➚➚➚➚➚➚➚➚➚➚➚➚➚➚➚➚➚

வள்ளல் ஹபீப் ராஜா

➚➚➚➚➚➚➚➚➚➚➚➚➚➚➚➚➚


பள்ளப்பட்டி மாநகரில் வள்ளலாக தோன்றிய

P.K. ஹபீப் முஹம்மது என்ற வள்ளல் பெருந்தகை ஹபீப் ராஜா என்றும் ஹபீப் பாய் என்றும் மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டார்.


அன்னார் அவர்கள் 1912ம் ஆண்டு சாதரண நடுத்தர குடும்பத்தில் பிறந்து தன் இளமை காலத்தில் கோவை வசந்தா மில் மற்றும் ஸ்டேன்ஸ்  மில்களில் தயாராகும் துணிகளின் மொத்த வினியோகஸ்தராக உயர்ந்து.


தாம் சம்பாதித்த பெருஞ்செல்வத்தை பூட்டிய பேழையில் வைத்து பூரித்திடாமல் நாட்டிலும்  நமது சமுதாயத்திலும் உள்ள வறியவர்களுக்கு வாரி வாரி வழங்கி நமதூருக்கு."வள்ளல் நகர் என்று பெயர் வாங்கிக் கொடுத்தார்.


மண்ணரை புகுமட்டும் புன்னகை மாறாத புனித வதனத்தையும் இல்லை என சொல்லும் முன்னே  இருப்பதை கொடுத்துவிடும் கொடைதன்மையை தவிர அவர்களின் வாழ்விலே எத்தனையோ மாறுதலைகண்டோம்.


செல்வந்தர் என்ற தலைகணம் இல்லாமல்.

இறைவனடி சேரும் நாள் வரை இன்னா செய்தார்ருக்கும் நல்லதே செய்து வந்தார்கள்.


1951---52ஆம் ஆண்டு ஜில்லா போர்டு தேர்தலில் வெற்றி பெற்று பொது வாழ்விலும் ஈடு பட்டு சேவை செய்தார்கள்.


1961 ல் ஹஜ்ஜுக்கு தான் செல்லும் சமயம் தான் மட்டும் செல்லாமல் பக்கத்து வீட்டில் இருந்து ஒருவரையும் ஆலீம் ஒருவரையும் தன்னுடன்ஹஜ்ஜுக்கு அழைத்து சென்று அரியதொரு பண்பாட்டை ஏற்படுத்தினார்.


மண்ணரை புகுமட்டும் புன்னகை மாறாத புனித வதனத்தையும் இல்லை என சொல்லும் முன்னே  இருப்பதை கொடுத்துவிடும் கொடை தன்மையை கொண்டவர்


ஈந்து சிவந்த செங்கரம் காய்ந்த போதும்  

கடன் வாங்கியும்  கொடை கொடுத்த அவரின் கொடைச்செயல்  சாதரண கொடையல்ல அறக்கொடை வரிசையிலே கணிக்கப்படவேண்டியது.


கடன் வாங்கியும்  கொடை கொடுத்த அவரின் கொடைச்செயல்  சாதரண கொடையல்ல அறக்கொடை வரிசையிலே கணிக்கப்படவேண்டியது.


உற்றார்-உறவினர் மற்றோர்  மாற்று மதத்தவர் வேண்டியவர் வேண்டாதவர் நண்பர்கள் -அல்லாதவர்கள் என்று பாகுபாடில்லாமல்  இல்லாதவர்களுக்கு மட்டும் இன்றி இருப்பவர்களுக்கும்.

அன்பளிப்பு என்ற வகையில்

தான தருமம் என்று தேவைபட்டவர்களுக்கும்  தேடித் தந்தவர்


புளிய மரத்தெருவில் இயங்கி வந்த

மருதா முஸ்லீம் உதவி பெறும் துவக்கப்பள்ளிக்கு அந்த காலத்தில் மிகப்பெறும் தொகையான பத்து ஆயிரம் ரூபாயை நன்கொடையாக வழங்கினார் அதனால் தான் அவருக்கு வள்ளல் ராஜா என்ற பட்டம் வந்தது.


20:1:1962 அன்று பஜருடைய தொழுகைக்கு  ஒழு செய்யும் போதே  வஃபாத்தாகிய ஹபீப் பாயின்  நினைவாக. அவர்கள் விட்டுச் சென்ற பணியை விரிவாக தொட்டு செயல்படுத்தும் நோக்கத்துடன்.

1962ம் ஆண்டு ஹாஜி ஹபீப் நினைவு மன்றம்  சின்னக்கடை வீதியில் 

தோற்றுவிக்கப்பட்டது.

▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱

ஆசிரியர்:-

அன்வ ர் பாஷா அன்வாரி

▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱