ᚖᚖᚖᚖᚖᚖᚖᚖᚖᚖᚖᚖᚖᚖᚖᚖᚖᚖᚖᚖᚖᚖᚖᚖᚖᚖᚖᚖᚖᚖᚖᚖᚖᚖᚖᚖᚖᚖ

மண்ணின் மைந்தர் மெஹ்பூப் அலி

ᚖᚖᚖᚖᚖᚖᚖᚖᚖᚖᚖᚖᚖᚖᚖᚖᚖᚖᚖᚖᚖᚖᚖᚖᚖᚖᚖᚖᚖᚖᚖᚖᚖᚖᚖᚖᚖᚖ


பல நூற்றாண்டுகள் மிக்க பாரம்பரிய மிக்க பள்ளப்பட்டியில் ஒவ்வொரு கால கட்டங்களிலும் பல ஆளுமைகள் தோன்றி ஊரின் தேவைகளுக்காகவும் சமூக சேவைகளுக்காகவும் ஊர் ஒற்றுமைக்காவும் குரல் கொடுத்து ஊரின் கவுரவத்தை காப்பாற்றி வந்துள்ளார்கள் .


அதே வரிசையில் சமீப காலங்களில் பல சமூக சேவையளார்கள் இருந்தாலும்.

ஊர் நலன் சார்ந்த பல பிரச்சனைகளுக்கு தலைமை தாங்கி செயல் படுத்தி அதில் வெற்றியும் கண்ட.மதிப்புக்குறிய ஹாஜி மெஹ்பூப் அலி அவர்கள்.


ஹாஜி மெஹ்பூப் அலி அவர்கள் தன் தாய் தந்தையர்களுக்கு தலை மகனாக பிறந்தார்.

அதன் பிறகு அவருக்கு சகோதரி ஒருவர் பிறந்தார்.


ஹாஜி மெஹ்பூப் அலி அவர்கள் சிறு வயதாக இருந்த சமயத்தில் அவரின் தகப்பனார் காலமாகி விட்டார் குடும்ப பாரம் இவர் தலை மீது விழுந்தது சிறு வயதிலேயே தந்தையை இழந்து ஏழ்மையிலும் நேர்மையை கடைபிடித்து முதலாளிக்கு விசுவாசமாக நடந்து படிப்படியாக முன்னேறி நமதூரின் கண்ணியத்தையும் பாரம்பரியத்தையும் பாதுகாக்க பாடுபட்டவர்.


குடும்பத்தை காப்பாற்றி தன் சகோதரிக்கும் திருமணம் செய்து வைக்கவேண்டும் அதற்காக பொருளாதாரத்தை தேடி மதிப்பிற்குறிய J.S.S என்று அழைக்கப்படுகிற அன்னார் அவர்களின் கடைக்கு கீழ் மட்ட வேலைக்காரராக சம்பளத்திற்கு சென்றார்.


துடிப்பு மிக்க இலைஞராக திகழ்ந்த மெஹபூப் அலி அவர்கள் தன் திறமையை கொண்டு முதலாளிகளுக்கு நேர்மையான முறையில் உழைத்தார்.


இவர் எந்த காரியத்தை செய்தாலும் வெற்றி பெற்று வந்து முதலாளி யின் நம்பிக்கைகுறியவராக திகழ்ந்து படிப்படியாக முன்னேற்ற படிகளில் ஏறத்துவங்கினார்.


அரசு சம்பந்த பட்ட எந்த வேலையாக இருந்தாலும் தைரியமாக சென்று காரியத்தை சாதித்து வந்து முதலாளி களுக்கு  துணையாக இருந்தார்.


இதன் காரணமாக முதலாளியின் அருகிலேயே வலம் வந்து முதலாளிக்கு பல கடைகளை திறந்து அதிக அளவில் பொருள் சேர்த்த பாடு பட்டார்.


நாளைடைவில்  பல கடைகளுக்கு நிர்வாகியும் ஆனார்.


அவருக்கு கீழ் பணிபுரியும் ஆட்களை கண்ணியத்துடனும் அவர்களின் தேவைகளை நிறைவு செய்வதிலும் அதிகம் கவனம் செலுத்துவார்.


காரணம் தானும் அடிமட்டத்தில் இருந்து வந்தவர் அதன் வேதனைகளை புரிந்தவர்.


பலநூறு பேர்கள் அவருக்கு கீழ் பணிபுரிந்தாலும் அனைவர்கள் பெயரையும் நினைவில் வைத்து பெயர் சொல்லிக்கூப்பிடுவார்.


மேலும் அவர் தன்னிடம் பணிபுரிபவர்களை பணியாளாக நினைக்காமல் தன் சகோதரனாகவும்  நண்பராகவும் நினைத்து பழகுவார்.


அவரிடம்பணிபுரிந்த அனைவர்களும் நல்ல பழக்கங்கள் பழகி இன்று நல்ல நிலையில் வலம் வருகிறார்கள்.


அவர்கள் வீட்டு விசேஷங்களுக்கு அழைத்தால் தானே முன் நின்று அந்த விசேஷத்தை நடத்தி வைப்பார்.


அவரிடம்பணிபுரிந்த அனைவர்களும் நல்ல பழக்கங்கள் பழகி இன்று நல்ல நிலையில் வலம் வருகிறார்கள்.


மேலும் இவர்  தப்லீக் ஜமாத் மூலமாக ஆன்மீகத்தில் அதீத ஈடுபாடு உள்ளவராக இருந்து பல சுய வேலைகளுக்கு நடுவே பல நாட்கள் ஜமாத் செல்லும் வழக்கமுடையவராகவும் இருந்தார்.


நமதூரின் பொது சேவைகளுக்கு நேரம் காலம் பார்க்காமல் வேலையும் செய்பவர்.

நமதூரின் கண்ணியத்தையும் பாரம்பரியத்தையும் பாதுகாக்க பாடுபட்டவர்.


அல்ஹீரா பைத்துல்மால் என்ற அமைப்பை உருவாக்கி அதன் தலைவராக இருந்து குர்பானி தோல்கள் வசூல் செய்தும் கூட்டுக்குர்பானி மூலமும் பொருள் ஈட்டி ஏழை மாணவ மாணவிகள் படிப்பு செலவை ஏற்று திறம்பட நடத்தினார்.


ஊரின் நலன் சார்ந்த எந்த பிரச்சனையாக இருந்தாலும் அரசை அணுகி பெற்றுத்தந்தார்.


அவரின் கம்பீர தோற்றமும்

கணீர் குரலும் பேச்சுத்திறமையும்

அழகிய முகஅமைப்பும் அவருக்கு எதிரே பேசுபவர்கள் மனதை மாற்றி இவர் வைக்கும் கோரிக்கையை நிறைவேற்றுவார்கள்.


இந்த நிலையில் அவர் காலமாவதற்கு ஒரு  ஆண்டுக்கு முன்  நமதூர் ஈத்ஹா மைதானத்தில் ஈத் பெருநாள் அன்று பந்தல் போடுவதில் சில பிரச்சனைகள் ஏற்பட்டது.


அதை சரி செய்ய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் ஊர் மக்கள் சார்பாக ஹாஜி மெஹ்பூப் அலி அவர்கள் தலைமையில் ஒரு கோரிக்கை மனு அளித்தார்கள்.


ஏழ்மையிலும் நேர்மை


இவர் தன் சிறு வயதில் ஒரு தடவை ஹாஜி மஹபூப் அலி அவர்கள் பள்ளி பருவத்தில் படித்துக் கொண்டிருக்கும் வேளையில் கடைவீதிக்கு மீன் வாங்க சென்றிருந்தார்.

மீன் வாங்கிக் கொண்டிருக்கும் வேளையில் மழை பெய்ய தொடங்கி விட்டது.


அதன் காரணமாக அங்கிருந்த அனைவரும் உரிய பணத்தை மீன் வியாபாரியிடம் கொடுக்காமல் கிளம்பி சென்று விட்டார்கள் 

அதேபோல் இவரும் அங்கிருந்து கிளம்பி விட்டார்.


நேராக நடந்த விஷயத்தை முழுவதுமாக தன் தாயாரிடம் சொல்லி இருக்கிறார் உடனே அவரது தாயார் இவரை கூட்டிக்கொண்டு கடைவீதிக்கு அந்த கொட்டும் மழையிலும் சென்று அந்த மீன் வியாபாரியிடம் உரிய பணத்தை கொடுத்து விட்டு வீடு திரும்பி வந்திருக்கிறார்கள். 


அன்று ஆரம்பித்த இவரின் நேர்மை அவர் இறக்கும் வரை யார் பணத்திற்காகவும் ஆசைப்படுவதில்லை.


ஒருமுறை ஷா நகர் கார்னரில் உள்ள இவரது ஜெராக்ஸ் கடையில் இரவு பத்துமணி அளவில் அமர்ந்து இருக்கிறார்.


அப்போது பலத்த மழை பெய்து மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியது.


இந்த நிலையில்  இரவு 10 :30 க்கு ஒரு பஸ் திண்டுக்கல்லில் இருந்து பள்ளப்பட்டி வரும் அந்த பஸ்ஸில் பள்ளப்பட்டி வரும் பயனிகளை எதிர்பார்த்து அமர்ந்து இருந்தார்.


அந்த பஸ்ஸில் நமதூரை சார்ந்த இருவர் வந்து இறங்கினர் அவர்களிடம் இவர் சென்று தன் வசம் உள்ள குடையையும் டார்ச் லைட்டையும் கொடுத்து பத்திரமாக வீடு போய் சேரவும்.


நாளை இதை என் வீட்டில் கொடுத்து விடுங்கள் என்று சொல்லி விட்டு அதன் பிறகு தன் கடையை மூடிவிட்டு வீடு சென்றுள்ளார்.


மனித நேரயத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் மொங்கான் தெரு வார்டு கவுன்சிலராகவும் பணியாற்றினார்.


அப்போது அந்த வார்டில் உள்ள ஏழை மக்களுக்கு அரசு மூலமாக கிடைக்கும் உதவி தொகைகளை எந்த பிரதி பலனும் எதிர்பாராமல் பெற்று கொடுத்திருக்கிறார்.


சில வருடங்களுக்கு முன் சூரத்தில் இவர்கடை இருந்த நேரத்தில் அதே ஊரில் நமதூரார்களின் வேறு ஒரு கடையில் இருந்த பள்ளப்பட்டியை சார்ந்த ஒரு ஏழை வசூல் ஆள் பணிபுரிந்து வந்தார்.


அந்த நபர் திடீர் என சூரத்திலேயே காலமாகிவிட்டார் தகவல் ஹாஜியார் அவர்களுக்கு தெரிந்து இவர்கடையில் பணிபுரிந்த பள்ளப்பட்டி நபர்களை அழைத்துகொண்டு அங்கு சென்று.

தானே ஜனாஸாவை குளிப்பாட்டி கஃபனிட்டு சந்தூக்கில் தூக்கி சென்று அடக்கம் பன்னி விட்டு இரண்டு கண்களிலும் கண்ணீர் வர அழுது துவா கேட்டுவிட்டு (இறந்தவர்களின் உறவினர்கள் கூட அந்த அளவு அழுது இருக்கமாட்டார்கள்)

இறந்தவர்களின் உறவினர்களுக்கு தீதார் கிடைக்கவில்லையே என்று தன் கடை ஆட்களிடம் வேதனையுடன் சொல்லி வந்தார்

 

ஹாஜி மர்ஹும் மெஹ்பூப் அலி அவர்களுக்கு 1980 ல் திருமணம் நடந்தது.


அப்போது நாகூர் ஹணீபா அவர்களின் பாட்டுக்கச்சேரிக்கு ஏற்பாடு செய்திருந்தனர் அந்த திருமணத்தில் கலந்து கொள்ள வடநாட்டில் இருந்து மெஹ்பூப் அலி அவர்களின் நண்பர்கள் பல பேர்கள் வந்திருந்தனர்..


அவர்கள் பாட்டுக்கச்சேரியை ரசித்துக்கொண்டு இருக்கும் போது நாகூர் ஹணீபா அவர்கள் தான் பாடி புகழ் பெற்ற யா துணியா மே ரக்குவாலி என்ற உருது பாடலை பாடினார்...


அதை கேட்டு ரசித்த வடநாட்டு நண்பர்கள் மகிழ்சி அடைந்து நாகூர் ஹணீபா அவர்களுக்கு அதே மேடையில் பல ஆயிரம் ரூபாய்களை நன்கொடையாக வழங்கி தங்கள் மகிழ்சியை வெளிப்படுத்தினார்கள்.


அடுத்து மெஹ்பூப் அலி அவர்கள் 1984 முதல் முஸ்லீக் லீக் கட்சியில் இனைந்து பல சேவைகளை செய்தவர்..


முஸ்லீம் லீக் தலைவர் அ.க. அப்துல் சமது அவர்களின் நெருக்கத்தை பெற்று நமதூருக்கு பல சேவைகளை செய்தவர்.


முஸ்லீக் லீக்கில் அவர் வகித்த காலம் முதல் கடைசிவரை அணி மாறாமல் தொடர்ந்து அதே கட்சியில் இருந்து தன் கடைசி காலத்தில் முஸ்லீம் லீக்கின் கரூர் மாவட்ட செயலாலராக பதவி வகித்தார்...


அவர் முஸ்லீம் லீக்கில் இருந்து கட்சியை பல படுத்தவும் உறுப்பினர்களை அதிகப்படுத்தவும் தொடர்ந்து பாடுபட்டார்...


இதன் மூலம் கட்சிக்கு நல்ல பெயர் கிடைத்தது..


மஞ்சவலி கலீலூர் ரஹ்மான் அவர்கள் முஸ்லீம் லீக் சார்பாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டபோது அவர் வெற்றிக்காக தொகுதி முழுவதும் சுற்றுப் பிரயானம் செய்து அவர் வெற்றி பெற முக்கிய பங்கு வகித்தார்.


ஹாஜி மர்ஹும் மெஹ்பூப் அலி அவர்கள்..


தான் வேலை செய்த முதலாளிக்கும் நமதூருக்கும் தான் சார்ந்த கட்சிக்கும் மிகவும் விசுவாமாக நடந்து நல்லபெயரை சம்பாதித்த ஹாஜியார் அவர்களை தீடீர் என இறைவன் தன் பக்கம் அழைத்துக்கொண்டான் [ இன்னாலில்லாஹி...] அவர் மரணம் ஊர் மக்களுக்கு பேரிழப்பாக கருதப்பட்டது..


நாணயத்திற்கு இரு பக்கம் இருப்பது போல் இவரின் கொள்கைகளை பிடிக்காதவர்களும் ஒரு சிலர் இருந்தனர்.


ஹாஜியார் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து அவர்களும் தீதார் பார்க்க வந்து இவர் இன்னும் சில காலங்கள் வாழ்ந்து இந்த ஊருக்கு சேவை செய்து இருக்கலாம். 


நல்ல மனிதரை இந்த ஊர் இழந்து விட்டதே.

ஆனால் அல்லாஹ்வின் நாட்டப்படி மறைந்து விட்டார் என்று மனது வேதனையுடன் இவரது சேவைகளை நினைவு கூர்ந்தார்கள்


இவர் பள்ளப்பட்டியில் பிறந்து கடந்த கொரானா காலத்தில் மாரடைப்பில்  இறந்து பொது கபரஸ்தானில் அடக்கப்பட்டுள்ளார். 

▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱

ஆசிரியர்:-

அன்வர் பாஷா அன்வாரி

▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱