▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
ஆம்ஷா ஹாஜியார் அவர்கள்.
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
பள்ளப்பட்டி நகருக்கு பெருமை சேர்த்தவர்
ஹாஜி ஆ.பி.அஹமது ஷா [ஆம்ஷா ஹாஜியார் ]இவர்களது இயர் பெயர் ஆகும்
ஆனால் ஆம்ஷா ஹாஜியார் என்று சொன்னால் உடனே புரிந்து கொள்வார்கள்.
1893 ல் பள்ளப்பட்டியில் பிறந்தவர்
110 ஆண்டுகள் வாழ்ந்து 20:09:2003 ல் காலமாகி பள்ளப்பட்டி பொது கபரஸ்தானில் அடக்கம் செய்யப்பட்டது.
இவர் 110 வயது வரை வாழ்ந்து அதில் பல ஆண்டுகள் நோன்பு நோற்று சாதனை படைத்தவர்.
அகில இந்திய முஸ்லீம் கட்சியின் ஆயுள்கால உறுப்பினராக இருந்தவர்.
பள்ளப்பட்டி பெரிய ஓடை தெருவில் ஹாஜியார் புக் ஸ்டோர் என்ற பெயரில் புத்தககடை நடத்தியவர்.
அப்போது இவரை நாடி வரும் வாடிக்கையார்களிடம் சிறு சிறு சுன்னத்துகளை சொல்லி அதன் படி அமல் செய்ய சொல்வார்.
இவர் பெண்கள் பர்தா விசயத்தில் மிகவும் கண்டிப்பானவர்.அதே போல் தொப்பி அணியாமல் யாரையாவது கண்டால் தடியை எடுத்து அடிக்க வருவார்.
நபி (ஸல்) அவர்கள் மீது அளவு கடந்த பாசம் வைத்து பல லட்சம் சலவாத் ஓதியவர்.
அதே போல் மார்க்க உலக கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து அனைவர்களையும் படிக்க தூண்டியவர்.
தனி மனித ஒழுக்கத்தையும் கற்றுக்கொடுத்து தானும் அதன் படி நடந்தவர்.
இறைவணக்கத்தில் மிகவும் பேணுதலுடன் வாழ்ந்தவர்
பொருள் பட்டம் பதவி ஆசை கொள்ளாதவர்.
முதன் முதலில் திருக்குர்ஆனை தமிழில் மொழி பெயர்த்த அ.க அப்துல் ஹமீது பாகவி அவர்களுக்கு இவரின் சகோதரியை திருமணம் முடித்து கொடுக்கப்பட்டது அந்த வகையில் அ.க. அப்துல் ஹமீது பாகவி அவர்கள் இவருக்கு மச்சார் முறை ஆகிறார்
அதே போல் இந்தியன் யூனியன் முஸ்லீக் முன்னால் தலைவரும் நீண்ட காலம் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த சிராஜுல் மில்லத் அ.க. அப்துல் சமது ஷாஹிபு அவர்களின் தாய் மாமு ஆவர்
இவர் மறைவுக்கு பிறகு இவர்களின் மகன்கள் தொடந்துகடையை நடத்தி வருகிறார்கள் பெயரில் மாற்றம் செய்து சின்னக்கடைவீதியில் மம்மி டாடி என்ற பெயரில் இன்றும் கடை நடத்துகிறார்கள்
அன்னாரின் துவா பரக்கத்தை கொண்டு ஊரின் புகழ்பெற்ற கடையாக விளங்குகிறது.
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
ஆசிரியர்: -
அன்வர் பாஷா அன்வாரி
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱