₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪
ஊரின் செல்லப்பிள்ளையாக வலம் வந்தவர்
₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪
பாரம்பரிய மிக்க பள்ளப்பட்டியில் ஊர் தோன்றிய காலம் முதல் இன்று வரை தொடர்ந்து பல வலிமார்கள் நல்லோர்கள் பெரியோர்கள் மார்க்க அறிஞர்கள் தோன்றி மக்களை நேர் வழி படுத்தி வாழ்ந்து மறைந்தும் தற்போது வாழ்ந்து கொண்டும் இருக்கிறார்கள்.
அதில் ஒரு சிலர் வெளிப்படையாக தெரிந்தும் ஒரு சிலர் வெளிப்படையாக தெரியாமல் சாதாரனமாக வாழ்ந்து மறைந்தும் இருக்கிறார்கள்.
அதில் ஒருவர்..
நாம் அனைவர்களும் நன்கு அறிமுகமான
நமதூரின் செல்லப்பிள்ளையாக வலம் வந்த மர்ஹும் ஹாஜி அப்துல்லாஹ் அவர்கள்.
ஹாஜி மர்ஹும் அப்துல்லாஹ் அவர்கள் மஹான் ஷைய்கு அப்துல் காதிர் வலியுல்லாஹ் அவர்கள் வம்சாவழியில் 8 வது தலைமுறை சார்ந்தவர்.
மஹான் ஷெய்கு அப்துல் காதிர் வலியுல்லாஹ் அவர்கள் நம் கண்மணி நாயகம் ரசூலே கரீம் முஹம்மது நபி( ஸல்) அவர்களின் 34 ம் தலைமுறையில் உதித்தவர்கள்.
மஹான் ஷெய்கு அப்துல் காதிர் வலியுல்லாஹ் அவர்களின் பேரனின் பேரர் இஷாக் காதிரி அவர்களின் மகனாக பிறந்தவர் அப்துல்லாஹ் அவர்கள்.
அந்த சங்கிலி தொடரில் பிறந்த ஹாஜி மர்ஹும் அப்துல்லாஹ் அவர்களும் நபி பெருமானார் (ஸல்) அவர்களின் வம்சாவழியை சார்ந்தவர்.
மஹான் ஷெய்கு அப்துல் காதிர்வலியுல்லாஹ் அவர்கள் காலம் முதல் இன்று வரை ஒவ்வொரு தலைமுறையிலும் மஹான் அவர்களின் வாரிசுகளில் யாராவது ஒருவர் ஒரு சிறப்பு தன்மை வாய்ந்தவர்களாக உதித்து வருகிறார்கள்.
மஹான் அவர்களின் மகன் ஷெய்கு ஷாதாத் ஷாஹிபு ஹஜரத் அவர்களும்.
மஹான் அவர்களின் பேரர் மக்துமியா மதரஸா நிறுவனர் புது சாஹிபு என்கிற ஷெய்கு ஷாஹ் முஹம்மது அப்துல் அஜீஸ் சாஹிப் ஹஜரத் அவர்களும்.
புது சாஹிபு ஹஜரத் அவர்களின் மகனார்
ஷைய்கு அப்துல் காதிரி ஆலீம் என்கிற (சூஃபி ஹஜரத்) அவர்களும்.
தங்கள் ஹஜரத் என்ற மௌலானா மௌலவி ஷெய்கு அப்துல் மஜீத் காதிரி ஹஜரத் அவர்களும்.
அரபி ஹஜரத் என்று தென்னாடெங்கும் அன்பாக அழைக்கப்பட்ட முஹம்மது அப்துல் அஜீஸ் ஹஜரத் அவர்களும்.
பெயர் விடுபட்ட இன்னும் சிலர்களும்.
இவர்கள் அனைவர்களும் மஹான் அவர்களின் வம்சத்தை சார்ந்த வலிதன்மை பொருந்திய இறைநேச செல்வர்கள் ஆவார்கள்.
அந்த வரிசையில் இந்த தலைமுறைக்கு ஹாஜி அப்துல்லாஹ் அவர்கள் உதித்து
வெளிப்படையாக தெரியாமல் மக்களுக்காக துவா செய்த வண்ணம் வாழ்ந்து மறைந்துள்ளார்.
ஹாஜி அப்துல்லாஹ் அவர்கள் தன் நிலை மறந்து ஊரில் வலம் வந்தாலும் தொழுகையை தவறாமல் கடை பிடித்து வந்தவர் எப்போதும் இறை நினைவிலேயே வாழ்ந்தவர்.
மேலும் அனைவர்களுக்கு ஹஜ் பாக்கியம் கிடைக்க துவா செய்த வண்ணம் ஊரில் வலம் வந்த இவருக்கு அல்லாஹ் ஹஜ் செய்யும் வாய்ப்பையும் வழங்கினான்.
அப்துல்லாஹ் அவர்கள் ஹஜ் செய்ததே ஒரு கராமத் தான் எந்த பொருளாதரமும் இல்லை.
மனைவி மக்கள் ஆதரவும் இல்லை ஊர் முழுக்க நான் ஹஜ் செய்கிறேன் என்ற விளம்பரம் இல்லைபள்ளிவாசல் வீடுகளில் முஸாபா இல்லைவிருந்து உபசரிப்பு இல்லைஎந்த ஆர்பாட்டமும் இல்லை.
வசிக்க ஒரு நிலையான இருப்பிடமும் இல்லைகிடைக்கும் இடத்தில் உணவு சாப்பிட்டும் அல்லாஹ்வின் நினைவில் தன் நிலை மறந்து ஊரில் வலம் வந்தவர்.
தன்னை சந்திக்கும் அனைவர்களையும்.
அல்லாஹ் உங்களுக்கு பரகத் செய்வானாக ஹஜ் பாக்கியம் கிடைக்கச்செய்வானாக என்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவர்களுக்கும் துவா செய்வதை வழக்கமாக கொண்டவர்.
இப்படிப்பட்டவருக்கு அல்லாஹ் கடந்த 2018 வருடம் ஹஜ் செய்யும் பாக்கியத்தை கொடுத்தான் ஹஜ் கடமையை முடித்து
மதீனாவில் வாழும் எப்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
அப்துல்லாஹ் அவர்களின் முன்னோர்கள் அல்லவா அவர்களை சந்தித்து சலாம் உறைக்க மதீனா சென்றார்.
மதினா சென்ற இவர்கள்
நபிகளாரின் ரவ்லா ஷரீப்பில் நின்று நபிகள் நாயகம் அவர்களுக்கும் நாயகத்தின் தோழர் அபூபக்கர்(ரலி) அவர்களுக்கும் கலீபா உமர் (ரலி) அவர்களுக்கும்.
சலாம் உறைத்து நபிகளாரின் பள்ளி மஸ்ஜிதுன் நவபியில் ரவ்லத்துல் ஜன்னாவில் தொழுது ஜன்னத்துல் பஃகி கபரஸ்தானில் அடங்கி இருக்கும் சஹாபா பெருமக்களுக்கும் அன்சாரி தோழர்களுக்கும். சலாம் உறைத்து மன நிறைவுடன் ஹஜ்ஜை முடித்து இவருக்கு துணையாக சென்றவர்கள் உதவியுடனும் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையாலும்
ஊர் திரும்பினார்.
[ ஹஜ்ஜில் இருந்து திரும்பி வந்த சில மாதங்களிலேயே மரணித்து விட்டார். ]
அப்துல்லாஹ் அவர்களை நாம் சாதரண மனிதரை பார்ப்பது போல் பார்த்து வந்தாலும் அப்துல்லாஹ் அவர்கள் மூலம் ஒரு சில கராமத்துகளும் நிகழ்ந்துள்ளது.
அதில் சிலவற்றை கீழே பார்போம்..
அப்துல்லாஹ் அவர்கள் தன் சிறு வயதில் அதிகமாக குரும்பு செய்து சுட்டித்தனமாக இருப்பார்கள்.
அப்துல்லாஹ் அவர்களின் தகப்பனார் இஷாக் காதிரி ஹஜரத் அவர்கள் தன் மகன் அப்துல்லாஹ் சுட்டித்தனமாக இருக்கும் காரணத்தால் ஒரு ஜும்மா நாள் அன்று அப்துல்லாஹ் அவர்களை ஒரு அறையில் பூட்டி விட்டு இவர் மட்டும் ஜும்மா தொழுக மேற்கு பள்ளிக்கு வந்துவிட்டார்.
ஆனால் மேற்கு பள்ளியில் ஜும்மா தொழுகையில் தன் தகப்பனார் இஷாக் ஹஜரத் அவர்கள் நிற்கும் வரிசைக்கு முன் வரிசையில் பச்சை தலைபாகை அணிந்து அப்துல்லாஹ் நின்று தொழுவதை பார்த்து ஆச்சரியப்பட்ட இஷாக் ஹஜரத் அவர்கள்.
தொழுகை முடிந்து ஓடோடி
வந்து வீட்டில் பார்த்தால் பூட்டிய வீடு பூட்டியவாறு இருக்க அதே பச்சை தலைபாகை அணிந்த வண்ணம் சிறுவன் அப்துல்லாஹ் அவர்கள் அமர்ந்து இருப்பதை பார்த்து ஆச்சரியப்பட்டார்.
அடுத்து...
மஹான் ஷெய்கு அப்துல் காதிர் வலியுல்லாஹ் அவர்கள் வாழ்ந்த காலத்தில் தன் கையில் எப்போதும் ஒரு செங்கோல் வைத்து இருப்பார்கள்.
மஹான் அவர்கள் மறைவுக்கு பிறகு அந்த செங்கோலை யாரும் கண்ணால் பார்க்காமல் இருக்க துணியால் மூடி வைத்து இருந்தார்கள்.
(அந்த செங்கோல் இன்றும் துணியால் மூடிய வண்ணம் அன்னார் அவர்களின் வாரிசுகளில் சேலத்தில் வசிக்கும் ஒருவரிடம் இருப்பதாக சொல்கிறார்கள்.)
அப்துல்லாஹ் அவர்கள் ஒரு முறை அந்த செங்கோலை தன் கைகளால் அந்த துணியை நீக்கி தன் கண்களால் பார்த்து விட்டார்.
அதுவரை நன்றாக பேசிக்கொண்டிருந்த அப்துல்லாஹ் அவர்களுக்கு செங்கோலை பார்த்த பிறகு தன் பேச்சில் மாற்றம் ஏற்பட்டு திக்கி திக்கி பேச ஆரம்பித்தார் என்று சொல்லப்படுகிறது.
அடுத்து..
ஒரு முறை மேற்கு பள்ளி அருகே ஒருவரிடம் அப்துல்லாஹ் அவர்கள் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார்.
தொழுகைக்கான பாங்கு சொல்லி தொழும் நேரம் முடியும் வரை தொழாமல் அவரிடம் பேசிக்கொண்டு விட்டு அவரை அனுப்பிய பிறகு தொழ பள்ளியில் நுழைந்தார்.
இதை கவனித்த பள்ளியின் இமாம் அவர்கள் அப்துல்லாஹ்விடம் தொழுகை நேரம் வந்தும் தொழாமல் யாரிடம் சுவாரசியமாக அவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருந்தீர்கள் என்று கேட்க கிழ்ரு (அலை) அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன் என்று சாதரணமாக சொல்லி தொழ தக்பீர் கட்டி உள்ளார்.
அடுத்து...
ஒரு முறை கரூரில் இருந்து பள்ளப்பட்டியை நோக்கி பஸ்ஸில் நமதூரார்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்.
அப்போது கரூர் பைபாஸ் ரோட்டை தாண்டி அப்துல்லாஹ் அவர்கள் தனியாக பள்ளப்பட்டியை நோக்கி ரோட்டில் நடந்து வருவதை பார்த்திருக்கிறார்கள்.
பஸ் பள்ளப்பட்டி பாலம் தாண்டி ஊருக்குள் நுழையும் முன்பு அதே அப்துல்லாஹ் பாலம் தாண்டி நடந்து செல்வதை பார்த்துஇப்போது தானே இவரை கரூரில் பார்த்தோம் எப்படி இவ்வளவு சீக்கிரம் பள்ளப்பட்டிக்கு நடந்து வந்தார் என்று ஆச்சரியப்பட்டு பஸ்ஸை விட்டு இறங்கி அப்துல்லாஹ் அவர்களிடம் இப்போது தான் கரூர் பைபாஸ் ரோட்டில் உங்களை பார்த்தோம் இவ்வளவு விரைவாக எப்படி ஊர் வந்தீர்கள் என்று வினவ இருகரமேந்தி வானத்தை நோக்கி இது அவன் செயல் என்று சைகையால் சொல்லி விட்டு தன் வழி சென்றார்.
அடுத்து..
அப்துல்லாஹ் அவர்கள் ஒரே நேரத்தில் பல திருமண விருந்துகளில் கலந்து கொண்டு வயிறு நிறைய சாப்பிடுவதை நாம் பார்த்து இருப்போம்.
பல திருமண விருந்துகளில் ஒரே நேரத்தில் கலந்து கொள்வார்.
அப்போது சாதாரண மனிதர்கள் சாப்பிடும் அளவுகளை மீறி உணவு சப்ளை செய்யும் நாம் அவருக்கு உணவு பரிமாறி களைத்து அவ்வளவு தான் உணவு என்று சொல்லும் வரை தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்.
எப்படி இவ்வளவு உணவு சாப்பிடுகிறார் அவருக்கு எப்படி செரிமானம் ஆகிறது என்பது ரகசியம்.
அதே போல் தான் சாப்பிட எப்போதும் ஒரு வாழை இலையை கையில் வைத்து இருப்பார் அந்த இலையில் தான் சாப்பிடுவார் [ அப்துல்லாஹ் அவர்களின் பாட்டனார் சூஃபி ஹஜரத் அவர்களும் இதே தன்மை பொருந்தியவர்] இது அப்துல்லாஹ் அவர்களின் கராமத் என்றே நாம் என்ன வேண்டும்.
அடுத்து...
ஒரு முறை ஷா நகர் பள்ளியில் இஷா தொழுகை முடிந்தவுடன் மோதினார் பள்ளியை பூட்ட முயற்சிக்கும் போது.
அப்துல்லாஹ் அவர்கள் பள்ளியின் உள் பகுதியில் அன்றைய இரவு தூங்க முயற்சித்துள்ளார்.
மோதினார் அவரை பள்ளியில் தூங்க விடாமல் வெளியில் தள்ளி வெளிகேட்டை பூட்டி விட்டு தன் இல்லம் சென்று விட்டார்.
மறுநாள் பஜருக்கு பாங்கு சொல்ல மோதினார் பள்ளியை திறந்தால்.
அப்துல்லாஹ் அவர்கள் பள்ளியின் உள் பகுதியில் படுத்து உறங்கிக் கொண்டிருப்பதை பார்த்து ஆச்சரியப்பட்டு அப்துல்லாஹ் அவர்களிடன் எப்படி பள்ளியின் உள்ளே வந்தீர்கள் என்று கேட்க ஒரு புன்னகையை பதிலாக கொடுத்து தன் வழி சென்றார்.
அடுத்து....
அப்துல்லாஹ் அவர்கள் ஊரின் ஏதாவது ஒரு பகுதியில் ஏதாவது ஒரு ரோட்டில் நடந்து செல்லும் போது திடீர் என கலிமா ஷாஹாதத் என்று உரத்த குரலில் சொல்லிய வண்ணம் நடந்து செல்வதை நாம் பார்த்து இருப்போம்.
இதன் மூலம் அவர் சொன்ன அந்த தெருவில் சில நாட்களில் யாராவது ஒருவர் மரணம் அடையப்போகிறார்கள் என்று மறைமுகமாக உணர்த்துவார்.
அடுத்து...
அப்துல்லாஹ் அவர்கள் ஹஜ் சென்ற சமயம் அங்கும் சில கராமத்துகளும் நடந்ததாக அவருடன் ஹஜ் செய்தவர்கள் நினைவு கூறுகிறார்கள்.
அதாவது ஹஜ் காலங்களில் மக்கா கஃபத்துல்லாவின் அருகில் யாரும் அவ்வளவு எழுதில் நெருங்க முடியாது.
காரணம்.மக்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும் ஆனால் அப்துல்லாஹ் அவர்கள் சாதாரனமாக கூட்டத்தை இரு கை களால் விலகுங்கள் என்று சைகை செய்வார்களாம் மக்கள் கூட்டமும் விலகி இவருக்கு வழி விடுவார்களாம் அப்படி முன்னேறி கஃபத்துல்லாவின் திரைகளை பிடித்தும் ஹஜ்ருல் ஹஸ்வத் கல்லை மிக அருகில் நெருங்கியும் முத்தமிட்டும் வருவார்களாம் அப்துல்லாஹ் வின் இந்த செயல் ஹஜ் காலம் முழுவது தினசரி நான்கு அல்லது ஐந்து முறை தொடர்ந்து நடைபெற்றுள்ளது.
அப்துல்லாஹ் அவர்கள் திருமண வீட்டிற்கு செல்கிறாரோ இல்லையோ.
ஊரில் யார் மரணித்தாலும் அவர்கள் வீட்டிற்கு சென்று மரணித்தவருக்காக துவா கேட்டுச் செல்வதை கடைசி வரை கடைபிடித்தார்.
அதே போல்..
சூஃபி தரீக்காவின் ஷெய்கு மார்கள் கலந்து கொள்ளும் திக்ரு மஜ்லீஸ் ஊரில் எந்த மண்டபத்தில் நடந்தாலும் முரீதுமார்கள் வீட்டில் நடந்தாலும் தவறாமல் கலந்து கொள்வார்.
ஒரு சில நேரங்களில் முரீதுமார்கள் வீட்டில் நடைபெறும் திக்ர் மஜ்லீஸுக்கு எந்த விளம்பரமும் இருக்காது ஆனால் இவர் கலந்து கொள்வார் இவருக்கு எப்படி தெரிந்தது என்று யாருக்கும் தெரியாது.
அடுத்து...
அப்துல்லாஹ் அவர்கள் ஊரில் உள்ள குழந்தைகள் பெரியவர்கள் என்று யாருக்கு ஓதி பார்த்தாலும் பலிக்கும் ஆனால் தன் ரத்த உறவுகளுக்கு அவர் ஓதிப்பார்த்தால் பலிக்காது என்று அப்துல்லாஹ் அவர்களின் சகோதரி ஒருவர் நினைவு கூறுகிறார்.
அடுத்து...
அப்துல்லாஹ் அவர்களுக்கு நினைவு சக்தி அதிகம் ஒருவரின் வகைராவையும் பெயரையும் சொன்னால் அவரின் தகப்பனார் ராத்தா ராதியின் பெயர்களை வரிசையாக கூறி நீ இன்னார் வாரிசு என்று சொல்லிவிடுவார்.
அப்துல்லாஹ் அவர்கள் கை நீட்டி பணமோ பொருளோ யாரிடமும் கேட்டது இல்லை.
உணவு உடை பணம் அவரை தேடி வந்தது.
ஒரு இடத்திலிருந்து ஒரு இடத்திற்கு அவர் செல்வதாக இருந்தால் ஒரு சில நேரத்தில் ஆட்டோவில் செல்வதை நாம் பார்த்து இருப்போம் ஆட்டோ டிரைவர்களும் எந்த கட்டணமும் வாங்காமல் அவர் சொல்லும் இடத்தில் இறக்கிவிட்டு செல்வார்கள்.
இப்படி ஊரின் செல்லப்பிள்ளையாகவும்.
பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை
அப்துல்லாஹ் அப்துல்லாஹ் என்று
அன்போடு அழைத்த அப்துல்லாஹ் அவர்கள்.
திடீர் என சுகர் அதிகமாகி காலில் புண்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஆனால் இறைவன் நாட்டபடி இன்றிலிருந்து ஏழு வருடங்களுக்கு முன் [14:3:2019] ரஜப் பிறை 7 ல் மாலை சுமார் 7 மணி அளவில் பொய்யுலகை விட்டு மெய்யுலகிற்கு நிரந்தமாக சென்றார்.
தன் சகோதரி வீட்டில் ஜனாஸா வைக்கப்பட்டு ஊர் மக்கள் அனைவர்களும் தீதார் பார்த்தனர் மறு நாள் அன்னார் அவர்களின் ஜனாஸா தொழுகையில் ஊரில் இருந்த பெரும்பாலோர்கள் கலந்து கொண்டனர்.
அதன் பிறகு அவரின் ஜனாஸா மஹான் ஷேய்கு அப்துல் காதிர் வலியுல்லாஹ் அவர்களின் தர்ஹா வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அவர் அடக்கப்பட்ட கபர் பிறை வடிவில் எடுத்து கட்டி பச்சை கலர் பெயின்ட் அடித்த நிலையில் இன்றும் காணலாம்.
அவர் மறைவு நமதூருக்கு ஆன்மீக ரீதியில் ஒரு பேரிழப்பு என்றே நாம் என்ன வேண்டும்.
அல்லாஹ் அப்துல்லாஹ் அவர்களின் பாவங்களை மன்னித்து.
சொர்க்கத்தின் உயர்வான ஜன்னத்துல் பிஃதொஸ் சொர்க்கத்ததை வழங்க துவா செய்வோம்.
≐≐≐≐≐≐≐≐≐≐≐≐≐≐≐≐≐≐≐≐≐≐≐≐≐≐≐≐≐≐≐≐≐≐≐≐≐≐≐
குறிப்பு:-
மர்ஹும் ஹாஜி அப்துல்லாஹ் அவர்களை சாதாரண கண்ணோட்டத்தில் பார்த்தால் அவர் மன நிலை பாதிக்கப்பட்ட சாதாரண மனிதரை போல் தான் தெரிவார் அதே வேலையில் ஆன்மீக கண்ணோட்டத்தில் பார்த்தால் அவர் ஒரு ஞானியாக தெரிவார்.
இது தான் உண்மை.
ஹாஜி மர்ஹும் அப்துல்லாஹ் அவர்களை பற்றி நன்றாகவும் நெருக்கமாகவும் இருந்தவர்கள் மற்றும் அவர் உறவுகள் சகோதர சகோதரிகள் அளித்த தகவல்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது.
மேலும் அல்லாஹ்வே அறிந்தவன்.
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
ஆசிரியர்:-
அன்வர் பாஷா அன்வாரி
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱