✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠

அஹது ஹஜரத் அவர்கள்

✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠


பள்ளப்பட்டியில் வாழ்ந்து மறைந்தவர்களின்  பட்டியலில் அஹது ஹஜரத் அவர்களுக்கு தனி இடம் உள்ளது.


காரணம் 1987 ல் பள்ளப்பட்டியில் திருக்குர் ஆன் மாநாடு நடத்த மிகவும் பங்கு எடுத்தவர்.


இவர்களின் முழு பெயர் ஹாஜி மௌலானா

அப்துல் அஹது பாகவி ஆகும்.


இவர்கள் 1926 ல் பிறந்து வேலூர் பாக்கியாத்துல் ஸாலிஹத் அரபிக்கல்லூரியில் படித்து ஹாஃபில் ஆலீம் பட்டம் பெற்றவர்கள். 


சேலம் நூருல் இஸ்லாம் அரபிக்கல்லூரியை நிறுவ அடித்தளம் இட்டவர்.


பிறகு பள்ளப்பட்டி மக்தூமியா அரபிக்கல்லூரியில் இனைந்து பணியாற்றி

1986 ல் பள்ளப்பட்டியில் திருக்குர்ஆன் மாநாடு நடத்தி சிறப்பு மலர் வெளியிட்டவர்.


இதை தவிர பெரிய பள்ளிவாசலில் முக்கிய பொருப்பு வகித்து பள்ளிக்கு பல சேவைகள் செய்தவர்.


பள்ளப்பட்டி ஜமாதுல் உலமா சபையின் தலைவராகவும் செயல் பட்டவர்.


அகில இந்திய முஸ்லீக் கட்சியின் மாவட்ட செயளாலர் ஆக இருந்தவர்.


இவர் 1987 ல் வெளியிட்ட திருக்குர்ஆன் மலர் காலத்தின் சுழற்சியால் அழிந்து விட்டது ஒரு ஒரு புத்தகம் சிதைந்த நிலையில் கிடைத்தது அதை பிரிண்ட் அவுட் எடுத்து பாதுகாக்கப்பட்டுள்ளது.


சேலத்தில் வாழ்ந்து 2001 காலமானார்.

▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱

ஆசிரியர்:-

அன்வர் பா ஷா அன்வாரி

▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱