிப் போட்டது.
இந்த கடையின் ஹைலைட்டாக.
1994 ல் ஜுராஸிக் பார்க் என்ற ஆங்கில திரைப்படம் வந்து மிக பிரபலமாக இருந்தது.
அந்த படத்தில் டைனோசர் என்ற பிரமாண்டமான மிருகத்தை காட்சி படுத்தி இருப்பார்கள் டைனோசர் என்ற மிருகத்தை பற்றி பரபரப்பாக பேசி அந்த திரைப்படத்தை அனைவர்களும் பார்த்தனர்.
மம்மி டாடி கடையின் உரிமையாளர்களின் ஒருவரான கான்ரத்த வட்டக்கட்டு
யாக்கூப் ராவுத்தர் அவர்களின் பேரனும்.
கான்றத்த வட்டக்கட்டு சவுக்கத் அலி அவர்களின் தங்கை மகனும் மக்காத குப்பைகளில் இருந்து பயோ டீசலை கண்டு பிடித்து உலகையே திரும்பிப்பார்க்க வைத்த கூலச்சி மொய்னுதீன் (மொய்னி) அவர்கள்.
அப்போது அங்கு தங்கி கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார் அவர் அப்போதே சிறந்த விஞ்ஞானியாக திகழ்ந்தார்.
அப்போது டைனோசர் உருவம் படைத்த விளையாட்டு பொருள்கள் சின்ன சின்னதாக வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்தது.
அதையே மிகப் பிரமாண்ட முறையில் பெரிய அளவில் தயாரித்தால் என்ன டைனோசர் உருவத்தை நாம் ஏன் அதே போல் நிஜத்தில் பிரமாண்டமாக செய்து கடை முகப்பில் வைத்தால் கடையின் புகழ் மேலும் பரவுமே என்று சிந்தித்தார்.
அதன் விளைவாக அந்த மிருகத்தை வடிவடைக்கும் பணியில் ஈடு பட்டார் அவர் விஞ்ஞானியாக பரிணாமம் பெற்று முதல் முதலில் செய்தது இதைத்தான்.
அதன் பிறகு பல அறிய கண்டுபிடிப்புகளை இவர் கண்டுபிடித்து பல பாராட்டுகளை பெற்றுள்ளார்.
பொதுவாக ஒரு உருவம் படைத்து சிலை செய்யவேண்டும் என்றால் சிமெண்ட் மண் கலவையிலும் அல்லது Plaster of.paris மூலமும் செய்து வர்ணம் தீட்டுவார்கள்.
ஆனால் இவர் கட்டிடம் கட்டும்
இரும்பு கம்பிகளை கொண்டு அதன் எழும்புகூட்டை வடிவமைத்து அதன் உள்ளே பெரிய ஸ்பீக்கர்கள் பொருத்தி தார் பூசப்பட்ட கோணிப்பைகளை கொண்டு தோல் பகுதியை வடிவமைத்து M.R.F. டையர் மற்றும் சில பொருட்களை கொண்டு 11 அடி உயரத்திலும் 28 அடி நீளத்திலும் 350 கிலோ எடையிலும் அந்த பொம்மையின் கண்களில் சிவப்பு லைட்களை பொருத்தி எறிய விட்டும்.
அந்த பொம்மை வாய் திறந்து ஆக்ரோஷமாக கத்தும் படியும் சவுண்ட் எஃபக்ட் கொடுத்தும் தயாரித்து கடை வாசலில் பெரிய இரண்டு ஸ்பீக்கர்களை வைத்து ஜுராஸ்ஸிக் பார்க் படத்தில் கடைசி பகுதியில் டைனோசர் ஆக்ரோஷமாக கத்திக்கொண்டு வருவதை போல் உள்ள காட்சியில் இருந்து அதன் பயங்கர சத்தத்தை பதிவு செய்து மிருகத்தின் உள்பகுதியிலேயே டேப் ரிக்காடர் அமைத்து அதன் வாய் வழியாக அதன் சத்தம் வரும்படி அமைத்து உயிருள்ள ஒரு டைனோசர்
ஆக்ரோஷமாக கத்தி கொண்டு அந்த இடத்தில் நிற்பது போல் அமைத்தார்.
அதன் கால் பகுதிகளை தரையில் ஸ்குரு கொண்டு அமைக்காமல் எந்த பிடிமானமும் இல்லாமல் இயற்கையாக நிற்பது போல் அமைத்தார்.
மாலை ஆறு மணியில் இருந்து இரவு பத்து மணி வரை அதன் சத்தத்தை அப்பகுதி முழுவதும் எதிரொலிக்க வைத்தார்.
அந்த சத்தமும் அந்த டைனோசரும் அப்பகுதியில் திகில் அடைய செய்து மெய்சிலிர்க்க வைத்தது.
அதை பார்க்க குழந்தைகளுடன் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து சென்றனர்.
அதை காரணமாக வைத்து அதையே ஒரு வியாபாரமாக மாற்றலாம் என்று கடையின் வெளியில் ஒரு கவுண்டர் அமைத்து சின்ன சின்ன டைனோசர் பொம்மைகளை காட்சி படுத்தி விற்பனை செய்தனர்.
அப்போது நடை பெற்ற சுவாரசிய சம்பவங்கள் சில உங்கள் பார்வைக்கு.
சுமார் 4 மாதங்களாக வேறு ஒரு இடத்தில் வைத்து செய்த பிரமாண்டமான 350 கிலோ எடை கொண்ட டைனோசர் பொம்மையின் கால்களை தனியாக கழட்டும் படி அமைத்திருந்தார்கள்.
அதன் படி கால்களை கழட்டி செய்த இடத்தில் இருந்து கடைவரை சுமார் 1 கிலோமீட்டர் தூரம் இருக்கும் இரவு நேரத்தில் கடை வாசல் அருகே கொண்டு வருவதற்கு பெரிய மாட்டு வண்டியில் பொம்மையை ஏற்ற முயற்சி செய்த போது வண்டியில் டைனோசர் உடல் பகுதி மட்டுமே உக்கார்ந்தது.
அதன் தலை பகுதி வெளியே நீட்டி வண்டியின் முன் பகுதி வரை வளைந்து நீண்டு மாட்டின் முன்னே தொங்கிக்கொண்டிருந்தது அதை பார்த்த மாடு பயத்தில் மிரண்டு ஓடி விட்டது.
வேறு வழியில்லாமல் மாட்டை அவிழ்த்து விட்டு விட்டு கடை ஊழியர்கள் 40 பேர்கள் ஒன்று சேர்ந்து வண்டியை தள்ளிக்கொண்டு வரும் போது அதன் நீண்ட வால் பகுதி தரையில் மோதாமல் இருக்க ஒரு பத்து பேர்கள் கையில் பிடித்துக்கொண்டு வந்தனர்.
ஏறக்குறைய நமதூர் கூட்டை தள்ளிக்கொண்டு வருவது போல்
தள்ளிக்கொண்டு வந்து கடை முகப்பில் வைத்து கால்பகுதியை இனைத்து நிற்க வைத்து இரவோடு இரவாக சாரம் கட்டி.
அந்த பொம்மைக்கு பெயின்ட் அடிப்பதற்காக இரவில் பெயிண்ட் அடித்தார்கள்.
இந்த பெயிண்ட் அடித்தது நம் மண்மாரியை சார்ந்த பெயிண்டர்கள் அதில் ஒரு பெயிண்டருக்கு அந்த பொம்மையை பார்த்து ஜுரம் வந்து விட்டது.
சுமார் அதிகாலை 4 மணி அளவில் முதல் முதலில் பால்காரர்கள் பால் விநியோகம் செய்ய அந்த இடத்தை கடக்கும் போது.
அதை பார்த்த பால்காரர்கள் பயந்து சென்னை பாஷையில் .......தா டேய்ய் இம்மாம் பெரிய உடும்புடா என்றனர்.
அருகில் இருந்த மற்ற பால்காரர்.
டேய்ய் ......தா இது உடும்பு இல்லைடா கடலில் இருந்து தப்பி வந்த முதலைடா என்றார்..
மற்றொருவர் டேய்ய்.......தா இது திமிக்கலம்டா என்றார்கள்.
அதிகாலை நேரத்தில் அரைகுறையாக வெளிச்சம் வரும் இருள் சூழ்ந்த விடியற்காலை நேரம் அப்பகுதியில் வாக்கிங் செல்பவர்கள் முதன் முதலில் இதை பார்த்த அனைவர்களும் திடீர் என இந்த இடத்தில் இவ்வளவு பெரிய மிருகம் எப்படி வந்தது என்று பயந்து பின் வாங்கி பரபரப்புடன் ஓடினர்.
ஒரு மிருகம் எங்கிருந்தோ தப்பி வந்து மம்மி டாடி கடை வாசலில் நிற்கிறது என்று காட்டுத்தீயாய் தகவல் பறந்து காலை 7 மணிக்கெல்லாம் மக்கள் ஆர்வத்துடனும் பயத்துடனும் கூட்டம் கூடி பரபரப்பு அடைந்தது.
அதுவரை ஒரு உயிருள்ள மிருகம் எங்கிருந்தோ தப்பி வந்ததாகவே நினைத்தனர் பிறகுதான் அதன் உண்மை தெரிந்தது அது பொம்மை என்று இந்த பொம்மையை பார்ப்பதற்கு
வெளியூர்களில் இருந்தெல்லாம் மக்கள் வந்து பார்த்து சென்றனர்.
கூட்டங்கூட்டமாக அந்த பொம்மையை பார்க்க வரும் மக்களால் அப்பகுதி டிராஃபிக் ஜாம் ஆகி விடும் இதனால் காவல்துறை போக்குவரத்தை சரி செய்ய இரண்டு காவலர்களை நிறுத்தி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாமல் பாதுகாத்தார்கள்.
இந்த நிலை மூன்று மாதங்கள் வரை நீடித்தது.
பொம்மையை நிறுவிய சில நாட்களில் சென்னையை ஒரு புயல் தாக்கியது அதில் பெரிய பெரிய மரங்கள் எல்லாம் வீழ்ந்தது.
கடை அருகில் இருந்த ஒரு மரம் கூட விழ்ந்தது ஆனால் எந்த பிடிமானமும் இல்லாமல் இருந்த இந்த பொம்மை விழவில்லை காற்றின் திசைக்கேற்ப அங்கேயும் இங்கேயும் அசைந்தது இதனால் உயிருள்ள ஒரு மிருகம் அசைவது போல் காட்சி அளித்தது.
அப்பகுதியில் வாழும் மக்கள் தன் குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்ட கையில் குழந்தையுடனும் சாப்பாட்டு கிண்ணத்துடனும் கடை வாசலுக்கு வந்து
டைனோசர் பொம்மையை காட்டி சோறு ஊட்டுவார்கள்.
பிரமான்டமான டைனோசர் பொம்மையை பார்த்தும் அதன் சத்தத்தை கேட்டும் சில குழந்தைகள் பயத்தில் அழுவார்கள்.
மேலும் வீட்டில் அதிகமாக குரும்பு செய்யும் பிள்ளைகளை அவர்களின் பெற்றோர்கள்.
நீ அதிகமாக குரும்பு செய்தால் மம்மி டாடி கடையில் உள்ள டைனோசரிடம் பிடித்து கொடுத்து விடுவேன் என்று மிரட்டுவார்கள்.
அதை கேட்டமாத்திரத்திலேயே பிள்ளைகள் அடங்கிவிடுவார்கள்.
அந்த கடை அருகே சில ஸ்கூல்களும் இருந்தன ஸ்கூல் விட்டதும் மாணவர்கள் கூட்டமாக வந்து அதை பார்ப்பார்கள்.
மாணவர்கள் ஸ்கூல் விட்டு வந்ததும் டைனோசர் பொம்மை பயங்கர சத்தத்தை போட சொல்லி அடம் பிடிப்பார்கள்.
அடுத்து ரோட்டில் நடந்து செல்பவர்கள் இந்த டைனோசர் உருவத்தை வாய் பிளந்து தன்னிலை மறந்து பார்த்துக்கொண்டே நடந்து எதிரில் வரும் நபர்கள் மீது மோதிய சம்பவம் அதை பார்த்துக் கொண்டே நடந்து அருகில் உள்ள சாக்கடையில் விழுந்த சம்பவம் டூவீலரில் வருபவர்கள் இதை பார்த்துக்கொண்டே வண்டி ஓட்டி எதிரில் வரும் வண்டியின் மீது மோதி கீழே விழுந்த சம்பவம் எல்லாம் நடைபெற்றது.
பகல் வேலைகளில் ஷாப்பிங் செய்ய வரும் V.I.P கஸ்டமர்கள் பாய் அந்த அந்த உருவத்தின் அசைவுகளையும் அதன் சத்தத்தை எங்களும் போட்டு காட்டுங்கள் அன்பு வேண்டுகோள் விடுவார்கள்.
அவர்களின் ஆசையை நிறைவு செய்ய போட்டுக் காட்டுவார்கள்.
ஆனந்த விகடன் வார இதழில் அனு.அக்கா. ஆண்டி என்ற தலைப்பில் அந்த வாரம் நடைபெற்ற நிகழ்சிகளை இந்த மூவர்களும் பேசிக்கொள்வது போல் எழுதுவார்கள்.
அதில் ஒரு வாரம் மம்மி டாடி கடைக்கு இவர்கள் செல்வது போலவும் அங்கு இருக்கு டைனோசர் பொம்மையை பார்த்து ஆச்சரிப்பட்டதாகவும் கட்டுரை இடம் பெற்று வரவேற்பை பெற்றது.
ஹிந்து ஆங்கில பத்திரிக்கையில் மம்மி டாடி கடையை பற்றியும் அங்கே வைத்திருக்கும் டைனோசர் பொம்மையை பற்றி வித்தியாசமான விளம்பரம் என்று மிகவும் பாராட்டி எழுதினார்கள்.
இந்தியாவில் முதல் முதலில் செயற்கையாக டைனோசர் உருவ பொம்மையை மிக பிரமாண்ட முறையில் அதுவும் உயிருடன் இருப்பது போல் அமைத்தவர் மொய்னி ஆவார்.
அப்போது பிரபலமாக திகழ்ந்த திரைப்படத்துறையினரில் ஒருவரான ஆர்ட் டைரக்டர் தோட்டா தரணி அவர்கள் இவரை திரைப்பட துறைக்கு வரும் படி அழைப்பு கொடுத்தனர்.
M.R.F. டயர் கம்பெனி அந்த பொம்மையை விலைக்கு கேட்டார்கள் இவர்கள் தரமறுத்து.
ஆறு மாத காலங்கள் வரை அந்த பொம்மை அங்கிருந்தது.
இதை முன்னோடியாக கொண்டு
மற்ற ஊர்களில் டைனோசர் கண்காட்சியை மற்றவர்கள் நடத்தினார்கள்.
அந்த பொம்மை செய்ய அப்போது 3 ஆயிரம் ரூபாய் சிலவு ஆனது.
6 மாதங்கள் வரை அங்கு இருந்த பொம்மையை தனித்தனியாக பிரித்து அகற்றினார்கள்.
இது போல் பல சாதனைகள் செய்த நிறுவனம் மம்மி டாடி என்று சொன்னால் அது மிகையில்லை.
குறிப்பு:- இந்த தகவல் அனைத்தும் உண்மையில் நடந்தவைகள்.
இதில் மிகைப்படுத்தி ஏதும் எழுதபடவில்லை.
⋖⋗⋖⋗⋖⋗⋖⋗⋖⋗⋖⋗⋖⋗⋖⋗⋖⋗⋖⋗⋖⋗⋖⋗⋖⋗⋖⋗⋖⋗⋖⋗⋖⋗⋖⋗⋖⋗
நமதூராரின் கடையின் சரக்குகள் திருட்டு போவதை கண்டு பிடித்த காமராஜர் அவர்கள்
⋖⋗⋖⋗⋖⋗⋖⋗⋖⋗⋖⋗⋖⋗⋖⋗⋖⋗⋖⋗⋖⋗⋖⋗⋖⋗⋖⋗⋖⋗⋖⋗⋖⋗⋖⋗⋖⋗
காமராஜர் முதல் அமைச்சராக இருந்த கால கட்டத்தில் நமதூரார்கள் சென்னையில் பல பகுதிகளில் மளிகை கடைகளையும்
Departmental store களும் திறந்து அமோகமாக வியாபாரம் செய்து வந்த நேரத்தில் சென்னை ஈகா தியேட்டர் எதிரில் உள்ள டைலர்ஸ் ரோடு கீழ்பாக்கம் பகுதியில் ஜோதி ஸ்டோர் என்ற பெயரில் தலையூர் சமது ஹாஜியார் அவர்கள் ஒரு கடை திறந்தார்.
அந்த கடையை காமராஜர் அவர்கள் திறந்து வைத்தார்.
கடை வியாபாரம் தொடர்ந்து நடைபெற்றுகொண்டிருந்த போது
சில மாதங்கள் சென்ற பிறகு தி நகரில் உள்ள ஒரு மொத்த அரிசி வியாபாரக் கடையில் இருந்து பல மூட்டைகள் அரிசி கொள்முதல் செய்தனர்.
(அப்போது எல்லாம் இரட்டை மாட்டு வண்டியில் தான் சரக்குகளை கொண்டு வருவார்கள்)
அதன் படி அரிசி முட்டைகள் அடங்கிய இரட்டை மாட்டு வண்டியை வண்டி ஓட்டி முன் பகுதியில் அமர்ந்து வண்டியை ஓட்டி வருகிறார் அப்போது வண்டியின் பின் பகுதியில் இரண்டு நபர்கள் குத்தூசிகளை கொண்டு குத்தி அரிசிகளை திருடிக்கொண்டே வண்டியை தொடர்ந்தனர்.
இது முன்னால் அமர்ந்து வண்டி ஓட்டியவருக்கு தெரியாது.
வண்டி தி நகர் திருமலைப்பிள்ளை ரோட்டில் வந்து கொண்டிருந்தது அப்போது அதே பகுதியில் காமராஜர் அவர்கள் வீடும் இருந்தது காமராஜர் அவர்கள் தன் வீட்டு வாசலில் நின்று ரோட்டை பார்த்து கொண்டிருந்தார்.
அப்போது அரிசி மூட்டை வண்டி இவரை கடந்தது அரிசி திருட்டு போவதை கவனித்த காமராஜர் அவர்கள் வண்டியை நிறுத்தி அரிசி திருடிக்கொண்டிருந்தவர்களையும் பிடித்து விட்டார்.
அதன் பிறகு அரிசி எங்கே போகிறது என்று அதன் பில்லை வாங்கி பார்த்தார் அதில் ஜோதி ஸ்டோர் என்று எழுதி இருப்பதை பார்த்து அது நாம் திறந்து வைத்த கடை ஆயிற்றே இது என்று கடைக்கு போன் போட்டு உண்மையை சொல்லாமல் உங்கள் அரிசி வண்டி என் வீட்டருகே ரிப்பேர் ஆகி நிற்கிறது அதனால் சற்று தாமதமாக அரிசி உங்களுக்கு வரும் என்று சொல்லி விட்டு.
பிடித்த இரண்டு திருடர்களிடம் ஏன் திருடுகிறீர்கள் என்று கேட்டார் அவர் முதலமைச்சர் காமராஜர் என்று அவர்களுக்கு தெரியாது.
அதற்கு இவர்கள் பசி பசி ஐயா என்ன செய்வது அதனால் தான் நாங்கள் இப்படி செய்கிறோம் என்றனர் ஏன் வேலை செய்து பிழைக்க வேண்டியது தானே என்றார்.
ஐயா நாங்கள் வெளியூரை சார்ந்தவர்கள் எங்களை நம்பி யாரும் வேலை கொடுக்க மாட்டேன் என்கிறார்கள் என்றனர்.
உடனே காமராஜர் தன் உதவியாளரை அழைத்து இவர்களுக்கு சாப்பாடு போடவும் என்று சொல்லி விட்டு நாளை இதே இடத்தில் என்னை சந்திக்கவும் என்று சொல்லி விட்டு வெளியில் சென்று விட்டார்.
மறுநாள் காமராஜர் குறிப்பிட்ட அந்த நேரத்தில் திருடர்கள் இருவரும் வந்தனர்.
இவர்களை அழைத்து இருவருக்கும் அரசாங்க பியூன் வேலைக்கான உத்தரவை வழங்கினார் அப்போதுதான் இவர்களுக்கு காமராஜர் என்று தெரிந்தது.
அப்போது காமராஜர் நினைத்திருந்தால் அவர்களை போலீஸ் வசம் ஒப்படைத்திருக்கமுடியும் ஆனால் அதை செய்யாமல் இருவரும் திருந்தி வாழ வேண்டும் என்று சாப்பாடும் போட்டு வேலையும் கொடுத்தார் காமராஜர் அவர்கள் காமராஜரின் எளிமைக்கும் மனிதாபிமானத்திற்க்கும் இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.
அதன் பிறகு சில ஆண்டுகள் கடந்தது.
ஜோதி ஸ்டோருக்கு மெலிந்த தேகத்துடன் அவசரமாக ஒருவர் உள்ளே வந்து ஒரு போன் பன்ன வேண்டும் என்றார்.
அந்த போனுக்கு பக்கத்திலேயே நாய்களை குளிக்க வைக்கும் சோப்புகளை அடுக்கி வைத்திருந்தனர் அதை பார்த்து அந்த நபர் சிரித்துக்கொண்டே விளையாட்டாக ஒரு அரசியல் தலைவர் பெயர் சொல்லி என்ன அவர் குளிக்கும் சோப்புகளை கூட வைத்திருக்கிறீர்கள் என்று சொல்லி விட்டு.
போன் பேசி விட்டு சிரித்துக்கொண்டே வெளியில் சென்று விட்டார்.
அப்போது அக்கடையில் பழனியை சார்ந்த இருவர் வேலை செய்து வந்தனர் இவர் போன் பேசிவிட்டு சென்றபிறகு அந்த பழனியை சார்ந்தவர்கள் வந்தது யார் என்று உங்களுக்கு தெரியுமா என்று கடை முதலாளி மகனிடம் கேட்டார்கள் தெரியாது என்று சொன்னவுடன் வந்தவர் பழனி பாவா என்றனர்.
அதன் பிறகு கோபாலபுரம் அடையார் வண்ணாரப்பேட்டை திருவல்லிக்கேணி மைலாப்பூர் தி நகர் பெசன்ட் நகர் சாலி கிராமம் போன்ற சென்னையின் அனைத்து பகுதிகளிலும் வரிசையாக பல பேர்கள் Departmental store திறந்து வெற்றி பெற்றார்கள்.
சென்னையில் உள்ள நமதூரார்களின் Departmental store களில் பள்ளபட்டியில் இருந்து மாம்பழசீசனில் மல்கோவா மாம்பழங்களை வாங்கி நல்ல விலைக்கு விற்றார்கள் !இப்போதும் பைவ் ஸ்டார்
Departmental store ல் கிடைக்கும்.!
≼≽≼≽≼≽≼≽≼≽≼≽≼≽≼≽≼≽≼≽≼≽≼≽≼≽≼≽≼≽≼≽≼≽
காட்டு பகுதியில் கடை வந்தவரலாறு
≼≽≼≽≼≽≼≽≼≽≼≽≼≽≼≽≼≽≼≽≼≽≼≽≼≽≼≽≼≽≼≽≼≽
1990 ல் சென்னையின் புற நகர் பகுதியான முகப்பேர் East என்ற பகுதி பொட்டல் காடாக அங்கொன்றும் இங்கொன்றுமாக வீடுகள் இருந்து சிறிய கிராமமாக இருந்தது.
"மையன்னா" அவர்கள் மம்மி டாடியில் இருக்கும் போது ஒரு கஸ்டமர் ரெகுலராக கடைக்கு வருவார் அவருக்கு சொந்தமான ஒரு இடம் முகப்பேரில் பாதி கட்டிடம் கட்டிய நிலையில் இருந்தது மேற்கொண்டு கட்ட அவரிடம் பணம் இல்லை இந்த நிலையில்.
அப்போது அந்த கஸ்டமர் "மையன்னா"அவர்களிடம் பாய் எனக்கு முகப்பேரில் ஒரு இடம் உள்ளது ஒரு முறை வந்து பாருங்கள் என்று அழைப்பு கொடுத்தார்.
அதை பார்த்த மையன்னா அவர்களுக்கு திடீர் என நாம் ஏன் இந்த கடையை பிடித்து ஒரு கடை வைக்ககூடாது என்று சிந்தித்து.
மீதி கட்டிடத்தை நான் கட்டிக்கொள்கிறேன் என்று 7 ஆயிரம் சதுர அடி கொண்ட அந்த கட்டிடத்தில் 6 செட்டர்களை(கதவு) கொண்டு கடை கட்டி 3 செட்டர்களை(கதவு) கொண்ட 3500 சதுர கடையை இவர் வைத்துக்கொண்டு மீதி இடத்தை இடத்தின் உரிமையாளருக்கு வழங்கி விட்டு முதல் மாடி முழுவதும் அதாவது 7 ஆயிரம் சதுர அடி முதல் மாடி இடத்தை இவரே வைத்து கொள்வது என்று ஒப்பந்தம் போடப்பட்டு
அங்கேயே வாடகை பேசி அட்வான்ஸையும் கொடுத்து விட்டார்.
அப்போது அவரை சார்ந்தவர்கள் இந்த காட்டுபகுதியில் இவ்வளவு பெரிய கடை வைப்பது முட்டாள்தனம் பெரிய நஸ்டம் ஏற்படும் என்று சொன்னார்கள்.
இவர்கள் அனைவர்களுக்கும் மவுனமே புன்னகையாக கொண்டு கடை திறக்கும் வேலைகளை செய்தார்.
உண்மையிலேயே அப்போது அது சென்னையின் புற நகர் பகுதியாக விளங்கி சென்னை சிட்டிக்கு வர மணிக்கு ஒரு முறை பஸ் போக்குவரத்து இருந்தது.
இந்த கடை திறக்க சில ஆண்டுகளுக்கு முன் "மையன்னா"அவர்கள் தன் குடும்பத்துடன் சிங்கப்பூர் சுற்றுலா சென்று வீட்டுக்கு தேவையான சில பொருட்களை ஷாப்பிங் செய்து வந்தார்.
இக்கடைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று சிந்திக்கும் வேலையில் சிங்கப்பூர் சென்று ஷாப்பிங் செய்தது இவர் நினைவில் வந்து ஷாப்பிங் சிங்கப்பூர் என்று பெயர் வைத்து கடையை திறந்தார்.
கீழ் தளம் 3500 சதுர அடியிலும் முதல் மாடி தளம் 7000 சதுர அடியிலும் கடையை அமைத்தனர் ஷாப்பிங் சிங்கப்பூர் கடை கீழேயும் மேலேயும் சேர்த்து மொத்த பரப்பளவு 10500 சதுர அடி.
அதில் ரெடிமேட் செருப்பு விளையாட்டு பொருள்கள் ஸ்டேஷனரி பொருட்கள் வாழ்த்து அட்டைகள் மற்றும் வெளிநாட்டு பொருள்களையும் மேலும் பல பொருட்களை வைத்து காட்சி படுத்தினார்.
இந்த கடையை ஒட்டிய பகுதியிலேயே
The Madras Medical Mission Hospital
MMM Multi Specialty Hospital
என்ற பெயரில் மிகப் பெரிய Hospital வந்தது.
அதில் உலக புகழ் பெற்ற இருதய டாக்டர் செரியன் அவர்கள் பணி புரிந்து வந்தார்.
சில காரணங்களால் டாக்டர் செரியன் அவர்கள் தனியாக பிரிந்து சொந்தமாக.
அதன் அருகிலேயே இருதய டாக்டர் செரியன் அவர்கள் ஒரு Hospital திறந்தார்.
இருதய ஆப்ரேஷன் செய்ய டாக்டர் செரியன் ஆஸ்பத்திரையை நோக்கி வெளிநாட்டவர்களும் வந்து மாத கணக்கில் தங்கினர்.
சில மாதங்களிலேயே அப்பகுதி வளர்ச்சி அடைந்தது இதனால் பரபரப்பு மிகுந்த பகுதியாக மாறியது.
வெளிநாட்டவர்கள் ஷாப்பிங் செய்ய வசதியாக அவர்கள் விரும்பும் பொருட்களையும் காட்சி படுத்தினார்கள்.
அப்போது அந்த பகுதியில் மிகப்பெரிய கடையாக இந்த கடை விளங்கியது.
ஷாப்பிங் சிங்கப்பூர் கடை பிரபலமடைந்து வியாபாரம் அமோகமாக நடந்தது.
கடையை ஒட்டி பக்கத்தில் இருந்த இடத்தில் மருந்துக்கடையும் கவரிங்கடையும் வெளிநாட்டு சாக்லேட் கடையும் தனியாக இனைத்தார்கள்.
அப்பகுதி அசுர வேகத்தில் விரிவடைந்து மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதியாக மாறியது.
அதன் பிறகுதான் மற்ற நிறுவனங்களும் தங்கள் கிளையை ஆரம்பித்தனர்.
ஷாப்பிங் சிங்கபூர் என்ற பெயரில் முதன் முதலில் வந்தது இந்த கடைதான்.
இரண்டாவதாக வண்ணாரப்பேட்டையில் இதே பெயரில் ஒரு கடையும் வந்தது.
தொடர்ந்து மற்ற பகுதிகளிலும் சிங்கப்பூர் ஷாப்பிங் என்றும் சிங்கப்பூர் ஷாப்பிங் 2000 என்றும் சிங்ப்பூர் பிளாஸா என்றும்
பெயர்களில் சின்ன சின்ன மாற்றங்கள் செய்து மற்றவர்கள் கடை திறந்தனர்.
அதை தொடர்ந்து முகப்பேர் West
பகுதிகளும் விரிவடைய துவங்கி
அப் பகுதியும் வளர்ச்சி அடைய துவங்கியது.
அப்போது கி.பி 2000 millennium
ம் ஆண்டு துவங்கியது அந்த ஆண்டை நினைவு படுத்தும் விதமாக ஷாப்பிங் 2000 என்று குட்டாரி அபூபக்கர் அவர்கள் ஒரு கடை திறந்தார் அதுவும் வெற்றியடைந்தது.
அதன் பிறகு இதை முன்னோடியாக கொண்டு சென்னை புற நகர் பகுதிகளில் மற்றவர்கள் கடை வைக்க ஆரம்பித்தார்கள்.
நம்மவர்கள் வியாபாரத்தில் எத்தனையோ புதுமைகளை புகுத்திய முன்னோடிகள்.
இன்று இருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எல்லாம் நம்மவர்களே முன்னோடிகள்
அன்று நம்மவர்கள் கோடு போட்டார்கள் கார்ப்பரேட் கம்பெனிகள் அதையே ரோடாக போட்டார்கள் அதுவும் யாரும் உடைக்க முடியாத கான்கிரீட் ரோடாக போட்டு விட்டார்கள்.
இவர்கள் அனைவர்களும்
பெரிய கல்லூரியில் படித்து பட்டம் வாங்கியவர்கள் இல்லை 3 ம் வகுப்புகூட படிக்காதவர்கள் தங்களின் அறிவாற்லையும் அனுபவத்தையும் முறையாக பயன் படுத்தியவர்கள்.
தமிழக வணிக வரலாற்றை பின்னோக்கி பார்த்தால் நம்மவர்கள் பல புதுமைகளை படைத்தது தெள்ளத் தெளிவாக தெரியும் தமிழக வணிக வரலாற்றில் தவிர்க்க முடியாத அங்கமாக இன்றும் திகழ்கிறார்கள்.
இன்று நமதூர் மக்கள் செய்யாத தொழிலே இல்லை என்ற நிலை சாதாரன பிளாட்பார தொழிலிருந்து பெரிய ஷாப்பிங் மால்கள் வரை. ஒரு ரூபாய்க்கு விற்கும் குச்சி மிட்டாய் முதல் விலை உயர்ந்த பொருள்கள் வரை விற்பனை செய்தும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி இறக்குமதி செய்தும் அனைத்திலும் வெற்றி பெற்றே வருகிறார்கள்.
தற்காலத்தில் வெளிநாடு சென்று வியாபாரம் செய்யும் நிலையில் கூட சிலர் இருக்கிறார்கள்.
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
ஆசிரியர்:-
அன்வர் பாஷா அன்வாரி
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱