㊀㊀㊀㊀㊀㊀㊀㊀㊀㊀㊀㊀㊀㊀㊀㊀㊀㊀

ஹாஜி S.S. முஹம்மது இஸ்மாயில் அவர்கள்.  [ அரவக்குறிச்சி தொகுதி முன்னால் M.L.A ]

㊀㊀㊀㊀㊀㊀㊀㊀㊀㊀㊀㊀㊀㊀㊀㊀㊀㊀


பாரம்பரிய மிக்க பள்ளப்பட்டியில் பிறந்து வளர்ந்து ஒரு அரசியல் கட்சியில் இனைந்து சட்டமன்ற உறுப்பினர் ஆகி இந்த ஊருக்கும் இந்த தொகுதிக்கும் எந்த சட்டமன்ற உறுப்பினரும் செய்யாத பல சேவைகள் செய்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து மறைந்த முன்னால் சட்டமன்ற உறுப்பினர் மர்ஹும் S.S. முஹம்மது இஸ்மாயில் அவர்கள்.


சாலையூத்து சாலிஹா முஹம்மது பாத்திமா பீவி. தம்பதியர்களுக்கு  07:02:1945ல் அவர்களது பூர்வீக வீடான தெற்கு தெருவில் உள்ள வீட்டில் 11 சகோதர சகோதரிகளுக்கு தலைமகனாக பிறந்தார்.


ஆரம்ப கல்வியை  தன் வீட்டுக்கு எதிரே தெற்கு மந்தை தெருவில் உள்ளஅரசினர் துவக்க பள்ளியிலே பயின்றார்.


அதன் பிறகு பள்ளபட்டி மேல் நிலைப் பள்ளியில் தொடர்ந்தார்.


அப்போதே சமூக ஆர்வம் கொண்ட(என்சிசி) யில் சேர்ந்தார்.


[பள்ளபட்டி மேல் நிலைப் பள்ளிக்கு ஒரு சிறப்பு உண்டு நமதூரின் முன்னால் சட்ட மன்ற உறுப்பினர்கள் மூவரை உருவாக்கிய பெருமை இந்த பள்ளிக்கு உண்டு.]


நல்ல பேச்சாற்றலை கொண்ட இவர் பல பேச்சுப்போட்டியிலும் கட்டுரைப் போட்டியிலும் கலந்து பல பரிசுகள் வென்றுள்ளார்.


அத்துடன் பள்ளிப் படிப்பின் போதே அரசியலில் மிகுந்த ஆர்வம் கொண்டு பல மாணவ போராட்டங்களில் கலந்துள்ளார்.


அவருடைய (SSLC ) படிப்பை பள்ளபட்டி அரசு மேல் நிலை பள்ளியில் முடித்தார்.


குடும்ப சூழ்நிலையின் காரணமாக அவரது தந்தையின் வியாபார உதவிக்காக சேலம் மாவட்டம் ஏற்காடு சென்றார்.


அங்கே சென்று அவரது பள்ளிப் படிப்பை தொடர்ந்து 12.ஆம் வகுப்பு முடித்தார்.


அரசியலில் மிகவும் ஈடுபாடு கொண்டதால் 1967 ஆம் ஆண்டு முஸ்லீம் லீக்கின் அன்றைய தலைவர் மர்ஹும் ஹாஜி ஆ கா அப்துல்  சமது அவர்களது முன்னிலையில்.

பள்ளப்பட்டியில் நடந்த முஸ்லீம் லீக் பொதுக்கூட்ட மேடையில் இவர்களது பள்ளி தோழர்கள் மஞ்சவள்ளி கலீலுர் ரஹ்மான் வாய்க்காமேடு அபூபக்கர் ஆகிய மூவரும் முஸ்லிம் லீக்கில் இணைந்தனர்.


[அன்று இனைந்த இவர்களிடம்  ஒரு சிறப்பு அந்த மூவரில் இருவர் நமது தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி உள்ளார்கள்.]


தன் இளமை பருவத்தில் பொது வாழ்க்கையில் செய்த சாதனைகள்

அதிகம் அதில் சில.


1.இவருடைய பேச்சு திறமையாளும் செயல் திறமையாளும் 1975 -1980 இரண்டு முறை ஏற்காடு கவுன்சிலராக பதவி வகித்துள்ளார்.


1 ஏற்காடு கோடை விழா மேம்பாட்டு உறுப்பினாகவும் பதவி வகித்தார்.


2 ஏற்காடு வியாபாரிகள் சங்க தலைவராகவும் பதவி வகித்தார்.


3 ஏற்காடு லேம்ப் சொசைட்டி மெம்பராகவும்,மலைவாழ் மக்கள் முன்னேற்றத்திற்காகவும் பல உதவிகள் செய்துள்ளார்.


4 ஏற்காடு கூட்டுறவு தேனி வளர்ப்பு:சங்க இயக்குனராக பணியாற்றினார்கள்.


ஏற்காடு ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லியாகவும் பணியாற்றி

நம்முடைய சமுதாய முன்னேற்றத்திற்காகவும் சேவைகள் செய்துள்ளார்.


அவர் முஸ்லீம் லீக்கின் சேலம் மாவட்ட செயலாளராகவும் பணியாற்றினார்.


பிறகு இந்திய தேசிய லீக் உருவானது முதல் சேலம் மாவட்ட செயலாளராகவும் மாநில அமைப்பாளாராகவும்  பணியாற்றினார்.


தி.மு.க வுடன் அன்று முதலே தோழமையுடன் இருந்ததின் காரணத்தால் சேலத்து சிங்கம் என்று அழைக்க பெற்ற முன்னால் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அவர்களுடன் அரசியல் பயணத்தை தொடர்ந்து திமுக   நடத்திய 8 பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு ஐந்து முறை சிறை சென்று வந்துள்ளார்.


1996 ல் தமிழக சட்டமன்ற தேர்தல் வந்தது.


அதிமுக ஒரு அணியாகவும் திமுக ஒரு அணியாகவும் போட்டியிட்டது.


அதில் அரவக்குறிச்சி தொகுதி் திமுக அணியில் கூட்டணியில் இருந்த தேசியலீக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு அக் கட்சியின் சார்பாக திமுக ஆதரவுடன் உதய சூரியன் சின்னத்தில் ஜனாப் மர்ஹும்

S.S முஹம்மது இஸ்மாயில் அவர்கள் போட்டியிட்டார்.


அவர் தேர்தல் வாக்குறுதியாக என்னை வெற்றி பெற வைத்தால் வெற்றி பெற்ற மறுநாள் முதல் தடையில்லா

குடிநீர் வழங்குவேன்.


[அப்போது பள்ளப்பட்டியில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவியது]


மேலும் நிரந்தர தீர்வாக காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்துவேன்

என்று வாக்குறுதி கொடுத்தார்.


அந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்று  கலைஞர் தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டது.


வெற்றி பெற்ற மறு நாள் காலை 9 மணி அளவில் ஊர் வந்து நேராக தன் இல்லம் செல்லாமல் ஷா நகர் கார்னர் வந்தார்.


இன்று  K.M மெடிக்கல் இருக்கும் இடத்தில் அப்போது பில்டிங் கட்டுமான பணி நடைபெற்று மணல் மேடாக இருந்தது.


அந்த மணல் மேட்டில் ஏறி நின்று கொண்டு நான் வெற்றி பெற்று விட்டேன்.


நான் கொடுத்த வாக்குறுதிப்படி நாளை காலை முதல் லாரிகள் மூலமாக குடிநீர் அனைத்து பகுதிகளுக்கும் வழங்கப்படும்.


இது தற்சமயம் தான்.


நிரந்தர தீர்வாக விரைவில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல் படுத்தி எக்காலத்திற்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாமல்இருக்க நடவடிக்கை எடுப்பேன் என்று அழுதுகொண்டேபேசினார்.


அதை கேட்ட அங்கு கூடி இருந்தவர்களும் அழுதனர்.


தன் M.L.A பதவி ஏற்புக்கு முன்னாலேயே அவர் என்ன செய்தார் யாரிடம் பேசினார்.

எப்படி ஏற்பாடு செய்தார் என்று மக்களுக்கு தெரியாது ஆனால் அவர் வாக்குறுதி கொடுத்தபடி அவர் சொல்லிய படி

மறுநாள் காலை ஊரில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் லாரி வந்து நின்று தண்ணீர் விநியோகம் நடைபெற்றது.


அடுத்து மழை பெய்து தண்ணீர் கஸ்டம் தீரும் வரை லாரிகள் மூலமாக தொடர்ந்து தினசரி ஊர் முழுவதும் தண்ணீர் விநியோகம் நடைபெற்று தாகம் தீர்க்கப்பட்டது.


பதவி ஏற்ற சில நாட்களிலேயே காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் ஒப்புதல் பெறப்பட்டு செயல் படுத்த ஆயத்தமாகி அசுர வேகத்தில் பணிகள் தொடர்ந்தன.


அடுத்த சில மாதங்களில் இஸ்மாயில் அவர்கள் கலைஞர் இடம் தேதி வாங்கி.

அவர் குறிப்பிட்ட அன்றைய தினத்தில்.

முதல் மகன் மன்சூர் அலி

திருமணத்தை ஹாஜி ஹபீப் திருமண மண்டபத்தில் கலைஞர் தலைமையில் நடத்தினார்.


அன்றைய தினம் அண்ணா நகர், பள்ளபட்டி நுழைவு பாலத்தையும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தையும்  கலைஞர் அவர்கள் திறந்து வைத்தார்.


அன்றை நிகழ்சியில் கலந்து கொள்ள உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த மாண்புமிகு கே.என். நேருவும் வந்திருந்தார்


அவரிடம் அனுமதிப் பெற்று பள்ளபட்டியில் உள்ள முக்கிய தெருக்கள் தார் ரோடாகவும் குறுகிய தெருக்கள் அனைத்தும் சிமென்ட் ரோடாகவும் மாற்றப்பட்டது.


அடுத்து ரேஷன் கார்டு இல்லாதவர்கள் அனைவருக்கும் உடனடியாக எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வாங்கிக் கொடுத்தார்.


அதன் பிறகு ரேஷன் கடைகள்  அதிகப்படுத்தினார் இதனால் மக்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்பது தவிர்க்கப்பட்டது.


4 பள்ளபட்டி மக்கள் மண்ணெண்ணை வாங்குவதற்காக பள்ளபட்டியிலேயே மண்ணெண்ணை பங்கை நிறுவினார்.


அது இன்று வரை பயன்பாட்டில் உள்ளது பல ஏழை மக்களின் துயர் நீக்கினார்.


5 சிறுபாண்மையினருக்கு சிறு தொழில் தொடங்க சிறு வணிக கடன் வழங்கப்பட்டது. (1998)


6.பள்ளபட்டி சிறுபாண்மை மக்கள் வீடு கட்டுவதற்கு கடன் பெற எங்கும் போகாமல் பள்ளபட்டியிலே கடன் பெற ஏதுவாக பள்ளபட்டி நடுத்தர மக்களின் வீடு கட்டும் கனவை நினைவாக்க தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய சங்கத்தை பள்ளபட்டியில் அமைத்துக் கொடுத்தார்.


7. நாற்பது ஆண்டுகளுக்கு மேல் கிடப்பில் கிடந்த மஞ்சுவள்ளி ஆற்றுப்பாலம் அமைத்து சாதனை புரிந்தார்...


பள்ளப்பட்டி மேல் நிலைப்பள்ளிக்கு அவருடைய தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டிக்கொடுத்த மாணவர்களுக்கான கணினி மையமே இன்று வரை பயன்பாட்டில் இருந்துகொண்டிருக்கிறது.


நமதூரார்கள் அதிகம் வசிக்கும் சேலத்திற்கு நேரடியாக பஸ் விட முயற்சி செய்து வந்த நிலையில் சுற்றுலா தளங்களுக்கும் வழிபாட்டுதளங்களுக்கும் பஸ் விட கோரிக்கை  வைத்தால் உடனடியாக அனுமதி கிடைத்துவிடும் என்ற தகவல் இவருக்கு கிடைத்தது.


இதையே வாய்ப்பாகவும் காரணமாகவும் வைத்து பள்ளப்பட்டியில் இருந்து சுற்றுலா தளமான சேலம் வழியாக ஏற்காடுக்கும் ஊட்டிக்கும் வழிபாட்டுத்தளமான நாகூர் ஏர்வாடிக்கும் பஸ் விட கோரிக்கை வைத்தார்.


கோரிக்கையை ஏற்ற போக்குவரத்து துறை அனுமதி கொடுத்தது பள்ளபட்டியிலிருந்து நேரடி அரசு போக்குவரத்து வசதி பெற்றுத் தந்தார்.


அரவை தொகுதி உள்ளடக்கிய கிராமங்களுக்கு மினி பேருந்து வசதி செய்துகொடுத்தார்,


இஸ்லாமிய மக்கள் வசிக்ககூடிய பள்ளபட்டிக்கு இஸ்லாமிய நூல்கள் சேர்ந்து படிக்க கூடிய நூலகம் அமைப்பதற்கு அன்றைய கல்வித்துரை அமைச்சர் க.அன்பழகன் அவர்களிடம் கோரிக்கை வைத்து நூலகம் அமைக்க வழி வகுத்தார்.


இவர்களில் காலத்தில் தான் தெரு விளக்குகள் அனைத்தும் சோடியம் விளக்குகளாக மாற்றப்பட்டது.


செல்லு மீரான் நகருக்கு ஒரு நீர் தேக்கத் தொட்டியும் மஸ்தான் சாஹிப் தர்ஹா எதிரே ஒரு நீர் தேக்கத் தொட்டியும் தர்ஹா மைதானத்தில் ஒரு நீர் தேக்க தொட்டியும்.

ஹரிஜனன் தெருவில் ஒரு நீர் தேக்க தொட்டியும் அமைத்து கொடுத்தார்.


நீண்ட காலம் கோரிக்கையில் இருந்த ஆவின் பாலகம் கொண்டு வந்தார்.


ஆண்டிபட்டி சின்ன தாராபுரம் அரசு பள்ளியை உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தினார்.


நமதூர் மாணவர் அதிகமாக கல்வி பயின்று வரும் ஆறுமுகம் அகாடமி பள்ளிக்கு 12 வகுப்பு வரைஅரசு அங்கிகாரம் பெற்றுத்தந்தார்.


பள்ளபட்டி வேலம்பாடி பஞ்சாயத்தில் இலவச வீட்டு மனைகள் பெற்று தந்தார்


விதவைகள் மற்றும் முதியோர் உதவித் தொகை...


அன்றைய கால கட்டத்தில் ஏழை பெண்களுக்கு திருமண உதவித்தொகை


அரசு மருத்துவ மணைக்கு புதிதாக கட்டிடம் மற்றும் ஆழ்துளை கிணறு அமைத்துத் தந்தார்.


இவருடைய சாதனைகளைக் கண்டு வியந்த அன்றைய முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் உள்ளத்தில் இடம் பிடித்தார்.


இதன் காரணமாக  கலைஞர் அவர்கள் சட்டமன்ற கொரடாவாக இவரை நியமித்தார்.


தொகுதிக்கு செய்ய வேண்டிய பணிகளை அதிகம் அதிகமாக பெற்று வந்து செய்து கொடுத்த பெருமை அவரையே சாரும்.


அவருடைய செயலாற்றலைக் கண்டு வியந்த முதல்வர் தன்னுடைய கட்சி உறுப்பினராக இல்லாமல் இருந்த போதும்

தொகுதி மக்களின் (செயல் வீரர்) சொல்லின் செல்வர் என்று பாராட்டி, அதற்கு பிரதிபலனாக அவரை திருச்சி பாரதிதாசன் பல்கலை கழகத்தின் செனட் மெம்பராக கலைஞர் நியமித்தார்கள்.


பள்ளபட்டியின் வளர்ச்சிக்கும் தன் தொகுதி வளர்சிக்கும் மிகப்பெரிய பங்காற்றி இன்று வரை தனக்கென்று ஒரு தனிப்பெரும் முத்திரையுடன் தொகுதி மக்களிடையே இன்று வரை வாழ்ந்து மறைந்த பெருமை  இவரையே சேரும்.


31-10-2006 அன்று திடீர் என மாரடைப்பில் இவ்வுலகைவிட்டு பிரிந்து மறுமையை நோக்கி பயனமானார்.


மறுநாள் பள்ளப்பட்டி பொது கபரஸ்தானில் நல்லக்கம் செய்யப்பட்டது.


இன்றும் அரவை தொகுதி கிராமங்களுக்கு நாம் சென்றால் அந்த மக்கள் இஸ்மாயில் அவர்களை நன்றி மறக்காமல்

நினைவு கூறுகிறார்கள்.


பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்.

இதை உண்மை படுத்திய சரித்திர நாயகன். மர்ஹூம் ஹாஜி முஹம்மது இஸ்மாயில் அவர்கள்.


அன்னார் மர்ஹும் அவர்களின் மறுமை வாழ்வை அல்லாஹ் சிறப்பாகி வைப்பானாக.


குறிப்பு:- மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் அவர்களது மகன்  26 ம் வார்டு கவுன்சிலர் சாகுல் ஹமீது அவர்கள் கொடுத்ததின் அடிப்படையில் பதிவு செய்யப்படுகிறது.


▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱

ஆசிரியர்:-

அன்வர் பாஷா அன்வாரி

▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱