ஹாஜி வாப்பு நினைவு அரசு மருத்துவமனை
மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்ற நமதூர் ஹாஜி வாப்பு நினைவு அரசு மருத்துவமனை.
ஊருக்குள் நுழையும் போதே கம்பீரமாக நம் கண்ணில் முதலில் தென்படுவது நம் ஊர் ஆஸ்பத்திரிதான்.
நாம் எத்தனையோ முறை அது உருவான வரலாறு கூடத் தெரியாமல் அங்கு சிகிச்சையும் பெற்றிருக்கிறோம்.
இன்று தெரிந்து கொள்வோம்.
ஜனாப் T.M. ஹாஜி வாப்பு ராவுத்தர் அவர்கள் பள்ளப்பட்டியின் பிரபலமான ஒரு பெருந்தகை. பல ஆண்டுகள் பள்ளப்பட்டி பஞ்சாயத்து போர்டு சேர்மனாக இருந்து நற்சேவைகள் பல செய்துள்ளார்.
பள்ளப்பட்டி மேற்குத்தெரு பெரிய பள்ளிக்குச் சொந்தமான காலி நிலத்தில் பல வீடுகளைக் கட்டி வாடகை மூலம் பள்ளியின் வருமானத்தை உயர்த்தினார்.
பள்ளியின் வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வந்த "லோக்கல் பண்ட்" ஆஸ்பத்திரி ஊர் மக்களின் தேவைக்குப் போதுமான அளவு இல்லாத குறையைப் போக்க, நல்லதொரு வசதியான கட்டிடத்தை அமைத்து அதன் மூலம் மக்கள் நற்பயன் அடைய வேண்டும் என்பதற்காக இடம் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அல்லாஹ் அவர் வாழ்நாளை முடித்து விட்டான்.
(இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்)
தந்தையின் இந்த உயர்ந்த எண்ணத்தைப் பூர்த்தி செய்வதற்காக அவரின் மகன்களாகிய ஜனாப் T.M.V. ஹாஜி அப்துல் அஜீஸ், T.M.V. ஹாஜி அப்துல் மஜீது ஆகிய இருவரும் பொதுப்பணியில் தங்கள் பொருளையும் வாழ்நாளையும் தியாகம் செய்தவர்கள்.
மற்ற சகோதரர்கள் ஆதரவிலும், ஊர் மக்களுக்கும் சுற்றுவட்டார கிராம மக்களுக்கும் என்றும் பயன் தரும் நல்ல தரமான மருத்துவமனையை ஏற்படுத்தத் திட்டமிட்டனர்.
அத்தியாவசியமான கட்டிடங்களைக் கட்டத் தீர்மானித்தபோது சேலாதி ராசப்பா ராவுத்தர், ஊக்கர் காதர்பாட்ஷா ராவுத்தர், ஊக்கர் ஜைனுல் ஆபிதீன் ராவுத்தர், பூனைக்கண்ணன் அப்பாஸ் ராவுத்தர், பூனைக்கண்ணன் யாக்கூப் ராவுத்தர் ஆகியோருடன் நெருங்கிய உறவினர்களும் இதில் பங்கு பெற ஆர்வம் செலுத்திப் பொருளுதவி செய்ய முன்வந்தனர்.
நான்கு ஏக்கர் புறம்போக்கு இடத்தில் ஆஸ்பத்திரி கட்ட ஜில்லா போர்டில் அனுமதியும் பெற்றார்கள்.
திருச்சி ஜில்லா போர்டு தலைவரான உயர்திரு B. வெங்கடாசலம் பிள்ளை B.A., B.L., M.L.A. அவர்கள் தலைமையில் 30.04.1945-ல் அடிக்கல் நாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
மேலும் முழு விவரங்கள் மேலே உள்ள வீடியோவில் உள்ளன.