✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯

மௌலானா மௌலவி ஹாபீஸ் மர்ஹும் ஹாஜி K.M ஷாகுல் ஹமீது பாகவி[ரஹ்] அவர்கள்.[ கம்பத்து ஹாபிஸ்ஸா ஹஜரத் ]

✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯


ஷா நகர் அல் மதரஸத்துல் புர்ஹானியா ஹிப்லு தஜ்வீத் கலைக்கூடம் மதரஸா நிறுவனர்.


மௌலானா மௌலவி ஹாபீஸ் மர்ஹும் ஹாஜி K.M ஷாகுல் ஹமீது பாகவி[ரஹ்] அவர்கள்.


அழகிய குரல் வளம் மிக்கவர் அனைவர்களிடமும் அன்போடு பழகக்கூடியவர் பள்ளப்பட்டி மக்களால் கம்பத்து ஹாபீஸ்ஸா என்று மதிப்போடு அழைக்கப்பட்டவர் மார்க்கத்தின் ஆரம்ப கல்வி முதல் உயர் கல்வி ஹாபீஸ் வரை போதிக்ககூடியவர்.


ஆரம்ப காலத்தில் தெற்கு தெருவிலும்.

பிறகு புளியமரத்தெரு பழைய போஸ்ட் ஆபீஸ் இருந்த வாடகை இடத்திலும்.

மதரஸா நடத்தி 1976ல் ஷா நகர் பள்ளி அருகே இடம் வாங்கி 1978 முதல்

அல் மதரஸத்துல் புர்ஹானியா ஹிப்லு தஜ்வீத் கலைக்கூடம் என்ற பெயரில் மதரஸாவை நடத்தி வந்தார்.


மர்ஹூம் கம்பத்து மௌலானா ஷாஹுல் ஹமீது ஹள்ரத் [ரஹ்] அவர்கள் கிழக்கு பள்ளியில் மிகச் சிறப்போடு பணியாற்றினார்கள் கிழக்கு பள்ளியில் டிப்ஸ் ஹஜரத் அவர்களுடன் இனைந்து இமாமத் பணி செய்தார்.


ஹாபீஸ் பட்டம் வாங்கி காஃரியாகவும் திகழ்ந்த ஹஜரத் அவர்கள் கிழக்கு பள்ளியில் ரம்ஜான் நேரத்தில் தராவீஹ் தொழுகை நடத்துவார் தராவீஹ் தொழுகையில் குர் ஆனை தன் இனிமையான குரலில் மிக அழகாக ஓதி தொழவைப்பார்.


முன்பெல்லாம் ரம்ஜான் முதல் பிறை தெரிந்தவுடன் பள்ளியில் இருந்து மக்கள் கூட்டமாக ஜமாத்தாக ஹஜரத் அவர்கள் இல்லம் சென்று கண்ணியப்படுத்தி.

தராவீஹ் தொழுகை நடத்த வாருங்கள் என்று வேண்டுகோள் விடுத்து.

வீட்டில் இருந்து பள்ளிக்கு கண்ணியத்துடன்  அழைத்து வருவார்கள்.


அப்படி அழைத்து வரும் போது சிறுவர்களும் பெரியவர்களும்  ரோட்டில் பைத் ஓதிக்கொண்டே ஹஜரத் அவர்களை அழைத்து வருவார்கள்.


(குர்ஆனை மனனம் செய்த ஹாபீஸ்களை தராவீஹ் தொழ வைக்க கண்ணியப்படுத்தி அழைத்து வரும் வழக்கம் இன்று இல்லாமல் போய் விட்டது)


அதை ஏற்று ஹஜரத் அவர்கள் மக்கள் சூழ கூட்டத்துடன் பள்ளி வந்து முப்பது நாளும் தன் இனிமையான குரலில் ராகமாகவும் நிறுத்தி நிதானமாகவும் குர் ஆனை ஓதி தராவீஹ் தொழுகை நடத்துவார்.


லைலத்துல் கதிர் இரவு அன்று குர் ஆனை ஓதி ஹத்தம் முடித்த பிறகு பள்ளியின் சார்பாக பொண்ணாடை போற்றியும்.

ஹதியாவாக ஒரு தொகையும் கொடுத்து.

மக்கள் மத்தியில் ஹஜரத் அவர்களை கண்ணியப்படுத்துவார்கள்.


இவை மட்டுமல்லாமல் தொழ வந்த மக்களும் ஹஜரத் அவர்களுக்கு தங்களால் இயன்ற ஒரு தொகையை வரிசையாக வந்து ஹதியா செய்வார்கள்.


தராவீஹ் தொழ வைக்க இவ்வளவு தொகை வேண்டும் என்று பேரம் பேசாமல் வணக்கம் வணிகமாகக்கூடாது என்று கொடுக்கும் தொகையை ஏற்றுக்கொள்வார்கள்.


இவரின் குரல் இனிமையும் ஹாபீஸ் பட்டமும் இனைந்ததினால் மக்கள் இவர்களை ஹாபீஸ்ஸா ஹஜரத் என்றே அழைப்பார்கள்.


இன்று எத்தனையோ ஹாபீஸ்கள் நமதூரில் உருவாகி இருந்தாலும் ஹாபீஸ்ஸா ஹஜரத் என்று சொன்னால் இவர்களையே குறிக்கும்.


பல மாணவர்கள் அவரிடம் ஓதி இன்று ஹாபீஸ்ஸாகவும் ஆலீமாகவும் வலம் வந்து அன்னார் அவர்களுக்கு பெருமை சேர்க்கிறார்கள்.


குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவர்களை பிடித்த முஸீபத்துகள் நீங்க ஓதியும் பார்ப்பார்கள் ஹஜரத் அவர்கள் ஓதிப்பார்த்தால் எப்படிப்பட்ட முஸீபத்துகளும் விரண்டோடி விடும்.


ஹஜரத் அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் பல ஜின்களை வைத்து இருந்தார்கள் என்றும் சொல்லப்படுகிறது.


ஹஜரத் அவர்கள் ஹயாத்தாக இருந்த நேரத்தில் பல மாணவர்களுக்கு பாடம் சொல்லித் தருவார்கள் பெரும் பாலும் மஃரீப்புக்கு பிறகு அதிகமான மாணவர்கள் தரையில் அமர்ந்து பாடம் பயில்வார்கள்.


அப்பகுதி முழுவதும் குர் ஆனின் ஓசை எதிரொலிக்கும்.


இரவு நேரத்தில் திடீர் என மின்சாரம் தடை பெற்றால் அதை சமாளிக்க ஒரு லாட்டீன் விளக்கை எரிய வைத்து உயரமான ஜன்னலில் வைத்து விடுவார்.


மின் தடை ஏற்பட்டால் அங்கு அமர்ந்து இருக்கும் மாணவர்களை அந்த ஜன்னலில் இருக்கும் லாட்டீன் விளக்கை எடுங்கள் என்று கட்டளையிடுவார்.


அமர்ந்து இருக்கும் மாணவர்களும் எழுந்து அந்த விளக்கை எடுத்து ஹஜரத் அவர்கள் அருகே கொண்டு சென்று வைப்பார்கள்.


இந்த நிலையில் ஒரு நாள் திடீர் என மின் தடை ஏற்பட்டது வழக்கம் போல் ஹஜரத் அவர்களும் விளக்கை எடுக்க மாணவர்களுக்கு கட்டளையிட்டார்.


அதில் உக்கார்ந்து இருந்த ஒரு மாணவர்.

அதே உக்கார்ந்த நிலையில் இருந்து தன் கையை நீட்டி மிக உயரமாக இருந்த ஜன்னலில் உள்ள விளக்கை எடுத்து ஹஜரத் அவர்கள் அருகே வைத்தான்.


உக்கார்ந்த நிலையிலேயே எழாமல் கையை மட்டும் நீட்டி  உயரமான இடத்தில் இருந்து எடுப்பது இயலாத காரியம் ஒரு மனிதனுக்கு உக்கார்ந்த நிலையில் இருந்து மிக உயரமான இடத்தில் இருக்கு ஒரு பொருளை எடுக்க கையை மட்டும் தேவையான உயரம் வரை நீட்டவும் முடியாது இச்செயல் இயற்கைக்கு மாற்றமானது.


சூல்நிலையை புரிந்த ஹஜரத் அவர்கள் விளக்கை எடுத்த மாணவர் கையை பிடித்து.

தனி அறைக்கு அழைத்து சென்று நீ யார் என்று மிரட்டவும் பயந்து நான் மனிதன் இல்லை இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட ஒரு ஜின் என்று உண்மையைசொன்னது.


[ மனிதர்களையும் ௭ ஜின்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவே அன்றி படைக்கவில்லை. (அல் குர்ஆன் 51:56)


சில உயிரினங்கள் உருமாற்றம் பெரும் தன்மையைப் பெற்றுள்ளதை நாம் அறிவோம் அதே போன்று ஜின்களும் பல வடிவங்களில் உருமாற்றம் பெரும் சக்தியைப்பெற்றதாகும்]


உங்கள் குரல் இனிமையை கேட்டு உங்களிடம் பாடம் கேட்க வந்துள்ளேன் எனக்கு பாடம் சொல்லித்தாருங்கள் என்றது.


எத்தனை நாட்களாக இங்கு வருகிறாய் என்று கேட்டார் பல மாதங்களாக நான் வருகிறேன் என்றது என்னிடம் பாடம் பயில வேண்டும் என்றால் நீ தனிமையில் என்னை அனுகி கேட்டு இருக்கலாம்.


மற்ற மனித மாணவர்கள் சிறுவர்கள் கூட அமர்ந்து எப்படி நீ பாடம் கேட்கலாம் நீ யார் என்ற விபரம் மாணவர்களுக்கு தெரிந்தால் பயந்து விடுவார்களே அதனால் நாளை முதல் உனக்கு தனிமையில் பாடம் சொல்லி தருகிறேன் என்று பாடம் சொல்லித் தந்தார்கள்.


குர் ஆனை மக்களுக்கும் ஜின்களுக்கும்  போதித்த ஹஜரத் அவர்கள்


கடந்த 2000 ம் ஆண்டு இறைவனின் அழைப்பை ஏற்று சொர்க்க பயணம் மேற்கொண்டார் (இன்னாலில்லாஹி....)


அவரிடம் பயின்ற மாணவர்கள் இன்று தமிழக முழுவதும் பரவி இமாமத் பணி செய்து  ஹஜரத் அவர்களுக்கு பெருமை சேர்க்கிறார்கள்.


1978 ல் ஹாபீஸ்ஸா ஹஜரத் அவர்களால் தொடங்கப்பெற்ற புர்ஹானியா மதரஸா

அவர் மறைவுக்கு பிறகும் தொடர்ந்து இன்று வரை இயங்கி பல மாணவர்கள் கல்வி கற்று வெளியேறிக்கொண்டே இருக்கிறார்கள்.


இம் மதரஸா பொது மக்களின் நிதி உதவியை கொண் டே நடைபெறுகிறது.


▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱

ஆசிரியர்:-

அன்வர் பாஷா அன்வாரி

▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱