பள்ளப்பட்டி வரலாற்று பெட்டகம்
அன்பான என் இனிய நண்பர்களே...
வலிமார்கள் என்னும் இறைநேசர்களை நினைவுகூர்வது என்பது, ஆழ்கடலில் மூழ்கி நல்முத்து எடுப்பதற்கு ஒப்பானது. பேரரசர்களும் வந்து பணியும் வண்ணம் ஆன்மீகச் செங்கோலாச்சிய வலிமார்களின் வாழ்க்கை வரலாறு வெறும் கற்பனையல்ல; அது காலத்தால் அழியாத மெய்க்கதை!
ஒரு சிறு குழந்தை தனது இரு கைகளையும் விரித்து, விரலுக்கு ஒரு மிட்டாய் வீதம் பத்து மிட்டாய்களை எளிதாக எண்ணிச் சொல்லிவிடும். ஆனால், பத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையை அந்தப் பிஞ்சு விரல்களால் எப்படிக் கணக்கிட முடியும்? அல்லாஹ் படைத்த சாதாரண மனிதனின் அறிவும் ஆற்றலும் அந்தச் சிறு குழந்தையின் எண்ணிக்கைக்கு ஒப்பானதுதான்.
ஆனால், தன்னை மனதார நேசிக்கின்ற 'வலிமார்கள்' எனும் இறைநேசர்களுக்கு அல்லாஹ் வரம்பற்ற அருளையும், மனித அறிவுக்கு எட்டாத அற்புத ஆற்றல்களையும் வழங்கியுள்ளான். அதன் வெளிப்பாடாகவே, அவர்களின் வாழ்வில் பல அரிய நிகழ்வுகளும், சாதாரண மனிதர்களால் நினைத்துப் பார்க்க முடியாத அசாத்தியமான அற்புதங்களும் நிகழ்கின்றன.
இந்த மகான்கள் அனைவரும் ஷரீஅத் சட்டதிட்டங்களின் அடிப்படையில் வாழ்ந்ததோடு மட்டுமல்லாமல், அப்பகுதி மக்களுக்கும் நல்வழியை எடுத்துரைத்து, அவர்களையும் சத்தியப் பாதையில் வாழச் செய்த உத்தமர்கள். தாங்கள் சொன்னபடியே வாழ்ந்தும் காட்டியவர்கள்.
அத்தகைய இறைநேசர்களின் புனித வரலாற்றை நமது 'பள்ளப்பட்டி வரலாற்று பெட்டகம்' வழியாகத் தொடர்ந்து ஆவணப்படுத்தி வருகிறோம். அந்த வரிசையில், பள்ளப்பட்டி அருகே அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க காட்டுப்பள்ளி தர்ஹாவின் முழுமையான வரலாற்றையும், அதன் மகிமைகளையும் கீழே உள்ள காணொளியின் (Video) வாயிலாக அறிந்து கொள்வோம்.
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
ஆசிரியர்:-
அன்வர் பாஷா அன்வாரி
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱