பள்ளப்பட்டி வணிகம் அன்று முதல் இன்று வரை

✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦

M.G.R.திறந்து வைத்த ஜவுளிக்கடை

✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦

                                    பகுதி2


நமதூரார்களின் ஜவுளிக்கடைகளை பிரபலமான திரைப்பட நட்சத்திரங்களை அழைத்து திறக்க செய்தனர்.


அதில் அப்போதைய பிரபலமான திரைப்பட நட்சத்திரம் ஜெய்சங்கர் ஜெமினி கணேசன் அவர்கள் நமதூராரின் கடைகளை அதிக அளவில் திறந்து வைத்துள்ளார்.


அதே வேலையில்  மக்கள் திலகம் M.G.R அவர்கள் மிகப்பிரபலமாக வலம் வந்த காலத்தில். அப்போது M.L.A வாகவும் சிறுசேமிப்புதுறை தலைவராகவும் இருந்தார்.


அவர்கள் கரத்தால் புது ஜவுளிக் கடை ராயவேலூரில் திறக்க M.G.R அவர்களிடம் அனுமதி வேண்டி 6 மாதம் தொடர் முயற்சி செய்து அனுமதி பெற்றார்கள்.


அவர் ராய வேலூர் வருவது தெரிந்து அவர் கொடுத்த தேதியில் அதே ராய வேலூரில் மேலும் சில திறப்புவிழாக்கள் நடத்த கட்சியின் சார்பாக ஏற்பாடு செய்து அவர் வரும்  அன்றைய தினமே அண்ணா சிலையும் கலைஞர் கருணாநிதி ஸ்டேடியமும்  திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது.


கடை திறப்பு விழாவுக்கு  காலை 10 மணிக்கு வருவதாக அறிவித்து மாலை 4 மணிக்கு வந்தார் காலை 8 மணி முதலே அப்பகுதியில் கட்டுகடங்காத கூட்டம் அலைமோதியது.


கூட்டம் கலையாமல் M.G.R.வரும் வரை காத்திருந்தது அதன் பிறகு M.G.R அவர்கள் வந்தவுடன் கூடியிருந்த மக்கள் M.G.R.அவர்களை கண்டவுடன் மகிழ்சியில் ஆராவாரம் செய்தனர்.


கடையை திறந்து வைத்து கடைக்குள் நுழைந்தவுடன் M.G.R அவர்களை பார்க்க வேண்டும் என்று ஆவலுடன் கூட்டம் கடைக்குள்ளும் நுழைய ஆரம்பித்தது


கூட்டத்தை கட்டுப்படுத்த கடையை மூடவேண்டிய சூழல் ஏற்பட்டு கடையை மூடிவிட்டார்கள் அதன் பிறகு அவர் சென்ற பிறகு கடையை மீண்டும் திறந்தார்கள்


அப்போது தலைவர் திறந்து வைத்த கடை என்று கூட்டம் கூட்டமாக வந்து கடையை சுற்றி பார்த்து சென்றார்கள்.


மறு நாள் தான் வியாபாரத்தை ஆரம்பித்தார்கள் அப்போது M.G.R அவர்களை கொண்டு திறந்து வைத்த கடை

வேலூர் இந்தியா சில்க் ஹவுஸ் என்ற கடை 12:10:1969 ல் திறப்புவிழா செய்தார்கள்.


M.G.R அவர்கள் அது வரை தனியார்களின் எந்த ஒரு கடையையும் திறந்து வைத்ததில்லை முதல் முதலாக இந்த ஒரு கடையை மட்டும் திறந்து வைத்தார்.

அதன் பிறகு எந்த தனியார் நிறுவனத்தையும் திறந்து வைக்கவில்லை.

M.G.R அவர்கள் திறந்து வைத்த ஒரே கடை இது தான்.


இதில் விசேஷம் என்னவென்றால்

கடை திறந்த இரண்டே நாட்களில் கடையில் இருந்த மொத்த சரக்கும் விற்பனை ஆகி விட்டது.


வேறு வழி இல்லாமல் கடையை மூடவேண்டிய சூழல் ஏற்பட்டது அவசர அவசரமாக மறு கொள்முதலுக்கு சென்று கொள்முதல் செய்த சரக்குகள் வந்த பிறகு மறுபடியும் கடையை திறந்து வியாபாரம் செய்தனர்.


அன்றைய கால கட்டங்களில் ஆட்டோக்கள் கிடையாது சைக்கிள் ரிக்ஷாக்கள் மட்டுமே இருந்தது


சுற்றி உள்ள ஊர் மக்கள் ராய வேலூர் வந்தால் ரிக்ஷாகாரர்களிடம் நம்ம வாத்தியார் திறந்து வைத்தகடையை காட்டுங்கள் என்று வந்து துணிகள் எடுத்து செல்வார்கள்


M.G.R.ரசிகர்கள் அக்கடையை கடந்து செல்லும் போது பெருமையாக நம் தலைவர் வாத்தியார் திறந்து வைத்தகடை என்று கூறியபடி கடந்து செல்வார்கள்.


இன்றும் அப்பகுதியில் வாழும் வயதான பெரியவர்களுக்கு இந்தியா சில்க் ஹவுஸ் என்றால் தெரியாது வாத்தியார் திறந்து வைத்தகடை என்றால் மட்டுமே தெரியும்.


சில வருடங்கள் சென்று M.G.R அவர்கள் ஒரு நிகழ்சிக்காக வேலூர் வந்த போது இந்த கடையை நினைவில் வைத்து நான் திறந்து வைத்தகடை வியாபாரம் எப்படி இருக்கிறது என்று விசாரித்தார்.


அன்று முதல் இன்றுவரை வேலூர் மக்களின் நீங்காத நினைவு கொண்டு இன்று எத்தனையோ பெரிய கடைகள் வேலூரில் வந்தாலும் இந்த கடைக்கு என்றே தனி கஸ்டமர்கள் உள்ளார்கள்.

▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱

 ஆசிரியர்:-

அன்வர் பாஷா அன்வாரி

▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱