▨▨▨▨▨▨▨▨▨▨▨▨▨▨▨▨▨▨▨▨▨

மணியம் ஹிதாயத்துல்லாஹ்

▨▨▨▨▨▨▨▨▨▨▨▨▨▨▨▨▨▨▨▨▨


மணியம் நாட்டாமைக்காரர்.


பள்ளபட்டி. மாநகர் கரூர் மாவட்டம். அரவக்குறிச்சி வட்டத்தில் நங்காஞ்சி நதிக்கரை ஓரம் அமைந்துள்ள முஸ்லீம்கள் வாழும் முக்கிய நகரமாகும்...


ஏறத்தாழ ஐநூறு ஆண்டுகளுக்கு முன் இந்த ஊர் தோன்றி உள்ளதாக வரலாறு கூறுகிறது இங்கு வாழும் இஸ்லாமிய பெருங்குடி மக்கள் பழங்காலம் தொட்டு தமிழ் நாட்டிலிருந்து  பல நகரங்கள் கிராமங்களிருந்து இவ்வூருக்கு குடியேறி வந்தவர்கள்.


இவ்வூரில் உள்ள பட்டபெயர்

(வகைரா) களை கொண்டு அக்குடும்பத்தவர் எந்த ஊரில் இருந்து வந்தவர்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்.


இக்குடும்பங்களில் தலை சிறந்து விளங்க கூடியவற்றில்  மணியக்காரர் குடும்பமும் ஒன்று இக்குடும்பத்தினர் சுமார் இருநூறு ஆண்டுகளாக தலைமுறை தலைமுறையாக இவ்வூர் நாட்டாமை வேலை பார்த்து வந்தார்கள் இக்குடும்பத்தினர் மஹான் ஷைய்கு அப்துல் காதிர் வலியுல்லாஹ் அவர்களின் முரீது பெற்றவர்கள்


மஹான் அவர்களுக்கு பல ஆயிரம் பேர் முரீதுகளாக வாழ்ந்தார்கள்.


அவர்களின் முரீதுகளில் முதன்மை இடத்தை பிடித்து மஹான் அவர்களின் அன்புக்கு அடிமையாக வாழ்ந்து மஹான் அவர்களின் அடக்கஸ்தளத்திற்கு சற்று தள்ளி ஈத்ஹா மைதானத்தில் அடக்கப்பெற்றுள்ள மணியம் ஹிதாயத்துல்லாஹ் அவர்களும்சிறப்பு வாய்ந்தவர்களே


அன்னார் அவர்கள் மஹான் அவர்களின் மேல் அளவு கடந்த பாசத்திற்குறியவராகவும் மஹான் அவர்களின் சகளையும் ஆவார்.


இன்றும் இக் குடும்பத்தவர்கள் காலமானால் மஹானின் தர்ஹாவின் முன்புறமாக ஒதுக்கப்பட்ட இடத்தில் அடக்கம் செய்யப்படுகிறார்கள்.


உருஸ் நேரத்தில் இரண்டாம் கூடு மணியக்காரர் கூடு என்று இன்றுவரை தூக்குகிறார்கள் இதிலிருந்து மஹான் ஷைய்கு அப்துல் காதிர் வலியுல்லாஹ் அவர்களுக்கும் இவர்களுக்கும் உள்ள நெருக்கத்தை புரிந்து கொள்ளலாம்....


இவர்கள் ஊரின் நாட்டாமையாக பணி செய்து நியாயமான தீர்ப்புகளை சொன்னவர்கள் தற்சமயம் அரசு உத்திரவினால் நாட்டாமை வேலையை இழந்தாலும் நகர மக்கள் அக்குடும்பத்தை மணியக்காரர் குடும்பம்  என்று இன்று வரை அழைத்துகொண்டு இருப்பதில் இருந்து அவர்கள் குடும்பத்திற்கு மதிப்பும் மறியாதையும் உள்ளது என்பது தெளிவாகும்.


இவர்கள் குடும்பத்தில் முதல் குழந்தை ஆண் குழந்தையாக இருந்தால் ஹிதாயத்துல்லாஹ் என்று பெயர் வைக்கும் பழக்கம் உள்ளவர்கள்.


அந்த வரிசையில் கடந்த 80/90 ஆண்டுகளுக்கு முன் மணியம் ஹிதாயத்துல்லாஹ் என்று ஒருவர் வாழ்ந்து வந்தார் 


ஹாஜி  மணியம் ஹிதாயத்துல்லாஹ் அவர்கள்  நாற்பது  ஆண்டுகாலம்  நாட்டமை வேலை பார்த்து இவ்வூர் மக்களுக்கு நல்ல சேவை செய்துள்ளார்கள்.


மணியம் ஹிதாயத்துல்லாஹ்  அவர்கள் நாட்டாமை மணியக்காரராக இருந்த பொழுது அப்போதைய மாவட்ட ஆட்சியர் வந்த பொழுது உடல் நலம் குன்றி வயோதிகத்தின் காரணமாக எழுந்து நிற்க முடியாத நிலை ஏற்பட்டது.


இதை தவறாகப் புரிந்துகொண்டு ஆட்சியர் வரும் பொழுது மணியார் எழுந்துருக்க வில்லை என்ற ஒரு பிரச்சினை எழுந்து அது கோர்ட் கச்சேரி எனச் சென்று கடைசியாக ஆட்சியர் வரும் பொழுது அவ்வாறு எழுந்து நிற்க வேண்டும் என்ற சட்டம் இல்லை என உச்சநீதிமன்றம் வரை சென்று உடைத்த பெருமை இந்த நாட்டாமைக்கு உண்டு


மஹான் அவர்களின் அடக்கஸ்தளத்திற்கு சற்று தள்ளி ஈத்ஹா மைதானத்தில் அடக்கப்பெற்றுள்ள மணியம் ஹிதாயத்துல்லாஹ் அவர்களும் சிறப்புவாய்ந்தவர்களே.

▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱

ஆசிரியர்:- 

அன்வர் பாஷா அன்வாரி

▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱