☾☽☾☽☾☽☾☽☾☽☾☽☾☽☾☽☾☽☾☽☾☽☾☽☾☽☾☽☾☽☾☽
தங்கள் ஹஜரத் என்ற மௌலானா மௌலவி ஷெய்கு அப்துல் மஜீத் காதிரி அவர்கள்.
☾☽☾☽☾☽☾☽☾☽☾☽☾☽☾☽☾☽☾☽☾☽☾☽☾☽☾☽☾☽☾☽
தங்கள் ஹஜரத் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம்
பள்ளப்பட்டியில் அடங்கியிருக்கும் ஷாஹ் ஷெய்கு அப்துல் காதிர் வலியுல்லாஹ் அவர்களின் பேரராகிய மௌலானா ஷைய்கு அப்துல் அஜீஸ் காதிரி [புது ஷாஹிபு]அவர்களின் மூத்த மகனாக பிறந்தவர்கள் தான் தங்கள் ஹஜரத் என்ற மௌலானா மௌலவி ஷெய்கு அப்துல் மஜீத் காதிரி அவர்கள்.
கி.பி. 1865 ஆம் ஆண்டு பள்ளப்பட்டியில் பிறந்து தன் தந்தைஇடத்திலேயே ஆரம்பக்கல்வி பயின்றார்.
பின்னர் ஆம்பூரிலும் இறுதியில் வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்திலும் உயர் கல்விகளை உன்னதமுறையில் பயின்று தேர்ச்சி பெற்று தன் தாயகம் திரும்பினார்.
முதன் முதலில் காரைக்காலில் மதரஸத்துல் காதிரியாவில் 14 ஆண்டுகள் அரபி பேராசியராக பணி செய்தும் அதற்கு பின்
உத்தமபாளையத்தில் 5 ஆண்டுகள் அதே பணியை மேற்கொண்டிருந்தும் அரிய முறையில் தொண்டாற்றினார்கள்.
பின்னர் தென்னாடெங்கும் சுற்றுப்பிரயானம் செய்து மார்க்க பிரச்சாரம் செய்வதிலேயே தங்கள் வாழ்நாள் அனைத்தையும் அர்ப்பணித்தார்கள்.
திருச்சி ஜில்லா ஜமீ அத்தே உலமாயே-- இஸ்லாத்தின் கௌரவ தலைவராகவும் இறுதிவரை இருந்தார்.
அவர்களுடைய தூய உபதேசத்தால் பல்லாயிரகணக்கான மக்கள் நேர் வழிபெற்றதுடன் கல் மனத்தவர்களும் நேர்வழி பெற்றனர்.
தங்கள் ஹஜரத் அவர்களுடைய முரீதுகளாக திகழ்ந்தவர்கள் எனக் குறிப்பிடதக்கவர்கள் பலர் இருந்தாலும்.குறிப்பாக காரைக்கால் தம்பி சாகிப் மரைக்காயர் குடும்பத்தினரையும்.தென்காசி சற்குன மருத்துவச்சாலை முதலாளி குடும்பத்தினரையும்.சென்னை ஜமால் முஹம்மது குடும்பத்தினரையும்.இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் முஹம்மது இஸ்மாயில் ஸாகிப் குடும்பத்தினரையும்.
சி. எச். சிப்கத்துல்லாஹ் ( முன்னால் மேயர்) குடும்பத்தினரையும்.இடைய கோட்டை கே.பி.வி.எஸ். பரம்பரையினரையும்.
தலைச்சேரி டி.எம். மொய்தூ பரம்பரையினரையும்.குறிப்பிட்டுத்தான் ஆக வேண்டும்.
கம்பம்.உத்தமபாளையம்.சித்தையன் கோட்டை.மலபார்.சென்னை. முதலிய பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான முரீதுகள்
( சிஷ்யர்கள்) இவருக்கு உண்டு...
கள்ளிக்கோட்டை
பி. எம். ஆற்றக் கோயாத்தங்கள் நம் தங்கள் ஹஜரத் அவர்களின் நெருங்கிய நன்பரும் பிரியமானவருமாவார்.
எல்லா ஊர்களிலும் முரீதுகள் இருந்தது போல் தன் தாயகம் பள்ளப்பட்டியிலும் அதிக மான முரீதுகள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தங்கள் ஹஜரத் அவர்களுடைய கல்வியின் உயர்வையும் இறுதிவரை இறை ஞானத்தில்
(தஸவ்வுப்)பெற்றிருந்த மகோன்னத ஞானப்பெருக்கையும் குறிப்பிடவேண்டும் என்றால் பேசுகின்ற மஸ்னவி ஷரீபாகவும்.
முழங்குகின்ற கௌது நாயக மான்மியமாகவும் ஆஷிக்கின்ற ஆஷிக்கே ரசூலாகவும்.அல்லாஹ்வின் பரிபூர்ண அடிமையாகவும் இருந்தார்கள்.
சென்னை மாகாணத்திலேயே ஹஜ்ரத் அவர்கள் தான் (தஸவ்வுப்) ஆத்மீகக்கல்வியைப் பரப்பிக்கொண்டிருந்தார்கள் என்று சுருக்கமாக கூறலாம்.
ஹஜரத் அவர்கள் ஹக்கை (உண்மையை) எடுத்துக்கூறுவதில் நிகரில்லாப் பெருமையுடையவர்கள்.
அழகிய குரலும்.ஆழமாக பேசும்.
ஞானமும் மக்களை ஈர்த்தன இரவு நேரங்களில் இறைவனை தொழுவதிலும் அவன் படைப்பினங்களை சிந்திப்பதிலும் தான் ஆனந்தம் கொண்டார்கள்.
சஹாபாக்கள். அன்பியாக்கள். அவ்லியாக்களின்.புகழ் பேசும் கவிகளையும்.அல்லாஹ்வின் அச்சத்தை நினைவூட்டும் பைத்துகளையும் மனனம் செய்திருந்தார்கள்.
சுருக்கமாக சொல்வதென்றால் அவர்களை.
ரப்பானி -- ஆஷிக்கே ரசூல் ஆஷிக்கே ஜைலானி என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும்.சென்னை மாகானத்தில் பல இடங்களில் இடங்களில் ஹஜரத் அவர்களின் காதிரியா தரீக்கா முரீதுகள் இருக்கிறார்கள்.
அவர்களின் ஐந்து புதல்வர்களில் இருவர் மௌலவி பட்டம் பெற்று மார்க்க சேவையில் ஈடுபட்டிருக்கிறாகள்.
90 ஆண்டுகள் ஜாதுத்தக்வா என்னும் மறுலோக நண்மைகளை சேர்த்துக்கொண்டு 26:6:55 ஞாயிற்றுக்கிழமை காலை 10:20 மணிக்கு இறையடி சேர்ந்தார்கள் (இன்னாலில்லாஹி..)
மறுநாள் 27:6:55 காலை 9 மணிக்கு அவர் ஜனாஸா பள்ளப்பட்டி நகரை சுற்றி.
இறுதியாக ஈத்காஹ் மைதானத்தில்.
பல்லாயிர மக்கள் சூழ அவர்களிடம் முரீது வாங்கியவர்கள் முன்னிலையிலும் இவர்களின் பாட்டனார் ஷைய்கு அப்துல் காதிர் வலியுல்லாஹ் ஹஜரத் தர்ஹா ஷரீப்பில் பகல் 11 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட்டது.
சில வருடங்கள் கடந்தன.
1960ல் ஒரு நாள் இவர்கள் அடக்கப்பட்ட இடத்தை சுத்தம் செய்து பூசி முழுக ஏற்பாடுசெய்யப்பட்டு கபரை சரிசெய்யும் போது கபர் தானாக திறந்தது.
இவர்களின் பொன்னூடல் எப்படி அடக்கப் பெற்றதோ அப்படியே இருப்பதை பார்த்து
அனைவர்களும் ஆச்சரியப்பட்டு.ஊர் பொது மக்கள் அனைவர்களும்.மறு தீதார் பார்த்து.
அதே இடத்தில் மறுபடியும் அடக்கம் செய்து.
கபரை எடுத்துக் கட்டி பச்சை கலர் பெயின்ட் அடித்தார்கள்.
அன்னாரின் அடக்கஸ்தளம்
தர்ஹா வளாகத்தின் மேற்கு பகுதியில் பச்சை கலர் பெயிண்ட் அடித்த நிலையில் இன்றும் காணலாம்.
இந்த நிலையில்.
அன்னார் அவர்களின் அடக்கஸ்தளத்தின் கால் மாட்டு பகுதியில் சுமார் ஒரு அடி குழி தோன்றி அதன் கீழே இருக்கும் மண்ணை சாப்பிட்டால் நாட்டு சக்கரையை சாப்பிட்டது போல் இனிப்பாக இருக்கும்.
ஆரம்ப காலத்தில் சிறிது குழி தோன்றினாலே அந்த மண் இனித்தது ஆனால் இப்போது சுமார் ஒரு அடி ஆழம் தோன்றினால் இனிப்பு மண் கிடைக்கிறது..
அது இன்று வரை நிகழ்கிறது ஆனால் இந்த அற்புதம் யாருக்கும் தெரியாது..
இதுபோல் பல அற்புதங்கள் அந்த வளாகத்தில் தினமும் நடக்கிறது அதை வெளியில் சொல்லமுடியா து.
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
ஆசிரியர்:-
அன்வர் பாஷா அன்வாரி
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱