◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘
தேவ் பந்த் ஹஜரத் கிப்லா அவர்கள்
◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘
நம் பள்ளப்பட்டி மாநகருக்கு புகழ் சேர்க்கும் உலமாக்களில் குறிப்பிடத்தக்கவர்....
தேவ்பந்த் ஹஜரத் கிப்லா அவர்கள் இவர்களின் இயற்பெயர்.மௌலவி
என்.எம். முஹம்மது இப்ராஹீம் ஹஜரத் அவர்கள்.
ஹகீம் என். என். நூர் முஹம்மது ராவுத்தர் அவர்களின் புதல்வராக 1916-ம் ஆண்டு பிறந்து தன் 10 வயதிலேயே மார்க்க கல்வியும் உலக கல்வியும் கற்று பள்ளப்பட்டி நைனா முஹம்மது ஹஜரத் அவர்களின் முயற்சியாலும் ஆதரவாலும் மேற்கு மதரஸாவில் அரபி ஹஜரத்அவர்களிடம் அரபி கல்வியை 4 ஆண்டுகள் கற்று 1930ஆம் ஆண்டு தாய்கல்லூரி பாக்கியத்தில் உயர் கல்வியை கற்க செய்து 1934 வரை பாக்கியாத்திலும் அதன் பின் மூன்றாண்டுகள் தேவ்பந்த் தாருல் உலூமிலும் உயர் கல்வி பட்டம் பெற்று மௌலானா ஹூசைன் அஹமது மதனி (ரஹ்) அவர்களின் நன்மதிப்பை பெற்று நெருக்கமான சிஷ்யரானார்கள்.
1937 லிருந்து தொடர்ந்து 1943 வரை தாய்கல்லூரி பாக்கியாத்தின் பேராசியராக பொறுப்பேற்று சீரிய முறையில் பணியாற்றி அன்றைய பாக்கியாத்தின் முதல்வர் மௌலானா அப்துல் ரஹீம் ஹஜரத் அவர்களின் அன்புக்கு பாத்தியம் பெற்றார்கள்.
பாக்கியாத்தில் பணியாற்றிய காலத்தில் பாக்கியாத் பள்ளியில் இமாமாக பொருப்பேற்று தங்களால் இயற்றபட்ட குத்பா பேருரையை நிகழ்தியதன் மூலம் அவ்வூர் மக்களின் நன்மதிப்பை பெற்றார்.
அரபி மொழியிலும்.பார்சீ மொழியிலும். கவித்திறன் பெற்று பாக்கியாத்தின் பேராசிரியகளாலும் ஊர் மக்களாலும் பாராட்டை பெற்றார்கள்..
ஹில்மி.
என்ற புனைப்பெயரில் அரபி மொழியில் நூற்றுக்கணக்கான கவிதைகளை இயற்றி இருக்கிறார்....
பாக்கியாத்தில் பணியாற்றிய காலத்திலேயே தங்களின் மதிப்பிற்குரிய ஆசிரியப் பெருந்தகை பள்ளப்பட்டி அரபி ஹஜரத் அவர்களின் மகளை 1939ல் துணைவியாக பெற்றார்கள்..
பாக்கியாத்தில் பணியாற்றிய ஆறாண்டுகளில் அன்றைய பாக்கியாத் நூலகத்தில்இருந்த மொத்த கித்தாபுகள் 12000 ல் 6000 கிதாபுகளை ஹஜரத் அவர்கள் முதாலஆ--- ஆய்வு செய்துள்ளார்கள்.....
எந்த நேரமும் கிதாபுகளை ஆய்வு செய்வதிலேயே கழிப்பார்கள்.
ஷைகுனா ஹஜரத் ( ரஹ்) அவர்கள் இவரை
கிதாபு பூச்சி என்றே அழைப்பார்கள்.....
ஹஜரத் அவர்களின் மாணவர்கள்.
மௌலானா சையித் அப்துல் ஜப்பார் ஹஜரத் பாக்கியாத்தின் முஃப்தி மௌலானா பட்டேல் அப்துல் வஹ்ஹாப் ஹஜரத் பேராசிரியர் மௌலானா ரயீஸுல் இஸ்லாம் ஹஜரத் ஆவார்கள்....
ஹஜரத் அவர்கள் பள்ளப்பட்டி வாழ் மக்களிடத்தில் சிறந்த நன்மதிப்பைப்பெற்று தேவ்பந்த் ஹஜரத் என்ற சிறப்பு பெயரிலேயே அனைவராலும் அழைக்கப்பட்டார்கள்..
ஹஜரத் அவர்கள் தங்களின் 53 வது வயதில் 1969 ல் காலமாகி பள்ளப்பட்டி பொது கபர்ஸ்தானில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.
அவர்களுக்கு நான்கு ஆண் மக்களும் நான்கு பெண் மக்களும் இருக்கிறார்கள்...
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
ஆசிரியர்:-
அன்வர் பாஷா அன்வாரி
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱